2008/12/18 balachandar muruganantham <mbchan...@gmail.com>

> சொற் பட்டியலைத் தாண்டி, இன்னும் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. தமிழ்
> விக்கிப்பீடியாவிலிருந்து சொற்பட்டியலை சேர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. இது
> சோதனை தருவாயில் உள்ளது.
>
> சந்திப்பிழைகள், இலக்கணப்பிழைகள் செய்ய அதிக நேரம் செலவாகும். அதனை
> செயல்படுத்த, நேரம் கிடைக்கும் பொழுது நான் தமிழ் இலக்கணம் பயின்று
> வருகிறேன்.சந்திப்பிழைகள், இலக்கண்ப்பிழைகள் கண்டுப்பிடிப்பது அவ்வளவு
> எளிதல்ல.
> அதற்கு நிறைய பங்களிப்பாளர்கள் தேவை.
>

இலக்கணம் அறிந்த தமிழாசிரியரின் உதவியை நாடுவது நன்மை பயப்பதாய் அமையும்.
செல்வம் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்விடயத்தில் இணையத்தின் மூலம்
பங்களிப்புகள் வரவேண்டும் என நாம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை அறிக்கலாம்.
கொஞ்சம் இறங்கி வந்து பணியாற்ற வேண்டும். கணினியே மாணவர்களைத் தாண்டி பொதுவான
புழக்கத்திற்கு இன்னும் வரவில்லை. அதில் குனு லினக்ஸ் - அதில் தமிழ் பயன்பாடு
என்பனவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

தாங்கள் ulagam.net தளத்தில் தமிழர்களை நம்பி இணையத்தில் ஏதாவது செய்ய முடியுமா
எனக் ஆதங்கப்பட்டிருந்தீர்கள்(1). அதற்கும் இங்கிருப்போருக்கும் சற்றே
அவ்வுணர்வு எழ வேண்டும் என்பதற்குமாகவும் பொதுவாக இப்பதிலை அளிக்கிறேன். நமது
பணியின் தேவையிருப்போர் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் இருக்கிறார்கள்
என்பது உறுதி.

அவர்கள் இணைய வசதி அற்றவர்களாக கணினி கூட இல்லாதாவர்களாகவே இன்னும்
இருக்கிறார்கள். நாம் தற்போதைய சூழலில் களப்பணியாற்ற வேண்டியுள்ளது. நாம்
நினைப்பது சாத்தியமாகும் நாள்தான் இங்கே தகவல் தொழில்நுட்ப புரட்சி
ஏற்பட்டதாகச் சொல்லலாம். அதற்காகவே தமிழகத்தை மையமாக கொண்ட யாவர்க்குமான
மென்பொருள் அறக்கட்டளை குறித்து யோசித்து வருகிறோம்.



> சொல் திருத்தியின் கூகிள் குழுமத்தில் சேர ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறேன்.
> தொடுப்பு: http://groups.google.com/group/spellchecker
>


இணைகிறேன்.


>
> அங்கே, தமி்ழ் நன்றாக தெரிந்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் இருக்கின்றனர்.
> நீங்கள் அங்கே சேர்ந்தால், என்ன செய்யலாம் என்று நாம் அனைவரும் ஒன்று கூடி
> முடிவெடுத்து வேலைகளை பிரித்து தொடங்கலாம்.
>


ஆனால், இன்றைய தினத்தில் தொழில்நுட்பம் அறிந்தோருக்கும் பேரிடராய் இருப்பதாக
அவர்கள் சொல்லி நான் கேட்டது தமிழில் தட்டெழுதுவது. இருந்த போதும் அவர்களால்
முடியும். மனம் வர கொஞ்சம் காலம் பிடிக்கும். காத்திருக்கலாம். மற்றோருக்கு
தற்காலிகத்தடையாய் இருப்பது கணினியும் இணைய வசதியும் இல்லாதது. நாம் இணைய
குழுக்கள் வழி பரிமாறிக் கொள்வதைத் தாண்டி மரபான நேரடித்தொடர்பு முறைகளில்
பணியாற்ற வேண்டியிருக்கிறது. காலம் கனியும் என எதிர்பார்ப்போம்.


(1) 
http://ulagam.net/2008/12/05/தமிழ்-மற்றும்-தமிழர்களை/<http://ulagam.net/2008/12/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/>


-- 
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to