http://www.kaniyam.com/release-21/
வணக்கம். ‘*கணியம்*‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். செப்டம்பர் 30, 2013 அன்று சென்னையில் தமிழ் விக்கிபீடியாவின் பத்தாண்டுகள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2″ வெளியிடப்பட்டது. http://kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். தமிழில் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் கட்டற்ற உரிமத்தில் வெளியிடுவதை பாராட்டி, செல்வா-குமரி அறக்கட்டளையின் பரிசாக, பேராசிரியர் திரு. சி.இரா.செல்வகுமார், பேராசிரியர், வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா அவர்கள் 100 டாலர் (6500 ரூ) அளித்தார். இவர் ஏற்கெனவே, “எளிய தமிழில் MySQL” நூலுக்காக 5000 ரூ நன்கொடை அளித்துள்ளார். திரு.சி.இரா.செல்வகுமார் அவர்களுக்கு எமது நன்றிகள். கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இந்த கணியம் இதழை ‘தமிழ் விக்கிபீடியா’ சிறப்பிதழாக வெளியிடுகிறோம். கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும். நன்றி. ஸ்ரீனி *ஆசிரியர்**, **கணியம் *[email protected] -- Regards, T.Shrinivasan My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
