தொ(ல்)லைக்காட்சி ”*நாளைக்கு என் காதலிய ஒருத்தன் பொண்ணு பாக்க வர்ரான். அவன், வர்ர வழியிலயே லாரியில அடிபட்டு செத்துறனும்*” - அண்ணன் (என்று நினைக்கிறேன்)
“*டேய்..டேய். டேய்.. இப்படியெல்லாம் கொடூரமா யோசிக்காதடா*” - தங்கை (யாக இருக்கலாம்!) “*அவன் லாரியில அடிபட்டு சாகுறது கொடூரம் இல்லடி.. நான் அவன் கழுத்த நெரிச்சுக் கொன்னாதான் அது கொடூரம்*” - அண்ணன் “*சரி.. அவன் சாகட்டும்(!).. உனக்கு எப்படி உன் காதலி கிடைப்பா!? அவதான் உன்னக் கட்டிக்கிக்க சம்மதிக்க மாட்டாளே!?*” - தங்கை ” *நான் ஏன் அவகிட்ட சம்மதம் கேட்கப் போறேன் (அடப்பாவி, அவ உன்னக் காதலிக்கவே இல்லையா?!!) அவ அப்பன்கிட்ட நான் பேசிக்கிறேன்*” - அண்ணன். “*அவர் (அப்பாடியா, தங்கச்சி கொஞ்சம் மரியாதை குடுக்குறா!) மட்டும் எப்படி சம்மதிப்பாரு?*” - தங்கை “*நான் போய், ‘மாமா..மாமா.. ஒழுங்க உம் பொண்ண எனக்குக் கட்டிக்குடு.. இப்படி பொண்ணு பாக்க வந்தப்பவே மாப்பிள்ள லாரியில அடிபட்டு செத்துட்டான்னா, உன் பொண்ண யார் கட்டிப்பா!?’ அப்டின்னு சொன்னா பொண்ணக் குடுத்துட்டுப் போறாரு (இன்னும் அந்த மாப்பிள்ள பொண்ணு பாக்கவே வரல.. அதுக்குள்ள அவனுக்கு பால் ஊத்தி, அடுத்தக் கல்யாணத்தப் பத்தி பேச ஆரம்பிச்சிட்டானுங்களே!)*” - அண்ணன் —– மேல நடந்தது, ஒரு விளம்பர இடைவேளைக்காக, *கலைஞர்* தொலைக்காட்சி பக்கம் ஒதுங்குனப்ப எனக்கு நடந்த கொடூரம்(!). ஒரு அஞ்சு நிமிஷம்தான் அந்த சீரியல பார்த்து இருப்பேன். அதுக்கே எனக்கு தலை சுத்தி மயக்கம் வராத குறைதான். தமிழ்நாட்டுத் தாய்க்குலங்கள் எல்லாம் எப்படித்தான் தாங்குறாங்களோ! [image: :(] வர, வர சீரியல்கள் பண்ற அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்ல. ரெண்டு நிமிஷம் காட்ட வேண்டிய காட்சிய ரெண்டு எபிசோடுக்கு இழுக்குறது, ஒரே பிண்ணனி இசைய, சவுண்ட மட்டும் கூட்டி,கம்மி பண்ணி, பல காட்சிகளுக்கு பயன்படுத்துறது, ஒரு கதைக்கு கிளைக்கதை, கிளைக்கதைக்கு குட்டிக் கதை, அதுல ஒருல முழுக் கதை அப்படின்னு குறைஞ்சது ஒரு ரெண்டு வருஷமாவது ( குறைச்சலா சொல்றேனோ.. லேடீஸ்! பிளீஸ் கரெக்ட் திஸ்! ) இழுக்க வேண்டியதுன்னு கொடுமை தாங்கல. இது ஒரு பக்கமிருந்தா, இன்னொரு பக்கம் மார்க்கெட் இல்லாத நடிகர்கள நாட்டாமையா இருங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்து, மார்க் போட்டுக்கிட்டு இருக்காங்க. எந்தத் தொலைக்காட்சியப் பார்த்தாலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான். கேட்டா, தொழில் போட்டியாம். முந்தி அட்டைய எடுத்துட்டா, ஆ.வி.யும், குமுதமும் ஒண்ணுதான்னு சொல்லுவாங்க. இப்ப இத தொலைக்காட்சிகளுக்கும் பயன்படுத்தலாம். சேனல் சின்னத்த மறைச்சிட்டு அதுல வர்ர நிகழ்ச்சிகளப் பார்த்து அது என்ன தொலைக்காட்சின்னு கண்டுபுடிக்கறவங்களுக்கு, ஒரு புதுப்பாட்டு (நாயகன் ஒக்கேவா!?) டெடிகேட் பண்ணலாம். சரி, செய்திகளாவது நல்லா இருக்கும்ன்னு பார்த்தா, அது அந்தந்த கட்சிகளோட கொள்கை/சாதனை/போதனை விளக்க உரைகளாத்தான் இருக்கு. விஜய் டிவி ஒண்ணுதான் கட்சி சார்பில்லாம இருக்கு (இன்னும் வாய்ப்பு கிடைக்கலயோ!), ஆனா அதுல செய்திகளே கிடையாது! இப்படி இருக்குறப்ப, ஜெயா செய்திகள் அரசாங்கத்தத்..ஸ்ஸ்.. சாரி.. மைனாரிட்டி அரசாங்கத்தத் திட்டுறதுக்கும், கலைஞர் செய்திகள் கலைஞர் கவிதைகளுக்கும், சன் செய்திகள் யாரத் திட்டுறது, வாழ்த்தறதுன்னே புரியாம, ஒரு மார்க்கமாவும்தான் போய்க்கிட்டு இருக்கு. [image: :(] இந்த கூத்துக்கு நடுவுல, கேப்டன் டிவி வேற வரப்போவுதாம்! வாழ்க தமிழ்நாடு! வளர்க டமில்! -- Service Above Self cnu.pne
