3 novels including short story attached as pdf for interested to read; T J R is well known to me as father of my class mate late Saketha raman and who got me my first job in AIR Chennai but later switched over to Incometax Now attachments KR IRS 121125 by-thi-janakiraman.pdf <https://drive.google.com/file/d/1IiwFM_n-JCuzraojPavRrF8MgUzNAcZb/view?usp=drive_web> marapasu-by-thi-janakiraman.pdf <https://drive.google.com/file/d/1S-zkYgiVQ7dIvCCdohKXB8LfVsq7Ulkh/view?usp=drive_web> uyirththen-by-thi-janakiraman.pdf <https://drive.google.com/file/d/1ERWA_J_JlK3dHhCnSdLfKMKeUDmOWVgm/view?usp=drive_web>
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Tue, 11 Nov 2025 at 19:14 Subject: Fwd: T.Janakiraman - Women Characters (6) To: *தி.ஜாவின் கதைப்பெண்கள் வரிசை எண் 6:'காமாட்சி' - சிலிர்ப்பு சிறுகதை - வருடம் 1953. "அந்தப் பெண்ணுக்கு எட்டு ஒன்பது வயசு இருக்கும். மாநிறம். ஒட்டி உலர்ந்த தேகம். குச்சி குச்சியாகக் கையும் காலும், கண்ணை வெளிச்சம் போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது . எண்ணெய் வழிகிற முகம். தூங்குகிறாற்போல் ஒரு பார்வை. கையில் ஒரு கருப்பு வளை"..காமாட்சியை தி.ஜா வர்ணிக்கையில் சில வரிகளில் வாசகர் எளிதாக அவளை உள்வாங்கிக் கொள்ளச்செய்யும் யுத்தி. மேலே எந்த வார்த்தையும் அநாவசியமில்லை. அவள் யார் என்பதைக் கதையைச் சொல்லுமுன்னே நமக்குத் தெரிந்து விடுகிறது.சிலிர்ப்பு கதையைப் பள்ளி படிக்கையில் முதல் முறை வாசிக்கையில் இருதயத்தை யாரோ இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு விடாதது போலிருந்தது. ஏழுவயதுக் குழந்தையை எல்லா வேலையும் வாங்கிவிட்டுக் கால் காசு இல்லாமல் ரெண்டு வேளைச் சாப்பாடு, (அதுவும் பழையது) தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி வாங்கித்தரும் ஜட்ஜ். அவரது மொத்தக் குடும்பத்தின் மீதும் இடிவிழ!காமாட்சியின் கதை அத்துடன் முடியவில்லை. ஜட்ஜின் மச்சினர் வீட்டில் வேலைபார்க்க மாயவரத்திலிருந்து கல்கத்தாவுக்குத் தனியாகப் போகிறாள். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தனியாகப் பத்துவயதுக் குழந்தையை அனுப்பி இருக்கிறார்கள். கடவுள் இருந்தால் காமாட்சிகளை ஏன் படைக்கப் போகிறார்? பெற்ற பிள்ளைக்கு சாப்பாடு கூடப் போட வக்கில்லாத பெற்றோருக்கு குழந்தைகள் எதற்கு?ஜட்ஜின் மச்சினர் வீட்டில் யாரேனும் காமாட்சியை அடித்தாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ அந்தக் குழந்தை என்ன செய்யப்போகிறது? எப்படித் தற்கொலை செய்து கொள்வது என்று அதற்குத் தெரியுமா?- தி.ஜானகிராமன் **********************************சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopqXWqpWiA2%2BhHEzVNcn6Aubt67xYXHdtiKVdBLD004gw%40mail.gmail.com.
