சரி, அப்படியே செய்து விடலாம்.

2010/4/27 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

> 2010/4/27 suji A <suji87....@gmail.com>:
> > இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில்
> > இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.
> >
>
> தகவலுக்கு நன்றி.
>
> தங்களது launchpad பயனர் பெயரை அவ்வழு அறிக்கைக்கு bug-assignee  ஆக நான்
> சேர்த்துவிடவா ? சரியென்றால் சேர்க்கப்பட்டபின் தங்களது மேற்குறிப்பிட்ட
> தகவலைத் தாங்களே அங்கும் பதிந்தது அதன் பின் நாம் வழு நிலையை (Status ஐ)
> In Progress என மாற்றிவிடலாம். உபுண்டுக்கான பொதி மேம்படுத்தப்பட்ட பின்
> Fix committed என முடித்து விடலாம். பதில் எதிர்பார்க்கிறேன்.
>
> மேலும்  இம் மென்பொருளிற்கான விவரிப்புகளில் திருத்தங்கள்  பெடோரா
> மேலோடையினரால்உள்ளடக்கப்பட வேண்டியுள்ளன. காட்டாக, அவர்கள் தற்போதைய
> விவரிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர் :
>
>
> // iok is Indic Onscreen Keyboard. It currently shows Inscript keymaps
> for following Indian languages.Assamese, Bengali, Gujarati, Hindi,
> Kannada, Marathi, Malayalam, Punjabi, Oriya, Sindhi, Tamil, Telugu. //
>
> அது https://fedorahosted.org/iok/ பக்கத்தில் முதல் கூற்று.
> அப்பக்கத்தில் m17n இல் உள்ள   இன்ஸ்கிரிப்ட் விசைமுகப்புகளுக்கு மட்டுமே
> iok பயன்பாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.
>
> m17n-இன்ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல் xkb க்காக ஆக்கப்பட்டுள்ள
> ஒருங்குறிக்கான (இன்ஸ்கிரிப்ட் மற்றும் இன்ஸ்கிரிப்ட் அல்லாத)
> விசைமுகப்புகளையும் ஏற்கனவே iok கையாளுவதால், தொடர்பான விவரக்
> குறிப்புகள் உள்ள இடங்களில் எல்லாம் திருத்தங்கள் தேவை என
> மேலோடையினருக்குச் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.
>
> மேலும் சில கருத்தேற்றங்களை விரைவில் முன்வைப்பேன்.
>
> ~சேது
>
>
> > 2010/4/16 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
> >>
> >> நான் தாக்கல் செய்துள்ள
> >> https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
> >> வாசிக்கவும்.
> >>
> >> உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான்
> >> கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள
> >> இன்ஸ்கிரிப்ட்) மற்றும்  xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன
> >> இயங்குகின்றன. ஆனால் மேலுமொரு புதிதாக உள்ளடக்கப்பட்ட xkb-Tamil Keyboard
> >> with Numerals மட்டும் iok வழி இயக்கவியலாமை உள்ளது.
> >>
> >> சுஜி மற்றும் ஆமாச்சு  அவ் அறிக்கைக்கு bug-assignee ஆக தங்கள் இருவரில்
> >> ஒருவர் பெயர் முன்வைப்போமா அல்லது வேறு யாராவது எனில் அங்கு அவ்வாறு
> >> நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேனf.
> >>
> >> மேலும் xkb இலும் iok இலும் தமிழ் வி.ப. க்களின் பெயர்கள் சீரமைக்க
> >> வேண்டும் எனவும் கருதுகிறேன். அது பற்றி பின்னர் எனது கருத்துக்களை
> >> எழுதுவேன்.
> >>
> >> ~சேது
> >> --
> >> Ubuntu-l10n-tam mailing list
> >> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
> > --
> > Regards,
> > Suji A.
> >
> > http://suji25.wordpress.com/
> > http://innovativegals.wordpress.com/
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
Regards,
Suji A.

http://suji25.wordpress.com/
http://innovativegals.wordpress.com/
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க