இதோ இதுவரை கர்மயோகத்தின் தொகுப்பு...

*குழப்பம்* 😵‍💫
அர்ஜுனன் மட்டுமல்ல நாமும் தான்...😁..

ஒரு கருத்து உடையும் போது குழப்பம் வருகிறது.
அதுவே வளர்ச்சிக்கான முதல்படி.

பலர் கர்மா = விதி என்று நினைக்கிறார்கள்.
அது தவறு.

*கர்மாவுக்கு 3 பகுதிகள்:*
1. செயல் (Action)
2. மனதில் இருக்கும் தடம் (Impression)
3. எதிர்காலத்தில் வரும் செயல் (Future action)

ஒவ்வொரு விளைவும் ஒரு புதிய காரணமாக மாறுகிறது.
*வாழ்க்கை ஒரு வட்டம் (Circle)*

உங்கள் மனதில் இருக்கும் பதிவு
உங்களுக்கு அதே மாதிரி சூழ்நிலைகளை ஈர்க்கும்.
அதனால் தான்
“இது என் கர்மா” என்று சொல்கிறோம்.

*செயலில் செயலற்றதை காண்பவன்*
*செயலற்றதில் செயலை காண்பவன்*
அவனே புத்திசாலி

வாழ்க்கையில் செயல் அவசியம்...
1. உடலை பராமரிக்க
2. குடும்பத்தை கவனிக்க
3. சமுதாயத்திற்கு சேவை செய்ய
4. தர்மத்தை காக்க
செயல் தேவை.

நாம் பெரும்பாலும்:
1. “என்ன கிடைக்கும்?”
2. “மக்கள் என்ன நினைப்பார்கள்?”
3. “நான் தோற்றுவிட்டால்?”
என்று கவலைப்படுகிறோம்
அதுவே மனஅழுத்தம்.

*கிருஷ்ணரின் மஹாவாக்கியம்*
“உனக்கு செயலில் மட்டுமே உரிமை உண்டு;
பலனில் இல்லை.”

*கர்மயோகம் என்ன கற்பிக்கிறது?*

👉 வேலை செய்வது மட்டும் அல்ல
👉 வேலைக்குள் யோகத்தை கொண்டு வருவது
இதை
தியானமும்
செயல்பாடும்
தரும்..

*ஒரு கர்மயோகி:*
✅ செயலில் திறமையானவர்
✅ உள்ளே அமைதியானவர்
✅ தோல்வியில் உடையாதவர்
✅ வெற்றியில் அகங்காரம் கொள்ளாதவர்

“நான் செய்கிறேன்” என்ற அகங்காரம் கரையும் போது…
செயல் தியானமாக மாறுகிறது...
வாழ்க்கை யோகமாக மாறுகிறது...
☺️🙏

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsPEspeO-xTL-2bFXYLZo7ARSz0k_GoOZzYBtpcFNJj9w%40mail.gmail.com.

Reply via email to