ராம்தாஸ் அவர்களே, இதை மின் தமிழில் வெளியிடலாமா?
தேவ் 2009/12/5 ஆமாச்சு|amachu <[email protected]> > நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத் > தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல > வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து > பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில் > கிடைக்க வேண்டும் என்பது தாய்மொழிப்பற்றுடைய எவரும் கொள்ளக் கூடிய > விருப்பமாகும். > > இதனையே நோக்கமாகக் கருதி பல்வேறு மொழிப்பெயர்ப்பு குழுக்களும் பணியாற்றி > வருகின்றன. அவற்றின் மூலம் பங்களிப்போருக்கும் புதிதாய் மொழிப்பெயர்க்க > வருவோருக்கும் அடிக்கடி எழும் கேள்வி ஒரு சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல் > என்ன என்பதே. ஒரே பொருளைக் கொண்ட பலச் சொற்கள் இருக்கலாம் என்ற போதும் அவை ஒரே > பணிச் சூழலில் வெவ்வேறு பகுதிகளில் பிரதிபலிப்பது இயங்குதளத்தை > பயன்படுத்துவோருக்கு அனாவசியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. > > இவற்றை போக்கும் ஒரு முயற்சியாக பெடோரா சமூகம், நாம் குனு லினக்ஸ் பணிச் > சூழல்களை அன்றாடம் பயன்படுத்துகிற போது அதிகம் காண நேரிடும் சொற்களையும் > சொற்றொடர்களையும் தொகுத்து அவற்றுக்கு நிகரான பிறமொழிச் சொல்லாக்க > முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை பெடோரா குழுமத்திற்கே அன்றி அனைத்து > கட்டற்ற மென்பொருள்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் பயனளிக்கக் கூடியவை. > இத்திட்டத்தை பெடோரா குழுமத்தார் Frequently Used Entries For > Localisation (FUEL)[1] என்று அழைக்கிறார்கள். > > இப்பதங்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் கோரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் > பன்னிரெண்டாம் தேதியும் பதிமூன்றாம் தேதியும் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC > அலுவல வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் > நேரடியாக கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை அளிக்க விருப்பமுடையோர் எமது > amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு > செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள > இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி > நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். > > அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் IRC மூலம் கலந்து கொள்ளலாம். > irc.freenode.net வழங்கியின் #fedora-tamil அரங்கின் மூலம் தங்களது > பரிந்துரைகளை வழங்கலாம். இந்நிகழச்சியின் ஏற்பாட்டுக் > காரியங்களிலும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் எம்மை > தொடர்பு கொள்ளவும். இரண்டு நாட்களிலும் அமர்வுகள் காலை பத்து மணிக்குத் தொடங்கி > மாலை ஐந்து மணி வரை நடைபெறும். பரிந்துரைகள் வேண்டப்படும் > சொற்கள் > http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.odsகோப்பில் > கிடைக்கப் பெறுகின்றன. > > ----------- நிகழ்ச்சி நிரல் ----------------- > நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் > பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் > > தேதி: 12/12/2009 & 13/12/2009 > > இடம்: 1) CDAC சென்னை, தரமணி > 2) #fedora-tamil at irc.freenode.net > > நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை > ----------------------------- > > [1] - https://fedorahosted.org/fuel/ & > https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil > > -- > > ஆமாச்சு > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam >
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
