உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ் ) பீட்டா-1 வெளிவந்தபின், மார்ச் 31
வாக்கில் xkb-data பொதிக்கு மேம்பாடு (1.8-1ubuntu4) வந்தபின், அதை
இற்றைப்படுத்தினால்  ir (இரான்), sy (சிரியா), in (இந்தியா ) மற்றும் lk
(இலங்கை) மொழியிடங்களுக்கான XKB விசைமுகப்புக்களை, XKB விசைபலகைகளுக்கான
விருப்பத்தேர்வு அமைக்கும் செயலியில் சேர்ப்பின் XKB பயன்படுத்த இயலாமை
வழு ஏற்பட்டது.

காட்டாக நமது Tamil Unicode பலகையைச் சேர்க்கையில் ஏற்படும் வழு அறிக்கை
இம் மடலுடன் இணைக்கப்ட்டுள்ள திரைக்காட்சியில் காணலாம். அவ்வாறே
மேற்குறிப்பிட்ட மொழியிடங்களுக்கான எந்தவொரு xkb விசைப்பலகை
சேர்க்கையிலும். வழு அறிக்கைக் காட்டப்படுவதனுடன் சேர்க்கப்பட்ட
விசைபலகைக்கு மாற்றி இயக்கவியலாமை நிலை இருந்தது

சென்ற வாரம் பீட்டா-2 வெளிவரும் முன் அவ்வழு அதன் மூலத்தில் இருந்து
எவ்வாறு ஏற்படுகிறது என்பதை வழு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கவில்லை
ஆதலால் பீட்டா-2 இறுவட்டிலும் வழுவுடனான   xkb-data-1.8-1ubuntu4 தான்
உள்ளடக்கப்பட்டது.

இவ்வழு பற்றிய சில உரையாடல்கள்
(http://www.mail-archive.com/ubuntu-x-s...@lists.launchpad.net/msg57550.html
) நடந்தபின் launchpad வழு அறிக்கை
https://bugs.launchpad.net/ubuntu/+source/xkeyboard-config/+bug/553401
முன் வைக்கப்பட்டு binary பொதியில் திருத்தக் கூடிய படிகள்
எடுத்துரைகப்பட்டன.

பின்னர்   அவ்வழுக்கள் xkb-data வின்  மூலமான xkeyboard-config-1.8 இல்
எங்கிருந்து எவ்வாறு உருவாகுகின்றன என்பதை நான் கண்டறிந்து அவ்வழுக்களை
அகற்றி ஆக்கிய மேம்பாடை எனது Launchpad - PPA வழி வெளியிட்டு,
மேற்குறிப்பட்ட அவ்வழு அறிக்கையில் வழிமுறை அறிவித்தேன். அதற்கு இரு
நாட்கள் பின் (ஏப்பிரல் 13 ) உபுண்டு மென்நிரல் களஞ்சியத்திலும் அவ்வாறு
வழு அகற்றப்பட்ட xkeyboard-config (1.8-1ubuntu6) முலப்பொதி மற்றும்
xkb-data-1.8-1ubuntu6 binary பொதி மற்றும் தொடர்பான பொதிகள் உபுண்டு
மேம்பாடாகச் சேர்கப்பட்டுவிட்டன.

எனவே உபுண்டு 10.04 - அல்பாக்கள், பீட்டா-1, பீட்டா-2 என்பவைகளில்
ஒன்றினாலான இயங்க்குதளம் பயன்படுத்துவோர் திரைக்காட்சி இணைப்பில்
காட்டியுள்ளவாறு வழுநிலைக் காண்பின் xkb-data பொதியை தற்போது Main repo
விலிருக்கும் மேம்பாட்டை இற்றைபடுத்தினால் வழு அகன்று விடும்.

அடுத்த வாரம் வரும் Ubuntu 10.04 Release Candidate அல்லது மாதக்
கடைசியில் வரவுள்ள இறுதியாகம் ஆகியனவற்றிற்கான இறுவட்டுகளில் வழு அகன்ற
xkb-data வே உளக்கடக்கப்பட்டிருக்கும்.

~சேது

<<attachment: xkb-error.png>>

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க