---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Wed, Dec 10, 2025 at 9:14 AM Subject: Fw: Thuglak Sathya on Cho To: Chittanandam V. R. <[email protected]> Cc: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group) < [email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, Mani APS <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>
Thanks. In an otherwise well written article, the most jarring omission (in spite of the caveat that if Big, many will not read it - at the end) is Cho's immortal contribution to our religion and Tamizh literature. His write ups on Valmiki Ramayana, Vyasa Bharatha, Hindu Maha Samudiram, Enge Brahmanan etc. not only created awareness among the Tamizh knowing Hindus but also contributed to the enriching of the Tamizh literature. A line or two on this subject would have done more justice to that genius. N Sekar N Sekar ----- Forwarded Message ----- *From:* Chittanandam V R <[email protected]> *Sent:* Wednesday, December 10, 2025 at 03:37:32 AM GMT+4 *Subject:* Fwd: Thuglak Sathya on Cho *அமரர் சோ * *துக்ளக் சத்யா * ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்பும் அவருடன் பேசியது, சிரித்தது, விவாதித்தது எதையும் மறக்க முடியவில்லை. துக்ளக் வேலைகள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்னைகள் குறித்தும் எங்களோடு உரையாடுவார். மிகப் பிரபலமான நபராக இருந்தும் வித்தியாசம் இன்றிப் பழகியவர் எங்கள் அன்பிற்குரிய ஆசிரியர் சோ அவர்கள். அசாதாரணமான குணங்கள் அவருடன் பிறந்தவை. மற்ற பத்திரிகைகள் அட்டையில் சினிமா நடிகைகளைப் போட்டுக் கொண்டிருந்த காலத்தில், இரு கழுதைகளைப் போட்டு, அதற்கே டிமாண்ட் ஏற்படுத்திக் காட்டியவர். அட்டைப் படத்திற்காகவே துக்ளக் அக்காலத்தில் பலராலும் வாங்கப்பட்டது. வாசகர்களை பெரிதும் மதித்தவர். துக்ளக் ஆண்டு விழா 6.30. க்கு ஆரம்பம் என்று அறிவித்தால், சரியாக 6.30.க்கு 'அனைவருக்கும் வணக்கம்' என்ற கம்பீரமான குரல் மேடையில் கேட்கும். 'நமக்காக வெளியூரில் இருந்தெல்லாம் வருகிறார்கள். அவர்களை ஏன் காக்க வைக்க வேண்டும்?' என்பது அவரது விளக்கம். சரி என்று மனதில் தோன்றுவதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார். 1980-90 ல் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசவே தமிழகம் பயந்து கொண்டிருந்தது. கருணாநிதி அவர்கள் LTTE யின் பிரதிநிதி போலவே அரசியல் செய்து வந்தார். சோவோ, ஒட்டு மொத்த நாடே வி.புலிகளை ஆதரித்து வந்த சமயத்திலும், அவர்களுக்கு எதிராகப் பேசியவர். அச்சமயத்தில் இலங்கைக்கு வந்து பேசும்படி தமிழக அமைப்புகள் அவரைக் கேட்டுக்கொண்டன. அங்கும் போய் வி.புலி இயக்கத்தைக் கண்டித்துப் பேசினார். கூட்டத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. பேசியதை வாபஸ் பெறும்படி மிரட்டப்பட்டும் சோ அசரவில்லை. ' நீங்கள் அழைத்தே நான் வந்திருக்கிறேன். உங்கள் கருத்தை நான் பேச முடியாது. என் பேச்சைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் ' என்று கூறினார். அதிசயிக்கத்தக்க வகையில், அந்தக் கூட்டம் அவர் பேச்சை இறுதி வரை கேட்டது. பயம் என்பது சிறிதும் இல்லாதவர். ஒரு LTTE பிரமுகர் துக்ளக் அலுவலகத்திற்கே வந்து தங்கள் பிரச்னை பற்றி விளக்கினார். சோ தன் கருத்தைக் கூற, கோபமடைந்த அவர் ' நான் இப்ப உங்களை சுட்டுட்டா நீங்க என்ன செய்ய முடியும்? ' என்று கேட்டார். ' சுட்டா என்ன பண்ண முடியும்? செத்துப் போவேன். ஆனா, நீங்க சொன்னது சரின்னு சொல்லிட்டு சாக மாட்டேன் ' என்பது அவர் அளித்த பதில். அந்த மனிதர் திகைப்புடன் வெளியேறினார். அவரது தலையங்கங்களை இன்று படித்தாலும் அவர் எத்தகைய அறிஞராக இருந்தார் என்று புரிந்து கொள்ள முடியும். மற்ற பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள். அவ்வளவுதான். ஆனால், சோவின் கருத்துகள் ' இவர் நமக்காக எழுதுகிறார், நமக்காக பேசுகிறார் ' என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தின. அதனால் அவரது கருத்து பல சமயங்களில் மக்களின் பொதுக் கருத்தாகவே மாறியது. கடுமையான அரசியல் விஷயங்களையும் எளிதாக விளக்கி, அரசியல் மீதே பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் சோ. இன்று முகநூலில் எழுதும் பலர் அவரால் உருவானவர்கள் என்றே உணர்கிறேன். அண்ணாமலை முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவரா? எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கத் தகுந்தவரா? விஜய் எப்படிப்பட்டவர்? உதயநிதி எத்தகையவர்? இன்றைய அரசியல் விஷயங்களில் அவர் எப்படி எழுதியிருப்பார்?- என்றெல்லாம் நமக்கு தெரியாது. அதற்காக என்ன செய்ய முடியும்? அவரது கருத்து என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்து அந்த வகையில் எழுதவே அடியேன் முயற்சிக்கிறேன். அவை சரியா என்பது காலப்போக்கில்தான் தெரியும். சோ அவர்களைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. பதிவு பெரிதானால் பாதி பேர் படிக்க மாட்டார்கள். அதனால் இத்துடன் நிறுத்துகிறேன். * - துக்ளக் சத்யா* ************************************* *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zcurqw3WqHtFyDa_Zei8MiUH4Kodrg2q7SxENXqgVM_0Q%40mail.gmail.com.
