in further to the discussion on another thread on fate of MYSQL..

    * கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள்
திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் - தன்னார்வலர்களாகவும் பங்களித்து
வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள
வேண்டும்?

    * ஒரு கும்பனி கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை ஏற்றொழுகினாலும் -
கும்பனி முறையில் உள்ள இக்கொடுக்கல் - வாங்கல் குற்றத்தின் காரணமான -
தன்னை அது இழக்க நேரிடும் போது - அது அதன் பங்களிப்பாளர்களக்கு தரும்
உத்தரவாதம் தான் என்ன? (தற்சமயம் நான் பங்களித்து வரும் உபுண்டு
திட்டமும் ஒருவகையில் இத்தகையது என்கிற போது - எனக்கு நானே எழுப்பிக்
கொள்ளும் கேள்வியுமாகும் இது - ஏற்கனவே சூசேவை நாவல் வாங்கியதால் ஏற்பட்ட
சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…)

    * இவற்றைக் கொண்டு பார்க்கிற போது முற்றிலும் சமூகம் சார்ந்த
முறையால் உந்தப்பட்ட கட்டற்ற மென்பொருள் திட்டங்களே மேலானவையாக - கட்டற்ற
தன்மைக்கு இறுதி வரை உறுதியளிப்பதாக தோன்றுகிறதே! ஆனால் கும்பனிகளைச்
சாராது இவற்றை தொழில் ரீதியாக வெற்றி பெறச் செய்வது எப்படி?


ஆரக்கள்ளின் சன் உட்கொள்கை எழுப்பும் ஐயங்கள்… -
http://kanimozhi.org.in/kanimozhi/?p=281

--

ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to