Great stunned K Rajaram IRS 27326

On Fri, 27 Mar 2026 at 08:06, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> மதிப்பிற்குரிய இலந்தை ராமசாமி அவர்களின் படைப்பினை‌ நாமும் அனுபவிப்போம்
> என்று கண்டிருக்கிறேன்.
>
> ---------- Forwarded message ---------
> From: Subbaier Ramasami <[email protected]>
> Date: Thu, 26 Mar, 2026, 7:53 pm
> Subject: இராமன்
> To: santhavasantham <[email protected]>
>
>
> பல ஆண்டுகட்கு முன்பு தேரழுந்தூரிலே ஒரு கவியரங்கம். என் தலைப்பு இராமன்.
> இராமன் தன்னைப்பற்றித் தான் பேசும் தனிமொழியாக அமைத்திருந்தேன். அதற்கு முன்
> கவிக்கூற்றாக நான் இராமனை அறிமுகம் செய்தேன். அந்தப் பகுதி இதோ:
> கோசலை பெற்ற குமரன், குணக்குன்று
> பேசரும் பண்புப் பெரியவன், தெய்வமே
> பாரில் மனிதனாய்ப் பாவனைகள் செய்திடவே
> நேரில் இறங்கிவந்த நித்தியம், தந்தைசொல்
> காத்திட வேண்டியே, காட்டுக்குச் சென்ற மகன்
> பூத்திடும் நெஞ்சில் புனிதங்கள் தேக்கியவன்,
> சத்தியத்தின் நேர்பிறவி, சாந்தத் திருவுருவம்,
> இத்தரையின் வாழ்வில் எடுத்துக்காட் டாகியவன்
> செத்த தடத்துள்ளும் ஜீவன் வரவாக்கும்
> உத்தமன், கல்லில் உயிர்தூவி வைத்தமகன்,
> அண்ணல், அறத்தின் அவதாரம், அஞ்சன
> வண்ணன், ,கமல மலர்க்கண்ணன், வில்லேந்து
> வீரன், விவேகி, வேடன்குகன் அண்ணன்,
> தீரன், அபயச் சிகாமணி, கண்ணசைவின்
> சின்னத் திருப்பத்தில் தெய்வம் ஒளிவீச
> என்னவெனத் தேறாத ஏதோவோர் இன்பத்தின்
> மின்னல் கனிச்சூட்டின் விந்தை விளைக்கிறவன்
> உன்னதத்தின் உன்னதத்தின் உன்னதத்தின் உச்சமவன்
> தன்மனத்தி லே பகைமைத் தன்மை அறியாதான்
> இன்னபடி என்றே இலக்கணமாய்க் காட்டுதற்கே
> சொன்னபடி தான்நின்ற சுந்தரன், மற்றொருவர்
> துன்பத்தைக் கண்டால் துடிக்கிறவன், மண்ணாளும்
> பாக்கியத்தைக் கூடப் பரவசமாய் எண்ணாதான்
> வாக்கினிலே தூய்மை, வடிவத்தில் பேரழகு,
> வானத் தமுதம் வடிவெடுத்து வந்ததுபோல்
> போன இடமெல்லாம் புத்துணர்ச்சி ஊட்டியவன்
> சற்றே விழிசிவந்தால் தாவும் கடல்வற்றும்
> பற்றும் பெருங்கனலில் பாரே சிவப்பாகும்
> ஆனால் சினம் கொள்ளான், அன்பே அவன் மூச்சு
> தானாக வந்து சரணம் அடைபவரின்
> கோத்திரம் பாரான், குலம்பாரான், ஒன்றாவான்
> தீத்திறத்து மாற்றாரைத் தீய்க்கின்ற வெம்மைநிலா
> கங்கு குளிர்ந்த கதிராவான் அன்பர்க்கே,
> பொங்குமவன் புன்னகையில் போது மலராகும்
> கங்குல் வெளிப்பூச்சு, காப்பதுவோ வெள்ளைமனம்
> தங்கும் வனமுமிவன் சன்னதியி லேசொர்க்கம்
> கங்கை புனிதமவன் காலடியிலே கொள்ளும்
> பொங்கி வெடிக்கின்ற பூவில் அவன்சுகந்தம்
> ஓர்சொல்லில் ஓர் இல்லில் ஓர்வில்லில் நிற்கிறவன்
> நேர்பாதை செல்லும் நெறியின் வழிகாட்டி
> போதன், புனிதன், புகழின் பொருளாளன்,
> வேதன், வினயன், விரிஞான நீதிமகன்,
> அல்லழகன், நல்லறிஞன், ஆனந்தன் அற்புதன்
> சொல்லழகன், ஆண்களையும் சொக்கிவிடச் செய்கிறவன்
> சீதை கணவன், திறல்மறவன், செம்மனத்தன்
> ஆதி, அநாதி, அறத்தை அணிகிறவன்
> என்றெல்லாம் பல்லோரும் ஏற்றும் இராமபிரான்
> தன்கதையை இவ்வரங்கில் சாற்றுகிறான் கேட்போமா?
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCJ0aAKRb9U9kR6KYv52wVBuBj8-zgq1RAfqQ9BteGuJw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCJ0aAKRb9U9kR6KYv52wVBuBj8-zgq1RAfqQ9BteGuJw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRKBD7VoHD%2BkNH0nQS2kTQ0nXDKsfUiu1CeX9sRoe%2BTA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRKBD7VoHD%2BkNH0nQS2kTQ0nXDKsfUiu1CeX9sRoe%2BTA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooE8kQnFFtaXHWqx7%2B521ygGThDObD%2BfywSf3Kn_O62DQ%40mail.gmail.com.

Reply via email to