Re: [உபுண்டு_தமிழ ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக் கல்..
On 9/17/07, Abdul Haleem Sulaima Lebbe [EMAIL PROTECTED] wrote: internet Explorer ஜாவா ஸ்கிரிப்ட் செயலாக்கப் பட்டிருக்கின்றதா? இல்லையெனில் இணைப்பினைச் சொடுக்கிச் செல்ல வசதி செய்துள்ளோம். சரி பார்க்கவும். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]மென்பொரு ள் ஏக போகத்தை எத ிர்த்து
எமக்குத் தெரிந்தது, இதன் அடிப்படை படைப்பை ஊக்குவிப்பது. பொது நலத்திற்காக படைக்க வேண்டும். படைப்பவனை ஊக்குவித்தால் அவன் மென்மேலும் படைப்பான். அதனால் சமூகம் பயனடையும். படைப்பவனுக்கு அவன் படைப்பால் வரும் பொருளை (பணத்தை) அனுபவிக்கும் பேற்றிணைத் தருவது patent. பொது நலத்துக்காகத் தான் இதுவும் என்பதால் இதில் கால அளவும் இருக்கிறது. பொதுவாக ஒரு கண்டுபிடிப்புக்கு 20 ஆண்டுகள் பேடன்ட் தருவது வழக்கம். மென்பொருள் துறையில் மாற்றங்கள் நிமிடக் கணக்கில் நிகழும் பொழுது இது சுத்த அபத்தமாக முடியும் எனபது ஒரு வாதம். ஆக, தான் படைத்ததன் பலனை பிறர் அடைய, சில காலத்துக்கு அதன் மீதான அதிகாரம் தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ தரப் படுவது பேடன்ட். இது சுய சிந்தனை, அத்தகைய கண்டுபிடிப்புகள் எதுவும் அதற்கு முன்னால் நடந்திடாதமைக்கான உறுதியான ஆதாரம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மூன்று பிளேட் கொண்ட சவரம் செய்யும் ரேசர் கருவி பேடன்ட் களால் பாதுகாக்கப் பட்டது. அதனைப் போல் 20 ஆண்டுகளுக்கு யாரும் சட்டத்துக்கு உட்பட்டு தயாரிக்க இயலாது. 20 வருடத்துக்குப் பிறகு அது செல்லுபடியாகாது. மீட்பதற்கு வழியுண்டா என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. ஆக சிலக் காலங்களுக்கு போகங்களை படைப்பவன் அனுபவிக்கின்றான். பேற்றினைப் பெறுகின்றான். பேற்றுரிமை சரியாக வருமா? மகப்பேறு மாதிரி முன்னர் ஏதாவது சேர்த்து ஒரு சொல் சரியாக வருமா? -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] தங்கள் கணினிய ினைத் தங்களால் நம்ப முடியுமா?
அணுகவும்: http://www.gnu.org/philosophy/can-you-trust.ta.html -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] குனு அறம் - முத ற் பகுதி - நிறைவ ை நோக்கி...
வணக்கம், கடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் கொண்டிருக்கின்றது. குனுவின் கொள்கைகளை தமிழாக்கம் செய்யத் துணிந்து எமது சிந்தையில் அவசியமாகக் கருதப் பட்ட கட்டுரைகளை முதற்கண் தமிழாக்கம் செய்யலாம் என எண்ணினோம். குனு(2) - கட்டற்ற மென்பொருள் (3) - அதன் கொள்கைகள் (4) - அதன் அவசியம் (5) - குழப்பங்கள் (6) - மென் துறை எதிர்நோக்கும் சவால்கள் (7) - மற்றவை (8) இப்படி இக்கட்டுரைகள் அமைந்திருப்பது நல்லது எனத் தோன்றியதன் விளைவாக, அவற்றை உள்ளடக்கியத் தொகுப்பாக இது இருப்பது நல்லது என நினைத்துத் துவக்கப் பட்ட பணி. இவையனைத்தையும் தொகுத்து http://amachu.net/download/gnu_aram/gnu_aram_v5.odtகோப்பினுள் கொடுத்துள்ளோம். எழுத்துப் பிழைகள், கலைச் சொல் சரிபார்த்தல் முதலிய பணிகள் மீதமுள்ளன. இவற்றை இம்மாத இறுதிக்குள் செய்து விட உத்தேசம். இதனை நல்லதொரு மின்-புத்தகமாக ஆக்க உதவி தேவை. docbook xml மற்றும் Latex இவற்றுள் எதைப் பயன்படுத்திச் செய்யலாம். இவை இரண்டின் பெயர் மட்டுமே தெரியும். இவற்றை அறிந்த ஒருவரின் உதவியினை நாடுகிறோம். குனு/ லினக்ஸ் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சமயங்களில் இக்கோப்பும், இணைப்புகளும் தங்களுக்குத் துணை புரியும் என நம்புகிறோம். அவசியமாயின் அச்சேற்றுவது குறித்தும் ஆராயலாம். (1) https://savannah.gnu.org/projects/wwwta/ (2) http://www.gnu.org/home.ta.shtml (3) http://www.gnu.org/philosophy/free-sw.ta.html (4) http://www.gnu.org/philosophy/shouldbefree.ta.html http://www.gnu.org/philosophy/why-free.ta.html (5) http://www.gnu.org/philosophy/free-doc.ta.html http://www.gnu.org/philosophy/schools.ta.html (6) http://www.gnu.org/philosophy/not-ipr.ta.html, http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html (7) http://www.gnu.org/philosophy/fighting-software-patents.ta.html http://www.gnu.org/philosophy/can-you-trust.ta.html (8) http://www.gnu.org/philosophy/categories.ta.html பி.கு: 1. தங்களுக்குத் தமிழ் மாத்திரமே தெரியும் எனக் கருதிக் கொண்டு இக்கோப்பினை/ இணைப்புகளை வாசிக்கத் துவங்குங்கள். அடைப்புக் குறியில் ஆங்கிலச் சொற்கள் குறிப்பிடப் பட்டிருக்காது. 2. தங்களுக்குப் புரியாத தமிழ் சொற்களை வாசிக்க நேரிட்டால், ஆங்கிலம் முதலிய மொழிகளின் கட்டுரைகளை வாசிக்கும் பொழுது எவ்வாறு அகராதியொன்றின் துணையினை நாடுவீர்களோ அதே போல் தமிழ் அகராதி ஒன்றின் உதவியினை நாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உ.ம்: http://ta.wiktionary.org, http://spreadsheets.google.com/pub?key=pp4av-Ip1XDciqbBDFTR0aA -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] குனு/ லினக்ஸ் இ யங்குதள ஆற்றல் களின் அணிவகுப் பு...
*நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப்பம்! குட்டிக் குழந்தைகள், அன்புத் தோழர்கள் ஆற்றல் மிக்க தொழில் முனைவோர் என அனைவருக்கும் அரியதொரு வாய்ப்பு! விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் விண்டோஸை விரட்டி தைப் பிறந்தக் கையுடன் வழிக் காட்ட நாங்கள் செய்திருக்கும் இவ் வேற்பாடு! என்ன? கட்டற்ற மென்பொருள் மாநாடு அப்டீன்னா? குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு எங்கே? எம் ஐ டி வளாகம், குரோம் பேட்டை, சென்னை எப்போ? பிப்ரவரி 01, 02, 03 விசேஷம்? இது உங்களுக்கானது விவரங்களுக்கு? http://fossconf.in வேறென்ன? அடடே! வல வலன்னு பேசாம! வந்து தான் பாருங்களேன்! * -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! பி.கு: இதைப் பிறருக்கும் பறை சாற்றி உதவாலாமே! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அற ிமுக வகுப்பு - ம ுன்பதிவின் அடி ப்படையில்
நினைவிற்கு.. நேரம்: காலை 9:30 இரண்டு நாட்களிலுமாக பதினெட்டு பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்காக தயார் செய்யப்பட்ட ஆவணங்களை http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/feb/முகவரியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை இத்தகைய நிகழ்ச்சியை நடத்த யோசனையுள்ளது. -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] எழுத்தாளர் சு ஜாதா மறைவு...
வணக்கம், இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html). அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கின்றோம். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]குனு லின க்ஸ் அறிமுக வகு ப்பு..
2008/3/21 ஆமாச்சு [EMAIL PROTECTED]: வணக்கம், கடந்த மாதம் நடந்தது போலவே குனு லினக்ஸ் உலகிற்கு அறிமுகம் பெற விருப்பமுள்ளோருக்காக எதி ர்வரும் முப்பதாம் தேதி ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். நேற்றைய நிகழ்ச்சியில் எட்டு பேர் கலந்து கொண்டனர். -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] கேபசூ நான்கின ் மொழிபெயர்ப்ப ுதவி பயன்பாடு க ெய்டர்...
வணக்கம், கெய்டர் ஒரு அறிமுகம்: http://techbase.kde.org/?title=Projects/Summer_of_Code/2007/Projects/KAider/Introduction -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]Hardy beta இல் த மிழ் எழுத்துக் கள் தெளிவாக உள் ளனவா?
2008/4/16 K. Sethu [EMAIL PROTECTED]: எனது மேற்காட்டிய அமைப்புக்களை தங்கள் கணினியிலும் இட்டு பார்த்துக் கூறுங்கள். மயூரன், இப்போ சரியாக உள்ளதா? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] Anybody t ried remastering ubuntu 7.10
2008/4/23 Muguntharaj Subramanian [EMAIL PROTECTED]: என் அனுபவம் புதுமை போல் இருக்கிறது ;) நீங்கள் screen shots களுடன் ஒரு கட்டுரை எழுதினால் என்னைப் போல் முயற்சிப்போர்க்கு உபயோகமாக இருக்கும். நினைத்த ஒன்றுதான். நாளை ஹார்டி வருகிறது அதைக் கொண்டே செய்துபார்க்கலாம். இல்லையெனில் கட்ஸி கட்சி! :-) -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] விண்டோஸிலிருந ்து உபுண்டு நிற ுவும் முறைக்கு ஆவண உதவி
வணக்கம் நண்பர்களே, விண்டோஸை விட்டொழிச்சு பல மாசங்கள் ஆச்சு. ஆனால் Wubi பயன்படுத்தி விண்டோஸின் உள்ளிருந்தே உபுண்டு நிறுவிக் கொள்ள இயலும் என உறுதியாக அறிந்தேன். இன்னும் விண்டோஸ் பயன்படுபவராக தாங்கள் இருந்தால் இம்முறையை பயன்படுத்தி உபுண்டு நிறுவும் முறையை ஆவணமாக்க இயலுமா? நமது விகியை பயன்படுத்துங்க அல்லது பதிவிட்டு அனுப்புங்க. கணிமொழியின் இந்த மாத இதழில் கூட பிரசுரிக்கலாம். யாராச்சும் செய்ய இயலுமா? -- அன்புடன், ஆமாச்சு. -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்]மாதாந்திர கூடுதல் 03-03-2012
வணக்கம், முன்னர் MIT வளாகத்தில் உள்ள AU-KBC ஆராய்ச்சி மையத்தில் மாதந்தோறும் கட்டற்ற மென்பொருள் பற்றிய கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வந்ததை இங்குள்ள பலரும் அறிவீர்கள். அதனை மறுபடியும் தொடங்குகிறேன். வரும் மார்ச் மாதம் தொடங்கி முதல் சனிக்கிழமைகளில் இது நடைபெறும். கூடுமானவரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அதற்காக செய்ய வேண்டியன, செய்யப்பட்டவை என்ன, யாரால் என்ன செய்ய முடியும் போன்ற அலகுகளினடிப்படையில் இந்நிகழ்வுகள் இனி அமையும். வரும் 03-03-2012 அன்று மதியம் மூன்று மணி தொடங்கி 5 மணி வரை நடைபெறும். யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையினால் இந்நிகழ்வு வருங்காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்படும். இடம்: ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ், F2 பிளாக் A, சூரஜ் நிவாஸ், 16/17 ஸ்டேஷன் பார்டர் ரோடு, குரோம்பேட்டை, சென்னை - 600044. நிகழ்வின் நிரலை விக்கியில் இட்டு பகிர்ந்து கொள்கிறேன். விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். -- ம. ஸ்ரீ ராமதாஸ் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்]இன்றையக் கூட்டம்..
இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 irc.freenode.net இல் yavarkkum அரங்கிலும் இருக்கலாம். தற்காலிகமாக சேது, திவா கூறிய yavark...@gmail.com கணக்கு மூலமும் தொடர்பாடலாம். பி. கு: இங்கே மின்வெட்டு நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னர் மாலை 5-6 இருந்தது. இப்போது மாலை 4-6 மாற்றியுள்ளதாகக் கேள்வி. உறுதி செய்கிறேன். பொதுவான விவரம்: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meetredirect=no -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]இன்றையக் கூட்டம்..
On 03/03/2012 01:53 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் wrote: இன்றைய தினம் நடைபெறும் யாவர்க்கும் அறக்கட்டளையின் கூட்டத்திற்கான இணைப்பு: http://www.yavarkkum.org/wiki/index.php?title=Monthly_Meet_2012_03_03 நேற்றைய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் மேற்குறிப்பிடப்பட்ட பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த முறை கூகுள் ஹேங்கவுட்டில் தொலைவிருந்தும் கலந்து கொள்ளும் படி ஏற்பாடு செய்கிறேன். irc.freenode.net இல் #yavarkkum மூலம் இணையுங்கள். -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] தீர்த்தமலை - தக வல் தொழில் நுட் ப பயிற்சி மையம் திறக்கப்பட்டது
03 பிப்ரவரி 08, தீர்த்தமலை. தருமபுரி மாவட்டம். மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை, அரூர் சார்பில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையம் தீர்த்தமலையில் திறக்கப்பட்டது. பயிற்சி மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ. அமுதா திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. டில்லி பாபு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. நஜ்மல்ஹோடா ஆகியோர் முன்னிரை வகித்தனர். இந்திய தொழிற் சங்க மைய தலைவர் திரு ஏ சவுந்தரராஜன் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாப் பேருரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கணினி பயிற்சி மையத்தின் செலவினை மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கட்டற்ற மென்பொருள் புத்தகத்தினை மாவட்ட ஆட்சியர் வெளியிட காவல் துறை கண்காணிப்பாளர் பெற்றுக் கொண்டார். இரண்டாயிரத்திற்கும் மேலான ஊர்ப்பொது மக்களும் பெரியோர்களும் பள்ளி மாணாக்கரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி சனி ஞாயிறுகளில் உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியை வழங்கலாம் என உபுண்டு தமிழ் குழுமம் கருதுகிறது. அதற்கு தன்னார்வலர்களின் ஒத்துழைப்பையும் அனைத்து வகையான ஏனைய உதவிகளையும் நாடுகிறது. மாதத்தில் ஒரு வாரத்தில் உங்களால் தீர்த்தமலைக்கு சென்று பாடங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமா? வேறு எவ்வகையில் தங்களால் உதவ முடியும்? தாங்கள் பின்தங்கியோர் என்ற எண்ணம் புரையோடிக்கிடக்கும் இம் மக்களின் மறுமலர்ச்சிக்கு முன்வர விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்? இந்நிகழ்ச்சியின் விரிவான ஏற்பாட்டினைக் கவனித்துக் கொண்ட பாலாஜி, குமார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
[உபுண்டு_தமிழ்] இணையரங்க கூடல ்..
வணக்கம், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ள இணையரங்க கூடலுக்கான நினைவு மடல் இது. ஜான்டி ஜாகலோப் வெளிவந்துள்ள சூழலில் - பணி தொடங்க உகந்த நேரமாய் கருதுகிறோம். தன்மயமாக்கப்பட்ட வட்டு வடிவமைப்பு நாளைய உரையாடலின் கருப் பொருளாக அமையும். வழங்கி: irc.freenode.net அரங்கம்: #ubuntu-tam அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam