*மானிட்டர்*

உனது ஒவ்வொரு
நிகழ்வுகளும்
எனது விழித்திரையில்...
*பிராசசர்*

உன் ஓரக்கண்
பார்வை கிடைத்ததும்
பென்டியம் 4 - ஆக
என் இதயம் படபடக்கிறது
GHz வேகத்தில்…

*

*நினைவகம்*

GB கணக்கில்
என் நினைவகத்தை
அதிகபடுத்தினாலும்
உன் நினைவுகளே
முழுவதையும்
ஆக்கிரமித்துக்கொள்கிறது...

*

*பூட்டிங் டிஸ்க் *

ஒவ்வொரு நாளும்
உன் நினைவுகளுடன்
நான் கண்விழிப்பதால்
எனது பூட்டிங் டிஸ்க்
நீயாகிறாய்...



*மதர்போர்ட் *

தாய்மையின் அரவணைப்பில்
சேய்-இன் உற்சாக இயக்கம்
மதர்போர்டில் பிராசசர்...

*

*இணைய கணினி *

"என் உலகம்
எங்கே என தேடிக்கொண்டிருந்தேன்
என்ன அதிசயம்
உலகமே உன்னுள்"
*வைரஸ்*

என் வழக்கமான செயல்கள்
மறந்து போயின - உன்
நினைவுகளையே திரும்பத் திரும்ப
இயக்கி கொண்டிருக்கிறேன்
வைரஸ் தாக்கப்பட்ட கணினியாக

*

*மௌஸ்*

விரல் நுனியில்
நகத்தை மட்டும் பார்த்த நான்
உன்னால் உலகத்தையே
காண்கிறேன்

*

*ROM*

நீ வேண்டாம்
என்று சொன்னவுடன்
உன் நினைவுகளையெல்லாம்
மறந்துவிட என் இதயம்
DRAM அல்ல PROM

*

*விடாமுயற்சி *

கனவுகளை நிஜங்களாக்கும் கம்ப்பைளர் (compiler)

*

*டைனமிக் ராம் *

நொடிக்கு பலமுறை
உன் நினைவுகளால்
என் உள்ளத்தை
புதுப்பித்துக்கொள்கிறேன்

-- 
Cheers,
Balasubramanian.

--~--~---------~--~----~------------~-------~--~----~
___________________________________________________________________

Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!

This group is purely of the Youth, 
                             by the Youth and 
                             for the Youth.

Utilize this group to post your views & messages.
___________________________________________________________________

To post to this Maa Vee Maa Kaa group, send your emails to [email protected]

Regards,
Owner,
Maa Vee Maa Kaa.
-~----------~----~----~----~------~----~------~--~---

Reply via email to