sTRENGTH AND WORK OF PEOPLE PROGRESSIVE kr

On Thu, 4 Jun 2026 at 10:12, Venkatachalam Subramanian <[email protected]>
wrote:

> *** அருமையான, கொஞ்ஜம் நேரம் ஸெலவு ஸெய்து படிக்க வேண்டிய முக நூல் பதிவு....
> படியுங்கள் பகிருங்கள்🙏👍**
>
> #பிரதமர் மோடியை அழைத்துவந்து கோவை குருடம்பாளையத்தை காண்பியுங்கள்.
>
> நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமரால் மட்டுமே முடியும்.
>
> அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்துவந்து காண்பியுங்கள்.
>
> தமிழ்நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழும் கோவை குருடம்பாளையம் கிராமம்!!!
>
> “வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ
> இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம்.
> சாயங்காலம் சாணம் கிடைச்சிடும்."
>
> கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் கிராமத்தின் கடைக்கோடி பகுதி அது.
> வானுயர்ந்து வளர்ந்திருக்கிறது குருடிமலை. ‘ம்ம்மா...’ என்று குரல்
> கொடுக்கின்றன தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகள். சீருடை அணிந்த பெண்மணி
> மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சாணம்
> அள்ளிக்கொண்டிருக்கிறார். மாட்டு சாணம் கொட்டப்பட்டிருக்கும் பகுதியில்
> மேய்ந்துக்கொண்டிருக்கின்றன ஏராளமான வாத்துக்கள், நாட்டுக் கோழிகள், புறாக்கள்!
>
> குப்பை அல்ல; மாற்று ஆதாரப் பொருள்!
>
> அருகே ஒரு கிட்டங்கி இருக்கிறது. அதன் அருகில் மிகப் பெரிய கூடம். ஆங் காங்கே
> கையாலும் மின்சாரத்தாலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன விதவிதமான இயந்திரங்கள்.
> பெண்கள் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிட்டங்கியின்
> உள்ளே சென்று பார்த்தோம். ஊரின் மொத்தக் குப்பையும் அடுக்கி
> வைக்கப்பட்டிருக்கிறது. ‘அட, குப்பைக் கிடங்கு’ என்றோம். உடனே, ‘குப்பைன்னு
> சொல்லக் கூடாதுங்க, தெனம் 100 பேருக்கு சோறு போடுது. மறுபயன்பாட்டுப் பொருள்
> அல்லது மாற்று ஆதாரப் பொருள்னு சொல்லுங்க’ என்கிறார் திடக்கழிவு மேலாண்மை
> திட்ட உதவியாளர் கோபி.
>
> அருகில் இருக்கும் கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சீருடை மற்றும்
> கையுறை அணிந்த பெண்கள் கழிவுகளை தரம் பிரிக் கிறார்கள். பச்சைக் காய்கறி
> கழிவுகள், தேங்காய் ஓடுகள், தென்னை நார், காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள்,
> பயன்படுத்திய நாப்கின்கள்... இன்ன பிற பொருட்கள் பிரிக்கப் படுகின்றன.
> “மொத்தம் 230 பொருட்களுங்க. அவற்றில் 215 பொருட்களை மறுசுழற்றி செய் யலாம். 15
> பொருட்களை மறுசுழற்சி செய்யவே முடியாதுங்க. இங்க மட்டுமில்லை, உலகம் பூராவும்
> இதுதான்” என்கிறார். உண்மைதான், தெர்மோக்கோல், சூயிங்கம், கார்பன் பேப்பர்,
> செராமிக் டைல்ஸ், சில்வர் சாக்லேட் பேப்பர், உட்பகுதியில் பளீர் வெண்மையில்
> இருக்கும் கோதுமை, ஆட்டா மாவு உறைகள், ஆம்பர் சிரப் புட்டிகள் உட்பட 15
> பொருட்களை மறு சுழற்சி செய்ய முடியாது. அபாயக் குப்பைகள் அவை.
>
> மாலையில் சாணம்... காலையில் பணம்!
>
> “வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ
> இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம்.
> சாயங்காலம் சாணம் கிடைச்சிடும். ராத்திரி அதில் இருந்து இயற்கை எரிவாயு
> உற்பத்தி யாகிடுமுங்க. அதோ அந்த கேட்டரிங் சென்டர்ல மறுநாள் காலையில் 8
> மணிக்கு சமையல் முடிச்சு டிபன் சப்ளை செய்யறோம். கையோடு பணம்
> கிடைச்சிடுமுங்க.” இயற்கை அறிவியலுடன் கூடிய கிராமப் பொருளாதாரத்தை எளிமையாக
> விளக்குகிறார் இளைஞர் கோபி.
>
> இதுமட்டுமல்ல, இங்கே குப்பை என்கிற மாற்று ஆதார பொருட்களில் இருந்து பல
> கிளைகளாக விரிகின்றன மக்களுக்கான வாழ்வாதாரங்கள். நிலத்தடியில் ஆறு கியூபிக்
> மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இயற்கை எரிவாயு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
> அவற்றில் இருந்து தினசரி 20 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
> அதன் மூலம் நவீன சமையல் கூடம் இயங்குகிறது. திருமணம், அலுவலகக் கூட்டங்கள்,
> உணவகங்கள் என தினசரி உணவுக்கான ஆர்டர் குவிகிறது. காலையில் இட்லி, தோசை,
> கிச்சடி, பொங்கல் டிபன் தயாராகிறது. மதியம் சாப்பாடு தயாராகிறது. சராசரியாக
> ஆயிரம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.
>
> சோலார் குப்பை வண்டி
>
> மணக்குது மண்புழு குளியல் நீர்!
>
> இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்தில் இருந்து மிஞ்சும் மக்கிய சாணத்தை
> காயவைத்து மண்புழுக்களுக்கு உணவாக போடுகிறார்கள். மண்புழுக்கள் செழித்து
> வளர்ந்துப் பெருகுகின்றன. ஒரு கிலோ மண்புழுக்களை ரு.500-க்கு விற்பனை
> செய்கிறார்கள். மண்புழுக்கள் இடும் கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 கிலோ
> மண்புழு உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்றைய தினமே விவசாயிகள் வந்து
> கிலோவுக்கு 20 ரூபாய் கொடுத்து அள்ளிச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம்
> மண்புழுக்கள் குவிந்துள்ள தொட்டியின் அடியே துளித்துளியாக சேகரமாகிறது மண்புழு
> குளியல் தண்ணீர். பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம் இது. தண்ணீரில் கலந்து ஸ்பிரே
> மூலம் பயிர்களுக்கு தெளிக்கிறார்கள். பயிர்கள் பலமடங்கு செழித்து
> வளர்க்கின்றன. இதையும் போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள்.
> மாதத்துக்கு மண்புழு உரம் மற்றும் மக்கிய உரம் தலா 3 டன்கள் விற்பனையாகின்றன.
> குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இரண்டு ஏக்கர் வளாகத்தில் கொசுவைப் பார்க்க
> முடியவில்லை. துர்நாற்றம் துளியும் இல்லை. மீன்கள், வாத்துக்கள், கோழிகள்
> கொசுக்களை அழித்துவிடுகின்றன.
>
> தென்னை நாரிலிருந்து உரம்
>
> குருடம்பாளையம் படுசுத்தமாக இருக்கிறது. தினசரி 27 நவீன சோலார் வாகனங்கள் 7
> ஆயிரம் வீடுகளில் 2500 கிலோ குப்பைகளைச் சேகரிக்கின்றன. இவை தவிர மாநகராட்சி
> பகுதியான கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நகரத்து மக்கள் போடும் குப்பைகளை
> தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று பேட்டரி வாகனத்தில் சேகரித்துத் தருகிறது.
> தரம் பிரிக்கப்பட்ட காகிதம், தென்னை நார், தேங்காய் ஓடு உள்ளிட்ட குப்பையில்
> இருந்து தினசரி 100 கிலோ மக்கும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை
> கிலோவுக்கு 10 ரூபாய் கொடுத்து விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள். இன்னொரு
> பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் நாற்றங்கால்
> பசுங்குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சந்தனம், பெருஞ்சந்தனம், வேங்கை,
> மூங்கில், கொன்றை, அரசு, நாவல், புங்கன், கருகமணி, பூச்சக்காய் மற்றும் பழ வகை
> மரக் கன்றுகள், மலர்ச் செடிகள், அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்து விற்பனை
> செய்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்து நடத்தும் நர்சரி கார்டன் இது. அவ்வளவும்
> பணம். குப்பையில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது பணம்!
>
> ஆனா, இன்னைக்கு தமிழகத்தின் அரசு துறைகள்ல இவ்வளவு அலைச்சல் தேவையில் லீங்க.
> நிறைய கணினிமயமாக்கிட்டாங்க. பெரும்பாலும் நேரில் செல்ல வேண்டாம். ரொம்ப
> அவசியமுன்னா ரெண்டு தடவை போலாம். மத்தது எல்லாம் இணைய சேவையிலேயே வாங்கலாம்.
> ஆதார் அட்டை வாங்கலாம். திருத்தம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டைக்கு
> விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழ்
> விண்ணப்பிக்கலாம். இதை எல்லாம் எங்க கிராமத்து ஜனங்களுக்கு கத்துத் தர்றதுதான்
> இந்த வை-ஃபை திட்டத் தின் நோக்கமுங்க. அதுவுமில்லாம எங்க பஞ்சாயத்துக்குள்ள
> மட்டும் 7 ஆயிரம் மாண வர்கள் பள்ளி, கல்லூரிகள்ல படிக்கிறாங்க. புராஜெக்ட்
> வேலை, பொது அறிவுன்னு இணைய வசதி அவங்களுக்குத் தேவைப் படுது” கொங்குத் தமிழில்
> கணினி கற்பிக்கிறார் பஞ்சாயத்து தலைவர் ரவி.
>
> கலக்கப் போகுது காபி ஷாப்!
>
> இணையம் மட்டுமல்ல... கிராமப் பஞ் சாயத்து சார்பில் அழகான காபி ஷாப் அமைக்கப்
> பட்டுள்ளது. பசுமையான தோட்டத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு அழகிய மேஜைகள்
> அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை அமைத்து முடித்தபோது உள்ளாட்சித் தேர்தல்
> அறிவிப்பு வந்துவிட்டதால் நாம் சென்ற நேரம் காபி அருந்த முடியவில்லை.
>
> “அதனால என்னங்க நம்ம வீட்டுல ஜம்முன்னு காப்பித் தண்ணி குடிக்கலாமுங்க. நம்ம
> கிராமத்துல இந்தத் தலைமுறை இளைஞர்கள் கோயமுத்தூர் நகரத்துக்குள்ள போய்
> மால்கள்ல ஐஸ் காபி, பீட்ஸா, பர்கர் சாப்பிட்டு வர்றாங்க. ஏன் நகரத்துலதான்
> காபி ஷாப் இருக்குணுமா? அதான் இங்கேயே கொண்டாந்துட்டோம். இங்கேயும் காபி
> கிடைக்கும். பனை வெல்லம் ஐஸ் காபி, பனை வெல்லம் சுக்குக் காப்பி, அதிமதுரம்
> காபி, திப்பிலி காப்பி, சித்தரத்தைக் காபின்னு விதவிதமா
> திட்டமிட்டுருக்கோமுங்க. சிறுதானியங்கள்ல செய்யப்பட்ட பீட்ஸா, பர்கரு
> கிடைக்குமுங்க. தேர்தல் முடிஞ்சு வந்துப் பாருங்க ஜோரா இருக்குமுங்க”
> உற்சாகமாகப் பேசுகிறார் ரவி.
>
> கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் 33 ஆயிரம் பேர். அனைவரின் அலைபேசி எண்க ளும்
> கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
> தினமும் அதிகாலை அந்த எண்களுக்கு அழகுத் தமிழில் குறுந்தகவலாக வந்து
> விழுகின்றன காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பொன்மொழிகள். கிராம சபைக்
> கூட்டம், போலியோ சொட்டு மருந்து முகாம், மருத்துவ முகாம், ஆதார் அட்டை சிறப்பு
> முகாம், வாக்காளர் அட்டை சிறப்பு முகாம், கோயில் திருவிழா, குப்பை வண்டி வரும்
> நேரம், கோவை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலைத் தகவல்கள்
> ஆகியவை குறுந்தகவல்களாக அனுப்பப்படுகின்றன. குறிப்பாக யானைகள் வரும் தகவல்.
> குருடி மலை அடிவாரத்தில் அமைந்திருப்பதால் வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி
> ஊருக்குள் வந்துவிடும். அப்படி வராமல் இருக்க மலை மீது வனத்துக்குள்ளேயே
> மூன்று இடங்களில் பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் தொட்டிகள்
> கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியும் மீறி யானைகள் ஊர் எல்லையை நெருங்கினால்
> உடனடியாக மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
>
> கிராமத்துக்குள் ஒரு நடுநிலைப் பள்ளி மற்றும் நான்கு ஆரம்பப் பள்ளிகள்
> இருக்கின்றன. அத்தனையும் அசத்தல் ரகம். குறிப்பாக, தொப்பம்பட்டி அரசு
> நடுநிலைப் பள்ளி சுகாதாரத்தில் ஜொலிக்கிறது. பஞ்சாயத்து சார்பில் அழகிய
> வண்ணங்களில் பள்ளிக்கு பெயிண்ட் அடித்து சுத்தமாக வைத்திருக்கிறார்கள். உயரமான
> சுற்றுச்சுவரை கட்டி அதன் மீது வேலி போடப்பட்டுள்ளது. கணனிகள் வாங்கித்
> தரப்பட்டுள்ளது. கழிப்பறைகள் டைல்ஸ் போடப்பட்டு பளிச் என்று இருக்கின்றன.
> பள்ளியின் மேல் நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குறைந்தால் அல்லது
> நிறைந்தால் தானாக இயங்குகிறது தானியங்கி மோட்டார். ஏழை மாணவர்களுக்கு
> தனியாரிடம் ஸ்பான்சர் வாங்கி விளையாட்டுத் துறைகளில் சிறப்புப் பயிற்சிகள்
> அளிக்கப்படுகின்றன. இதோ இன்னும் இரண்டொரு நாட்களில் சர்வதேச ஸ்கேட்டிங்
> போட்டியில் கலந்துக்கொள்ள தாய்லாந்து செல்லவிருக்கிறார் இந்த ஊர் மாணவர்
> நித்திரன்.
>
> ஜொலிக்குது சோலார்!
>
> இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகள் மின் வாரியத்துக்கு
> கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்திருக்கின்றன.
> மின்வாரியத்துக்கு பெரும் சுமை இது. ஆனால், பைசா பாக்கியில்லாமல் மின் கட்டணம்
> கட்டியதுடன், கோவை மாநகராட்சிக்கு சாலை விளக்குகள் அமைத்துக்
> கொடுத்திருக்கிறது குருடம்பாளையம் பஞ்சாயத்து. கோவை - மேட்டுப்பாளையம்
> சாலையில் 128 சோலார் மின் விளக்குகள் பொன்மொழி வாசகங்களுடன் ஜொலிக்கின்றன.
> கிராமத்துக்குள் 200 சோலார் தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. இதன் மூலம் மாதம்
> மூன்று லட்சம் ரூபாய் சேமிக்கிறார்கள்.
>
> கிராமத்துக்குள் திறந்தவெளி சாக்கடை கிடையாது. அதனால் கொசுக்களும் கிடையாது.
> பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நகரங்களே திணறும்போது பஞ்சாயத்துக்குள்
> மினி பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும்
> இயற்கை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்து மலத் தொட்டி நீங்கலான கழிவு
> நீர் அதில் வெளியேற்றப்படுகிறது. அவை நிலத்தடி குழாய்கள் மூலம் ஐந்து
> இடங்களில் வந்துச் சேர்கிறது. அங்கு மணல், கரித்துண்டுகள், கூழாங்கற்கள்
> உள்ளிட்ட ஐந்து அடுக்கு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு மிகப் பெரிய
> குழாய்கள் வழியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது. பாதாள சாக்கடைத்
> திட்டத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர்
> செறிவூட்டல் திட்டம் இது!
>
> குருடம்பாளையம் அதி நவீன கிராமம் மட்டுமல்ல... ஒரு எடுத்துக்காட்டு.
>
> இச்செய்தி பலதரப்பினருக்கும் சென்றடையவேண்டும் என்கின்ற வேட்கையில்
> பகிர்ந்துக் கொள்வதில் இந்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் இளங்கோ ஆகிய
> நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
>
> தேவையற்ற வேலைகளிலும், உபயோகமற்ற செயல்களிலும், ஆரப்பாட்டம், போராட்டம்
> ஆகியவற்றைத தவிர்த்து ஒரு அற்புதமான மௌனப் புரட்சியே செய்து வெற்றியும் கண்ட
> கோவை மாவட்டம், குருடம்பாளைய கிராம சபைத் தலைவர் இரவி அவர்கள், திடக்கழிவு
> மேலாண்மைத் திட்ட வல்லுநர் வேலூர் சீனிவாசன், குருடம்பாளையம் ஊராட்சி
> திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் இளைஞர் கோபி ஆகிய உதாரண புருசர்களுக்கு எனது
> சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல.
>
> இதுவன்றோ வளர்ச்சி! இதுவன்றோ புரட்சி! மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால்
> அற்புதமாகப் பாடியிருந்திருப்பார்.
>
> இதுவே ஒரு திரைப்படத்தில் வந்திருப்பின் வரிவிலக்கு அவார்டு, விழா என்று
> ஆரவாரம் விண்ணை முட்டும். போலிக்குத் தரும் அங்கீகாரம் முற்றிலும் ஒழிந்து,
> உண்மைக்கும் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மரியாதை கொடுக்கும் சமுதாயமாக நாம்
> மாற பிள்ளையார் சுழி போட்ட குருடம்பாளையம் மக்களுக்கும், பெண்களுக்கும்
> கோடானுகோடி நன்றிகள்.
>
> இந்த ஊர் உண்மையில் உலகிற்கே ஒரு வழிகாட்டும்பாளையம்! குருடம்பாளையமன்று.
> இக்கிராம மக்களைப் பார்த்தும் முயற்சி எடுக்காத நாமே குருடர்கள்.
>
> "நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேடபது எதற்கு? நீயென்ன செய்தாய்
> அதற்கு என்று கேட்டால் நன்மை உனக்கு! நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன
> புரிந்தேன்."
>
> பழைய எம். ஜி. ஆர். பாடல் மனதில் இழையோடுகின்றது!
>
> நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கும் இந்த ஊர்மக்களே மகாத்மா காந்தி கண்ட
> கிராம இராஜ்ஜியம் நடத்துபவர்கள்.
>
> எந்த ஊடகமும் வேண்டாம். நமக்கு நாமே ஊடகமாவோம். கதிரவன் போல எங்கும் பரவுவோம்
> செயல்படுவோம்.
>
> இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் மகாதமா.
> பிளாஸ்டிக் கழிவுகளால் சாலைகள் அமைத்த இக்கிராமத்தினரே உண்மையில் நமது
> நாட்டின் உயிர்நாடி.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu%2BGuUhiWLHXxt1Mj%3DwHP6Lj79NG-J6KDpzw5s_qQeV0A%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu%2BGuUhiWLHXxt1Mj%3DwHP6Lj79NG-J6KDpzw5s_qQeV0A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqz%3Djsy5RBiammidjpAbf_p34Vu5tn5G4OGXScOFQrxGw%40mail.gmail.com.

Reply via email to