ஒரு திருத்தம். தானம், செய்த கர்ணனின் தானம், மிக சிறந்த தானம். அதை,
கர்ணன் தன்னுடன் தானே எடுத்து சென்று புண்ணிய இடத்தை அடைந்தான்?
GARGA SAMHITA Verse 4.8.45
विधिवद् विधि-हीनं वा
द्वादश्यां दानम् एव च
स्व्-अल्पं वा सु-कृतं गोप्यो
मेरु-तुल्यं भवेच् च तत्
vidhivad vidhi-hīnaṃ vā
dvādaśyāṃ dānam eva ca
sv-alpaṃ vā su-kṛtaṃ gopyo
meru-tulyaṃ bhavec ca tat
O gopīs, when, either following the proper method or not following it, and
whether it is great or small, one gives charity on dvādaśī, that charity
becomes as great as a Mount Meru of charity.
Krishna asked only for the PUNYA of the past and when Karna gave
the PUNYA of the Past, current dhaanam, added to his Punyam. Only when
whole pavam and Punyam are rendered to GOD, Moksha is given from all the
sins (B G) . Because Karna accumulated Punya to Lord, by daanam, In his
next birth, Karna is prophesied to be reborn as the Saivite saint
Siruttontanayanar, a devotee of Lord Shiva. This story comes from the Tamil
tradition, where he is said to have attained moksha by sacrificing his own
son to the god Shiva as an act of devotion.
K Rajaram IRS 261125
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 26 Nov 2025 at 05:47
Subject: Fwd: Tamilnayagam - Villi Baratham (1)
To:
வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம் (1)
*தமிழ்நாயகம் *
(வில்லிபாரதம் வில்லிபுத்தூரார் என்பவரால் வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி
ஏறத்தாழ 500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது. மகாபாரதத்தைச் சுருக்கி பத்து
பருவங்களில்
4351 பாடல்களில் தந்துள்ளார்.)
போர்க்களத்தில், அர்ஜுனனின் அம்பு பட்டு, இரத்தம் பெருக்கெடுக்க, தளர்ந்து
கீழே விழுந்து விடுகிறான் கர்ணன்.
அப்போது, அங்கே வேதியர் வடிவில் வந்த கண்ணன் எனக்கு நீ ஏதாவது தர்மம்
தரவேண்டும் என்று கேட்கிறான்.
அப்போது, கர்ணன் அந்த வேதியரிடம் ஒரு வரம் கேட்கிறான்.
"நான் இதுவரை என்னிடம் வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று
சொல்லமால் வழங்கி இருக்கிறேன். இன்று, இந்த யுத்த களத்தில், நீங்கள் ஏதாவது
கேட்டு நான் தர முடியாத நிலையை உண்டாக்கிவிடாதீர்கள்...என்னால் என்ன
தரமுடியுமோ அதையே தயவு செய்து கேளுங்கள் " என்று தன்னிடம் தானம் வேண்டி வந்த
வேதியரிடம் கர்ணன் வேண்டினான்.
அதை கேட்ட அந்த வேதியனும், "நீ சேர்த்து வைத்திருந்த புண்ணியம் அத்தனையும்
தருக " என்று கேட்டான்.
பாடல்
*என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது
எனக் கேட்டு, வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய்
தளர்ந்து இரதமேல் விழுவோன், 'நன்று!' என
நகைத்து, 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என,
நான் மறையவனும், 'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும்,
உளம் மகிழ்ந்தான்.*
பொருள்: என்று கொண்டு அந்த வேதியன் சொன்னதும் இரண்டு காதிலும் அமுதம்
பாய்ந்தது போல உணர்ந்து, வெற்றி பெறும் அர்ஜுனனின் பலமான அம்புகளால் உடல்
தளர்ந்து தேரின் மேல் விழுகின்ற கர்ணன்,
நன்று என மகிழ்ந்து 'என்னால் தரக் கூடிய பொருளை நீ கேள்' என்றான். அந்த
வேதியனும், 'நீ சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் தருக' என்று கேட்டான் ;
அதைக் கேட்டதும், கர்ணன் உள்ளம் மகிழ்ந்தான்.
வாழ் நாள் எல்லாம் சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் போய் விடும். இனி
புண்ணியம் செய்யவும் வழி இல்லை. இருந்த போதும், அவன் மனம் மகிழ்ந்தது. என்ன
ஒரு மனம் அவனுக்கு...!
*தமிழ்நாயகம் *
******************************
*சித்தானந்தம் *
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqtjcCY16NCCBh9sFArdaONfXc%3DXGTRXZwUSmAXB2QjEg%40mail.gmail.com.