Not META all offices are similar in nature ; not only working from anywhere, but can work with any dress also K R
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Tue, 19 May 2026 at 06:14 Subject: Fwd: Nandhu Sundhu - Facebook Office To: *FACE TO FACE* *நந்து சுந்து* Facebook சோறு போடுமா? எனக்குப் போட்டது. அந்தக் கதைதான் இது. எனக்கு வேண்டப்பட்டவர் ஒருவருக்கு கலிபோர்னியாவில் இருக்கும் ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் வேலை. “எங்க ஆபிஸ் சுத்திப் பார்க்க வரீங்களா? அங்கே சாப்பாடு ஃப்ரீ. நான் கூப்பிடறேன். வாங்க” என்றார். “நீங்க கூப்பிடலேன்னாலும் நான் வரேன்” என்றேன். பசி உச்சத்தில் இருக்கும் தேதியில் புறப்பட்டோம். எங்கள் பகுதியிலிருந்து இருபது நிமிடக் கார்ப் பயணம். வாழ்வின் ஆதார விஷயங்களான Facebook, Instagram, WhatsApp, Threads ஆகிய நான்கும் META என்ற தலைமை நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. அங்குதான் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். META மேடான இடத்தில் இல்லை. சமவெளியில்தான் இருந்தது. வள்ளுவர் கோட்டத்துக்குப் போகும் லவ் ஜோடி போல இங்கே வாக் இன் செய்து விட முடியாது. யாரேனும் ஒரு Employee ஸ்பான்சர் செய்ய வேண்டும். நேரம் குறிப்பிட்டு முன் பதிவு செய்ய வேண்டும். உலையில் இரண்டு கிலோ அரிசி கூடுதலாகப் போடுவதற்காக அல்ல. Security காரணங்களுக்காக. நீ வரலாம் என நமக்கு ஒரு மெயில் வரும். நுழை வாயிலில் போட்டோ உள்ள ஏதேனும் ஒரு ID காட்ட வேண்டும். ஆதார் கார்ட் காட்டினேன். அட்லாண்டிக் கடல் தாண்டி ஆதார் செல்லுபடியாகவில்லை. இதில் Valid up to என்று தேதி போடவில்லையே என்ற Legally valid ஆன கேள்வி கேட்டார். பிறகு பாஸ்போர்ட் காட்டினேன். ‘சரி, உள்ளே போய்ப் பாயாசம் குடி’ என அனுமதித்தார். எங்களைப் போன்றவர்களுக்கு Social visitor என்று பெயர். நம் பெயர் போட்டு மஞ்சள் கலர் ரிப்பனுடன் ஒரு Tag கொடுக்கிறார்கள். மானாவாரியாகத் தின்பதற்கான முத்திரை மோதிரம்தான் அந்த மஞ்சள் டேக். உள்ளே பாண்டி பஜார் மாதிரி ஒரு தெரு. ஏகப்பட்ட மஞ்சள் டேக் மனிதர்கள் இருந்தார்கள். பயங்கரமான குளிர். சூடாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. (ஆறிப் போனதை சாப்பிடவும் நான் தயார் என்பது வேறு விஷயம்) Indian, Italian, Mexican, Philipino என்று தனித்தனியாக ஏகப்பட்ட Cafeteria இருந்தன. முதலில் இந்தியனில் நுழைந்தோம். சூடான பிரியாணி இருந்தது. பக்கத்தில் ரொட்டி, பட்டர் நான். பீட்ரூட் க்ரேவி, Egg plant க்ரேவி, Dal என ஒரு குஜராத்தி போஜனாலயாவே இருந்தது. குஜ்ஜு கிச்சனில் மஜாவாக Mango Lassi இருந்தது. பக்கத்தில் டம்ளர்கள். அவை டம்ளர்களே அல்ல. Mug சைஸுக்கு இருந்தன. முக்கால் மக் லஸ்ஸி பிடித்துக் கொண்டேன் (கண் பட்டுவிடும் என்பதால் கால்வாசி மக் காலியாக விடப்பட்டது) சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது. விட்டுப் போன கால் மக் லஸ்ஸியை மறுபடியும் பிடித்து அருந்தினேன். அருந்தினேன் என்பது குடித்தேன் என்பதற்கான டீசன்டான மாற்றுச் சொல். லஜ்ஜை இல்லாமல் லஸ்ஸி அருந்துவது இங்கு அனுமதிக்கப்படுகிறது.. சாப்பிட்டு முடித்ததும் அடுத்த Cafeteria போகலாமா என்றார் நண்பர். “இந்தியன் 2 தானே?” என்றேன். “நோ. Barbeque” “பாபர், அக்பர் எல்லாத்துக்கும் நான் ரெடி” Barbeque ல் வெஜ் ஐட்டம்களாகத் தேடி எடுத்துக் கொண்டோம். ஒரு Smoke grill ஐட்டம் செமயாக இருந்தது. பெயர் தெரியாத சில பதார்த்தங்களை சாப்பிட்டேன். வயிறு முக்கியம். பெயரா முக்கியம்? வீதியில் நின்று சில போட்டோக்கள் பிடித்துக் கொண்டோம். பிரியாணி வயிற்றுக்குள் ஒரு Gas bank உருவாக்கி இருந்தது. போட்டோ பிடிப்பதென்றால் வயிற்றுக்குள் Vacuum உருவாக்க வேண்டும். படாதபாடு பட வேண்டியதாகப் போய் விட்டது. இத்தாலி நாட்டுக்காரர்கள் இதயத்தை நோகச் செய்யக் கூடாது என அந்த Cafeteria க்கும் போனோம். French Fry ஆர்டர் செய்தோம். Bata shoe அட்டை டப்பா அளவுக்கு நிரப்பிக் கொடுத்து விட்டார்கள். எப்படி சாப்பிட்டாலும் காலியாகவே இல்லை. கால் மணி நேரம் ஒரே ஃப்ரெஞ்ச் புரட்சிதான். பக்கத்தில் ஒரு வீடியோ கேம் ரூம் இருந்தது. அதுவும் இலவசம். உள்ளே போனோம். நான் ஏதும் விளையாடவில்லை. எனக்கு தெரிந்த வீடியோ கேம் அதிக பட்சமாக Angry Bird மட்டுமே. அந்த கேமையும் சமாதானப் புறா ரேஞ்சுக்கு நான் விளையாடுவேன். எனவே ஒரே ஒரு போட்டோ பிடித்துக் கொண்டு வெளியே வந்தோம். Dessert ஐட்டம்களுக்காகவே தனியாக ஒரு Cafeteria இருந்தது. உள்ளே நுழைந்தோம். ஏதேதோ ஐட்டம்கள் இருந்தன. போர்டில் எழுதிப் போட்டிருந்தார்கள். அதில் நான்கு வித ஐட்டம்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன். சற்று தள்ளி வெனிலா ஐஸ்க்ரிம் இருந்தது. கையால் கூட ஸ்பரிசிக்கவில்லை. இந்த முனி சிரேஷ்ட செயலைப் பார்த்து வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்! சிறிது தூரம் நடந்த பிறகு “உள்ளே Work area க்குப் போகலாம்” என்றார் நண்பர். போனோம். எங்கு பார்த்தாலும் டேபிளில் Systems. மானிட்டர் ஒவ்வொன்றும் Glass top கேஸ் அடுப்பு சைஸுக்கு இருந்தன. ஆங்காங்கே அறிவு ஜீவிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆபீஸ் முழுக்க Micro kitchen என்று நிறைய வைத்திருக்கிறார்கள். நாற்பதடிக்கு ஒரு மைக்ரோ கிச்சன். காபி, டீ, கார்ன் ப்ளேக், பால், சாக்லேட், பாப் கார்ன், கோக் என சத்தியம் தியேட்டர் கேன்டீன் ரேஞ்சுக்கு இருக்கிறது. ஆனால் இலவசம். மைக்ரோ கிச்சனுக்கு மீசையில்லாத மைக் மோகன் ஒருவர் வந்தார். எதையோ எடுத்துக் கொண்டு போய் தன் டேபிளில் Mouse அருகே வைத்துக் கொண்டார். மானிட்டரில் மூழ்கினார். அவர் வேலை செய்யட்டும் என வெளியே வந்தோம். காம்பவுண்டுக்கு வெளியே Meta போர்ட் ஒன்று பெரிதாக இருந்தது. அதன் முன் போட்டோ பிடித்துக் கொண்டேன். காரில் புறப்பட்டு அடுத்த கட்டிடத்துக்குப் போனோம். கேம்பஸ் அவ்வளவு பெரியது. அங்கும் டேபிள்கள். சிஸ்டம்கள். அதன் முன்னே சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரதர்ஸ். கருப்பு கீ போர்ட் அருகே பேப்பர் கப்பில் ப்ளாக் காபி. ஏனென்றால் இங்கும் முப்பதடிக்கு ஒரு மைக்ரோ கிச்சன் இருக்கிறது. Lobby ல் ஒரு பெரிய வெள்ளைப் பலகை இருக்கிறது. Face book wall என்று போட்டிருக்கிறார்கள். மார்க் ஒரு மார்க்கர் பேனாவையும் வைத்திருக்கிறார். What is on your mind என்ற வாசகம் வரவேற்கிறது. நாம் எது வேண்டுமானாலும் எழுதலாம். அந்த சுவரில் வழக்கம் போல நான் 700 வார்த்தைகளில் வியாசம் எழுதினால் செவுனியில் அறைவார்கள். எனவே சுருக்கமாக I want 1000 K likes என்று எழுதினேன். ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கேப் போய் ஃபேஸ்புக் wall ல் எழுதியது தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய ஒரு தற்பெருமையான செயல். Threads, Instagram ஆகிய Logos அருகே போட்டோ பிடித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆபிஸுக்குள்ளே நிறைய சுற்றினோம். கையில் நுரை ததும்பும் காபி கப்புடன். ஒரு Vending machine லிருந்து Honey coated முந்திரியும் பாதாமும் எடுத்துக் கொண்டேன். நிறைய நடந்ததால் கால் வலி. பாதத்துக்கு பலம் கொடுக்கவே பாதாம். மற்றபடி என்னைப் பக்கி என நினைக்க வேண்டாம். இந்த அலுவலகத்தில் பணியாளர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை செய்யலாம். Cafeteria ல் வேலை செய்யலாம். வெளி வீதியில் குட்டி பெஞ்ச் மீது அமர்ந்தும் வேலை செய்யலாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு பணியாளர் Tread mill ல் நடந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார். Tread mill குறுக்காக ஒரு பலகை. அதில் மானிட்டரும் சிஸ்டமும் இருந்தன. அதில் வேலை செய்து கொண்டிருந்தார் அவர். ஓடி ஓடி உழைப்பது என்பது இதுதான். ஒரு Roof top garden உள்ளது. ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்குப் பெரிதாக உள்ளது. கார்டன் என்றால் வெறுமனே பூந்தொட்டிகள் இல்லை. நிஜமான மரங்கள் உள்ளன. மொட்டை மாடியில் எப்படி மரங்கள்? வேர் எங்கே இருக்கும்? வேரின் Whereabouts தெரியாமல் விழி பிதுங்கி நின்றேன். அந்த Roof garden ல் ஒரு மரத்துக்குக் கீழே ஒரு மனிதர் வேலை செய்து கொண்டிருந்தார். தோட்டத்திலிருந்து சாலையைப் பார்த்தால் காட்சி அழகாக இருந்தது. ஒரு சக்தி வாய்ந்த பைனாகுலர் வைத்திருந்தார்கள். அதன் வழியே பார்த்தால் என்னென்னவோ தெரிந்தது. எனக்கு ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து Profile lock செய்திருந்த லீலா ராமசாமியின் details மட்டும் தெரியவில்லை. நான்கு மணி நேரம் செலவழித்து விட்டு வெளியே வந்தோம். மனதுக்கு நிறைவாக இருந்தது. வெளியே வரும் போது ஒரு தாம்பூலப் பையும் ஐந்து சுற்று முறுக்கு, லட்டு போட்ட பட்சண டப்பாவும் கிடைக்கவில்லை என்பது மட்டுமே ஒரே குறை. *நந்து சுந்து * ****************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopbBKsJ_Ts3Xp11ePnUOFRYdyoPTDR3EyHpWOEtwFOREA%40mail.gmail.com.
