Peezhai is the word used thiruvalluvar wrt the women in spite of expressions of high value of women; yet, "PEEZHAI" (not pizhai) was used to reveal, there is a difference in the nature of woman. Bharathi is another poet who used this word when describing the fall of women. Where males do not possess the character of refinements, a nation will crumble and they are the words of Arjuna in B G. Hence in those days restrictions on women were enforced which appeared so tough; but today, freedom of equality without restrictions had lead to LIVING TOGETHER AND CONSEQUENCES. Theedhum nandrum pirar thara vaaraa . KR IRS 51125
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Tue, 4 Nov 2025 at 20:38 Subject: Fwd: Sujatha - Perils of Widowhood in Sangam period To: *பல்சான்றீரே! பல்சான்றீரே! - சுஜாதா * சங்க இலக்கியம் முழுவதிலும் ஒரே ஒரு ஐங்குறுநூறுப் பாடலில் மட்டும்தான் தவமிருந்து பெண்ணைப் பெற்றுக்கொண்டதாக ஓர் அரிய செய்தி வருகிறது.பருவமடையும்போது அவள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அழகாக வருணிக்கும் அகநானூறு, அதனால் அவளுக்கு வரப்போகும் கட்டுப்பாடுகளையும் சொல்கிறது. மனைவியை விட்டு பரத்தையை நாடிச் சென்ற ஆண் தண்டிக்கப்பட்டதாகக் குறிப்பில்லை. ஆறாம் நூற்றாண்டில் பெண்களுக்கு மூன்று வகை கற்புகள் சொல்லப்பட்டன. தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்று மூன்று சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டன. தலைக்கற்பு என்பது கணவன் இறந்த செய்தி கேட்ட உடனே மயக்கம் போட்டு இறந்துவிட வேண்டுமாம். இடைக்கற்பு கணவனை எரிக்கும்வரை காத்திருந்து அவனுடன் தழலேறுதல். கடைக்கற்பு என்பது மூன்றாம் தரம். கணவன் இறந்தும் கைம்மை நோன்புடன் உயிர் வாழ்வது. தலையை மழித்துக்கொண்டு தரையில் பருக்கைகளை உண்டு.......... இப்படி, (பல்சான்றீரே.... என்கிற புறநானூற்றுப் பாடலில் இந்தக் கொடுமைகள் விலாவாரியாக சொல்லப்படுகின்றன.) கணவன் உயிருடன் இருந்தபோதும் அப்படியொன்றும் அவள் வாழ்க்கை உவகை கலந்ததாக இல்லை. இல்லையேல் அத்தனைவகை பரத்தையரும் கணிகையரும் ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களும் தேவையில்லை. விறலி, பாடினி, ஆதிமகள், அகவல் மகளிர், கோடியர், முருகுழுமெய்ப்பட்ட புலத்தி, வயிரியர் மாக்கள், துணங்கை ஆடுவோர், கொண்டி மகளிர் இப்படியெல்லாம் விநோதப் பெயர்கள் கொண்ட கேளிக்கைப் பெண்கள்! பரத்தையரில் சேரிப்பரத்தை, பரத்தையர், இற்பரத்தை என்று மூன்று வகையாம். மிக நுட்பமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட நூலில் பெண்கள் நடத்தப்பட்ட விதம் எதுவும் நன்றாக இல்லை. இன்றும், இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இந்தப் பழக்கங்களின் மிச்சங்கள் இருப்பதை சோகத்துடன் உணர்கிறோம். -Sujatha Dear Friends, and now for those who have time and patience and are interested in Tamil literature: *பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு. பாண்டிய நாட்டின் வடஎல்லை ஒல்லையூர் நாடு. அதைச் சோழர் கைப்பற்றிக்கொண்டனர். அதனால் பூதப்பாண்டியன் சோழருடன் போரிட்டு வென்றான்.ஆதலால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனப்பெயர் பெற்றான். இத்தகு சிறப்புடைய பூதப்பாண்டியன் இறந்தான். எனவே அவன் மனைவியான பெருங்கோப்பெண்டு தன் கணவனுடன் தீப்புக முனைந்தாள்.* *அதைக்கண்ட அரசியல் சுற்றத்தாரான சான்றோர் அப்பெருமாட்டியைத் தீயில் புகவேண்டாம் என்று கூறித்தடுத்தனர். அரசன் இல்லாத குறை நீங்க அரசை ஏற்று நடத்திடவேண்டும் என்றனர். * *அவர்தம் கூற்றை ஏற்க அம்மங்கையர்க்கரசிக்கு உடன்பாடில்லை.கைம்மை நோன்பு ஏற்பதையும் அவர் விரும்பவில்லை. தன்னைத் தீப்புக வேண்டாம் எனத்தடுக்கும் சான்றோரிடம் சினம் கொண்டு உரைக்கலானாள்.அதுவே இப்பாட்டு.* *பல்சான்றீரே! பல்சான்றீரே!செல்கெனச் செல்லாது ஒழிகென விலக்கும்பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே!அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்டகாழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாதுஅடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்டவேளை வெந்தை வல்சி ஆகப்பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ!பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்நுமக்குஅரிது ஆகுக தில்ல எமக்குஎம்பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅறவள்இதழ் அவிழ்ந்த தாமரைநள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே. (புறம்:246)* *கருத்து: இப்பாடலில் முதலில் கைம்மை நோன்பு மேற்கொள்ளும் பெண்டிரின் இயல்பு உரைக்கப்படுகின்றது.* *வெள்ளரியின் விதை போன்ற நல்ல மணம் உடைய நெய்யைக் கைம்மை மகளிர் உணவில் சேர்த்துக்கொள்ளார். நீர்ச்சோற்றை வேளைக்கீரையுடனே உண்பர். பருக்கைக் கற்கள் பரப்பப்பட்ட படுக்கையில் பாயின்றிப் படுப்பர். "அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்" என்றால் நீரிலே கிடந்ததால், அதைக் கையால் பிழிந்து இலையில் வைக்கப்பட்ட சோறு என்று பொருள். அடை என்றால் இலை. இந்தச் சோற்றை, வெள்ளை எள்ளுடன் புளி சேர்த்து சமைக்கப்பட்ட வேளைக்கீரையைச் சேர்த்து உண்பர்.* *"இத்தகைய நோன்பு மேற்கொள்பவர்களுள் நான் ஒருத்தி இல்லை. எனக்குக் குளிர்ந்த தாமரைப் பொய்கையும் ஈமத்தீயும் ஒன்றே! எனவே பல குணங்களால் நிறைந்த சான்றோரே!" நின் தலைவனுடன் இறக்க நீயும் செல்க" என்று சொல்லாது, "அதனைக் கைவிடுக" என்று சொல்லித் தடுக்கும் சான்றோரே! நீங்கள் பொல்லாதவர்கள்"என்று கூறி அவர்களைக் கடிந்து கொள்கிறாள்.* *யார் தடுத்தும் கேளாது பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்து உயிர் துறக்கிறாள்.* *Chittanandam* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop%2BP3Rmtqj1K1P1rS9V4PT0KVjqFdogpZU2rhz%3DZbP86Q%40mail.gmail.com.
