கருமேகம், நெடுங் கடல், கா அனையான்
தருமே, தனியேன் எனது ஆர் உயிர் தான் ?
உரும் ஏறு உறழ் வெஞ் சிலை நாண் ஒலி தான்
வருமே ? உரையாய், வலியார் வலியே!  (உருக் காட்டு படலம், சுந்தரகாண்டம்)
       இலங்கையின் மழைக்காலம்; நடுவே நெடிய கடல்; க அணையின் மட்டுமே என் உயிரை
மீட்க முடியும். ஏனெனில் அனையனுக்கு என் உயிர் ஆர் உயிர்தான்.  இருவரின்
நெருங்கிய நட்பு ; இருவரின் ஒருவரை மற்றவர் அறியும் திறன்; கணவன் மனைவியின்
இலக்கணம் இங்கே கம்பன் பிரிவினில் எடுத்துரைக்கிறான். கணவனின் மீது வீரத்தின்
இது, மனதின் மீது, சீதைக்கு உள்ள அழுத்தத்தைக் உரும் ஏறு, உறழ் வெஞ்சிலை
வார்த்தைக் கோப்புகளில் எங்ஙனம் படைத்தான்? வடிவத்தில் காளை சிங்கம் போல
ரா  ற உருபும்
பயனும் உடன் தொக்க தொகையாக கருதலாமா? ராமனின் நிதானம் உரு மீனை ஒத்தது;
நீலவண்ணன் எங்ஙனம், வெஞ்சிலையாக முடியும்?  உறழ்  வலி ,சோகம், தேகத்தை வெளிற
செய்ததால், வெளுத்தனன் போலும். வில்லை உடையோன் அந்நிலையிலும், நான் ஒளி
செய்வான் ,மீட்பான், ஆருயிரை தருவான் எனும் நம்பிக்கை ;கணவனைக் கண்டால் அவன்
வழி அன்றி வேறு இல்லை எனும் தீர்மானம். அந்த அன்பு தான் பின்னர் அறநிலைக்க்காக
வால்மீகி ஆஸ்ரமம் செல்வதற்கும் உடந்தை ஆயிற்று. வலியார் வலி வலிமையின் வலிமை;
வலியின் வலி துன்பம்; வலியரின் வலிமையே கூறுக நான் ஒளி கேட்குமா எனும் வினா
மூலம், சந்தேகம் எழுதல். மன நிலையின் மாறுதல்; அப்பொழுது, ஹனுமான் ரமணிப்
பற்றி கூறுதல் ,நம்பிக்கையைத் தூண்டுதல்- கம்பன் ஒரு சினிமா டைரக்டர்;
படத்தைக்கான முன் திரை ஒளியாய் நிறுத்தியவன். ஹனுமானின்  அனுமானம்.
மனக்குழப்பத்தில் உள்ளவரிடம் எதிரே தோன்றி உண்மையைக் கூற முடியாது;
மனக்கிலேசத்தை நோக்கி பின் ராமா தூதரின் செயலை நிறைவேற்றும் அமைச்சர்;
மதியுகி. உருவதைக்காட்ட உறுமீன் போலாகி சுந்தரமாக பேசும் படலம்.  K RAJARAM
IRS 5126

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sun, 4 Jan 2026 at 21:38
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Sita in Lanka (2)
To:





கம்ப இராமாயாணம்  இலங்கையில் சீதை - சீதையின் துயர மொழி  (2) வலியார் வலியே!

*தமிழ்நாயகம் *


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான்.
மறைந்து இருந்து அவள் செய்வதை/பேசுவதை கேட்கிறான்.

சீதை புலம்புகிறாள். "கரிய மேகம், பெரிய கடல், காடு போன்ற கரிய இராமன் என்
உயிரைத் திருப்பித் தருவானா? பேரிடி போல் கேட்கும் அவன் வில்லின் நாண் ஒலிதான்
நான் கேட்பேனா? இராம இலக்குவனர்களிடம் உள்ள வலிமையே, நீ சொல்வாய்" என்கிறாள்.

பாடல்

*கரு மேகம், நெடுங் கடல், கா அனையான்*

*தருமே, தனியேன் எனது ஆர் உயிர்தான் ?*

*உரும்ஏறு உறழ் வெஞ் சிலை நாண் ஒலிதான்*

*வருமே ? உரையாய், வலியார் வலியே!*  (உருக் காட்டு படலம், சுந்தர காண்டம்)


பொருள்: கரிய மேகம், நீண்ட பெரிய கடல், அடர்ந்த காடு போன்றவன் தருவானா  தனியாக
இருக்கும் எனது அருமையான உயிரைத்தான்?  பேரிடி போல சப்தம் செய்யும் கொடிய
வில்லின்  நாண் ஒலிதான்  இங்கே இலங்கைக்கு வருமா?  வலிமை பொருந்திய இராம,
இலக்குவர்கள் இடம் உள்ள வலிமையே, நீ சொல்வாய்!

இராமன் வந்து தன்னை சிறை மீட்டிச் செல்வான் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள்.
அவன் வருவானா, எப்போது வருவான் என்று ஏங்குகிறாள். சோகத்தில், துன்பத்தில்
தான் மனதின் அடியில் உள்ள உணர்ச்சிகள் மேலே வருகின்றன.

மேலும் என்னென்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.

*-- தமிழ்நாயகம் *

**********************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop%2B0sjo8b2YWCHkaD5Z3W34UUNwwaBLSyJU5b5OM%2BSJGw%40mail.gmail.com.

Reply via email to