*RAMAN WAILING IN KAMBA RAMAYANAM IS LIMITED THAN THE VAKMIKI RAMAYANAM*

*K RAJARAM IRS 15126*









*நிலவு **இராமனை **வருத்துதல்*



*3648.*

*களியுடை **அனங்கக் **கள்வன்*



    *கரந்து **உறை **கங்குல் **காலம்*



*வெளிபடுத்து, **உலகம் **எங்கும்*



    *விளக்கிய **நிலவின் **வெள்ளம்,*



*நளி **இருள் **பிழம்பு **என்று, **ஈண்டு,*



    *நஞ்சொடு **கலந்த **நாகத்*



*துளை **ஏயிற்று **ஊறல் **உற்ற*



    *தாம் **எனச் **சுட்டது **அன்றே.*



















*3657.*

*“**நின்று **பல் **உயிர் **காத்தற்கு **நேர்ந்த **யான்*



*என் **துணைக் **குலமங்கை **ஒர் **ஏந்து **இழை*



*தன் **துயர்க்கும் **தகவு **இலென் **ஆயினேன்;*



*நன்று **நன்று **என் **வலி! “ **என **நாணுமால்.*



























*3659.*

*பிரிந்த **ஏதுகொல்? **பேர் **அபிமானம் **கொல்?*



*தரெிந்தது **இல்லை; **திருமலர்க் **கண் **இமை*



*பொருந்த **ஆயிரம் **கற்பங்கள் **போக்குவான்*



*இருந்து **கண்டிலன் **கங்குலின் **ஈறு **அரோ.*

















*சீதையின் **பிரிவுத் **துயரால் **இராமன் **வருந்துதல்*



*3672.*

*பொழிலை **நோக்கும்; **பொழில் **உறையும்*



    *புள்ளை **நோக்கும்; **பூங்கொம்பின்*



*எழிலை **நோக்கும்; **இளமயிலின்*



    *இயலைநோக்கும்; **இயல்பு **ஆனாள்*



*குழலை **நோக்கிக் **கொங்கை **இணைக்*



    *குவட்டை **நோக்கி, **அக்குவட்டின்*



*தொழிலை **நோக்கித் **தன்னுடைய*



    *தோளை **நோக்கி, **நாள் **கழிப்பான்.*

*KR   IRS*





---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 14 Jan 2026 at 20:18
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam (6) - Sita in L =anka
To:




கம்ப இராமாயணம் -  இலங்கையில் சீதை - சீதையின் துயர் மொழி (6)) - ஆவியை
உண்ணுதியோ
*தமிழ்நாயகம் *


அசோகவனத்தில் இருக்கும் சீதை இராமனை நினைத்து புலம்புகிறாள்.

"இராமா !, நீ காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொன்னபோது நானும் வருகிறேன்
என்று அடம் பிடித்தேன். நீ வர வேண்டாம், இங்கே நகரத்திலேயே இரு என்று
சொன்னாய். நான்தான் கேட்கவில்லை. அதனால், இப்போது இந்த நகரத்தில் (இலங்கையில்)
இருக்கட்டும் என்று என்னை விட்டுவிட்டாயா?  உன் அருளின் அளவு இவ்வளவுதானா? என்
உயிரை வாங்குகிறாய் நீ" என்று புலம்புகிறாள்.

பாடல்:

*தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ;*

*வருவென்  சில நாளினில்; மா நகர்வாய்*

*இரு" என்றனை; இன் அருள்தான் இதுவோ?*

*ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ?*

பொருள்: மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அடர்ந்த கானகத்தை நீ அடைவாய்;
நீ (சீதையாகிய நீ) அதை தவிர்ப்பாய்;

நான் (இராமன்) வருவேன் கொஞ்ச நாளில் பெரிய நகரத்தில் இரு என்று என்னைச்
(சீதையை) சொன்னாய். நீ காட்டும் அருள் இது தானா? தனி ஆளாக இருக்கும் என் உயிரை
எடுக்கிறாய்!

நான் காட்டில் கிடந்து துன்பப் படக் கூடாது என்று என்னை இந்த நாட்டில் தனியாக
இருக்க வைத்து விட்டாயா? இவ்வளவுதானா  உன் அருள். உன் பிரிவு என் உயிரை
உருக்குகிறது என்கிறாள்.

உயிரை, உணர்வைத் தொடும் கவிதை.


*தமிழ்நாயகம் *
***********************************

சித்தானந்தம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorTX8O9iDbm8JBDEq9ZSTn8EFUsatLr3Og9xOjZMNRwmQ%40mail.gmail.com.

Reply via email to