செப்டம்பர் 15 உலகமெங்கும் மென் விடுதலைக்கான நாளாக அனுசரிக்கப் படுகின்றது.
அன்றைய தினம் உலகனைத்திலும் உள்ள குனு/ லினக்ஸ் உள்ளிட்ட கட்டற்ற மென்பொருட்கள் பயனர் குழுக்கள், கட்டற்ற மென்பொருள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். சென்னையில், ஜெயா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 14 ம் தேதி காலை 9 மணிக்குத் துவங்கி இந்நி கழ்ச்சிகள் நடை பெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை என்.ஆர்.சி.பாஃஸின் இயக்குநர் சி.என்.கிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளார். செப்டம்பர் 15 தேதி மாலை குரோம்பேட்டை, எம்.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள , என்.ஆர்.சி.பாஃஸ் மை யத்தில் மாலை 3 மணிக்குத் துவங்கி மென் விடுதலை நாள் கொண்டாடப் பட உள்ளது. கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
