வணக்கம்,

கடந்த வாரத்தில் பயனரின் பார்வையில் புத்தகத்திற்காக - உபுண்டுவில்
மென்பொருள் நிறுவும் வழிமுறைகளை எழுதி வந்துள்ளேன்.

http://ubuntu-tam.org/wiki/index.php?title=பயனரின்_பார்வையில்/புத்தக_உள்ளடக்கம்

பக்கத்தில் "பொதிகள் பராமரிப்பு" எனும் பகுதியின் கீழ் இவற்றுக்கான
இணைப்புக்களைக் காணலாம்.

கவரப் பெற்ற தலைப்புகளாவன:

விண்டோஸில் மென்பொருள் நிறுவலும் உபுண்டு நிறுவலும்

பொதிகள் முன்னோட்டம்

பயன்பாடொன்றை நிறுவும் முறை

பயன்பாடொன்றை நிறுவுதற்கான பிற வழிமுறைகள்

பயன்பாடொன்றை நீக்குதற்கான வழி

புதிய களஞ்சியங்கள் சேர்த்தல்

இணைய வசதி இல்லாத நிலையில் மென்பொருள் நிறுவுகை

மென்பொருள் களஞ்சியங்கள் - ஒரு பார்வை

இவை விக்கியில் எழுதப்பட்டுள்ளதால் தவறுகளைத் திருத்தி மேம்படுத்தி
உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இயற்றப்பட்ட நடையின் புரிதன்மைக் குறித்தும் கருத்துக்களை
எதிர்பார்க்கிறேன். தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு புரியுமளவிற்கு
இருக்கும் என நம்புகிறேன்.

மேலும், நான் பயன்படுத்தும் ஜான்டியில், இணைய வசதி இல்லாத நிலையில்
மென்பொருள் நிறுவுகை பகுதியில் வட்டுக்களை களஞ்சியமாக சேர்ப்பதில் சிக்கல்
நிலவியது. தங்களது கணினிகளிலும் அதே சிக்கல் நீடிக்கிறதா என்பதைச்
சரிபார்த்து சொல்லவும்.

விக்கி தொகுப்பில் அனுபவம் உள்ளோர் இப்புத்தகம் பொலிவுடன் திகழச் செய்ய
உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதனை பல்வேறு வடிவங்களில் (HTML,
Postscript, Pdf, Publish ready) கிடைக்கச் செய்ய உதவும் கருவிகள் குறித்து
அறிந்திருப்பின் தெரியப்படுத்தவும். அவற்றிலும் உதவிகள் தேவைப்படுகின்றன.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க