Nalla vutharanam!! 2008/2/11 ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]>:
> பதிப்பும் நெருப்பும்! > > நேற்றுக் கள்ளுக்கடையில் நானிருந்த சமயம் ஒருவன் தனது சிகரெட்டை பற்ற வைக்க > வேண்டி தீப்பொறிக் கேட்டான். தேவையொன்று உருவாகி பொருளீட்டும் வாய்ப்பொன்றும் > உருவாவதை உணர்ந்த நான் பத்து பைசாக்கு பற்ற வைக்க ஒத்துக் கொண்டேன். ஆனால் > அவனுக்கு தீப்பொறியினைத் தந்து விடவில்லை. மாறாக அவனது சிகரெட்டை எரித்துக் > கொள்வதற்கான உரிமத்தினை மட்டுமே வழங்கினேன். அத் தீப்பொறியின் மீதான எமது > உரிமம் அவனை அதனைப் பிறருக்கு தருவதிலிருந்து தடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக > அத் தீப்பொறி என்னுடையதாயிற்றே! அவன் நன்றாகக் குடித்திருந்தான். என்னைப் > பித்துக்குளி என்று கருதியவாறே எமது தீப்பொறியையும் (உரிமத்துடனான) > பெற்றுக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றிருக்கும். அவனது நண்பனொருவன் அவனைப் > பற்றவைக்கச் சொல்ல எனது பதற்றத்தை அதிகப் படுத்தியவனாய் எமது நெருப்பைக் கொண்டு > அவனது நண்பனுக்கு பற்ற வைத்தும் விட்டான். எனக்கு எரிச்சலாய் இருந்தது. > கள்ளுக்கடையின் மறுபுறத்திற்கு செல்ல முற்பட்டேன். எனது எரிச்சலை இன்னும் > அதிகப் படுத்தும் விதமாக அவனது நண்பன் அவனைச் சுற்றியிருந்த பிறருக்கு பற்ற > வைத்தான். சிறிது நேரத்திற்குள்ளாக கள்ளுக் கடையின் அப்பகுதியிலிருந்த > அனையவரும் எமது நெருப்பை எமது அனுமதியில்லாமலேயே பயன்படுத்தத் > துவங்கியிருந்தனர். ஆத்திரம் தலைக்கேறியவனாய் ஒவ்வொருவரின் மீதும் பாய்ந்து > அவர்களிடமிருந்து சிகரெட்டுகளைப் பிடுங்கி தரையில் இட்டு மிதித்து அணைக்கத் > துவங்கினேன். > > விநோதமாகக் கதவருகே இருந்த காவலாளி எமது சொத்துரிமைக்கு சிறிதும் > மதிப்பளியாதவராய் எம்மை இழுத்து வெளியேத் தள்ளி விட்டார். > > --இயன் கிளார்க் > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! > வாழிய பாரத மணித்திரு நாடு! > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > >
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
