> From: Srinivasan Sridharan <[email protected]>
> Date: December 4, 2025 
> Subject: வள்ளுவர்காட்டிய வழி - பாகம் 2
> 
> 
> அந்த அந்தணன் தர்மவ்யாதனைத்தேடிச்சென்றபோது  அவனை ஒரு கசாப்புக்கடையில் கண்டு 
> வியப்படைந்தான்!
>   தர்மவாதன் அந்தணனைப்பார்த்து வாரும்! உம்மை வாசுகி அம்மையார் அனுப்பிறாரா? 
> என்றுகேட்டான்!
> அந்தணனுக்கு வியப்பு அதிகமாகியது!
>  பிறகு அவனை பணிவுடன்வணங்கி தனக்கு நல்லுபதேசம் செய்து அருளும்படி 
> வேண்டிக்கொண்டான்!
> தர்ம வ்யாதனும் அந்த அந்தணனைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தான்.
>  அங்கு அந்தணனை இருக்கையில் அமரச்செய்து விட்டு தான்உள்ளே சென்று நீராடி நல்ல 
> உடைஅணிந்து வந்து , அந்தணனைத்தனது முதிய தாய்தந்தையரிடம் அழைத்துச்சென்றான். 
> அங்கு அலன் தனது பெற்றோர்களை அன்புடன் பல்வகையிலும் பேணி உபசரித்து 
> எல்லாபணிவிடைகளையும் செய்து விட்டு பிறகு அந்தணனைப்பர்த்துக்கூறினான்.
> ஐயனே! நான் படிப்பறிவில்லாதவன். எனது குலத்தொழிலாகிய இறைச்சி வியாபாரம் 
> செய்துவருகிறேன். என்னைத்தேடிவருபவரை அன்புடன் உபசரித்து என்னால் முடிந்த 
> உதவிகளை அவர்களுக்குச்செய்து , எனது பெற்றோர்களையே கடவுளால் நினைத்து 
> அவர்களுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்கிறேன்! அதன் பலன்தான் எனக்கு 
> வாழ்க்கையில் உண்மையான இன்பமும
> அமைதியும்கிட்டியுள்ளன! ஆகையால் அத்தகைய வாழ்க்கையையே தாங்களும் கடை 
> பிடிக்கச்சொல்கிறேன் என்று உபதேசித்தான்.
>  அந்தணனும் அதைக்கேட்டுத்தனது கர்வம் கோபம் எல்லா ற்றையும் விட்டு நல்வழியில் 
> நடந்து உய்ந்துபோனான்.
> 
> ்
> 
> 

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/4055A3B2-F7CC-4A5A-9EC3-64AD60413068%40gmail.com.

Reply via email to