நல்ல முயர்ச்சி. மிகவும் வுபயோகமாக இருந்தது.
On 7/1/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote:
வரைகலை இடை முகப்பினைக் கொண்டு முதலில் தமிழ் கேயுபுண்டு<http://www.ubuntu-tam.org/downloads/tamil-kubuntu-edgy.tar.gz>பொதியினைப் பதிவிறக்கிக் கொள்ளவும். பதிவிறக்கப் பட்ட கோப்புள்ள அடைவிற்குக் கான்கொயரர் மூலம் பயனித்து, கோப்பினைத் தேர்வு செய்து அதன் மீது வலது புறமாக சொடுக்குங்கள். மேலுழும்பும் சாளரத்தில், Extract --> Extract to tamil- kubuntu-edgy என்பதனைத் தேர்வு செய்யுங்கள். பின்னர் விரிக்கப் பட்டு உருவாக்கப் படும் tamil-kubuntu-edgy அடைவினுள் பயனித்து, அனைத்து கோப்புகளையும் தேர்வு செய்ய Ctrl-A சொடுக்கவும். பின்னர் வலது புறமாகச் சொடுக்கி மேலெழும்பும் சாளரத்தில் Kubuntu Package Menu --> Install Package தேர்வு செய்தால் நிரல்கள் நிறுவப் பெற்று, அடுத்த அமர்வில் தமிழ்99 பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். முனையத்தின் துணையுடன் முதலில் தமிழ் கேயுபுண்டு<http://www.ubuntu-tam.org/downloads/tamil-kubuntu-edgy.tar.gz>பொதியினைப் பதிவிறக்கிக் கொள்ளவும். முனையத்தினைத் துவக்கி பதிவிறக்கப் பட்ட கோப்பிருக்கும் அடைவிற்கு cd ஆணையின் துணைக் கொண்டு பயனிக்கவும். பின்னர், $ tar xzvf tamil-kubuntu-edgy.tar.gz ஆணைக் கொடுத்தால் நிறுவப் பட வேண்டிய அனைத்து கோப்புகளும் விரிக்கப் பட்டு தாங்கள் இருக்கக் கூடிய நிகழடைவில் போடப்படும். எனவே இதற்கென தனியொரு அடைவினை உருவாக்கி அதனுள் tamil-kubuntu-edgy.tar.gz னை நகலெடுத்து பின்னர் அவ்வடைவிலிருந்து தாங்கள் இவ்வாணையினை வழங்களாம். கீழ்காணும் ஆணையினைக் கொடுத்தால் அனைத்து டெபியன் பொதிகளும் நிறுவப் பட்டு அடுத்த அமர்விலிருந்து தமிழ்99 உள்ளிட்ட ஏனைய உள்ளீட்டு வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். $ sudo dpkg -i *.deb பி.கு: தமிழ்99 ன் அவசியம் குறித்து அறிய http://amachu.net/blog/?p=41பக்கத்தினை அணுகவும்... -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
