------------------------------ அன்பர்க்கு வணக்கம். --------------------------------- சனீஸ்வரர் ஸ்தலம்- வட திருநள்ளாறு ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி ஆலயம். பொழிச்சலூர் சென்னை 600 074. பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து 3.கி.மீ.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேளாளர் விவசாயம் செய்யும் போது ஏர் முனையில் கண்டு எடுக்கப்பட்டு பூஜித்து வந்த சுயம்பு லிங்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். சோழ மன்னர் காலத்தில் கஜ பிரஷ்ட விமான அமைப்புடன், சிவலிங்கம் வடிவில் கட்டப்பட்ட இந்தக்கோயிலில் ஈசன் கிழக்கு திசை பார்து இருப்பதும், அம்மன் தெற்குத் திசை நோக்கி இருப்பதும் வடக்குப் புறம் ராஜ கோபுர வாசல் இருப்பதும் ஒரு சிறப்பு அம்சம். இமையம் விட்டு பொதிகை மலை நாடி தவம் புரிய வந்த வழியில் அகத்திய முனிவர் இங்கு சில காலம் தங்கி பூஜைகள் செய்து வந்ததால், அகத்திய முனிவருக்கு இறைவன் அகஸ்தீஸ்வரர் ஆகவும், இறைவி ஆனந்தவல்லி யாகவும் காட்சி யளிதுள்ளனர். இங்கு சனி பகவான் தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள "நள்ளார்" தீர்த்தம் உண்டுபண்ணி சிவபெருமானை வழிபட்டுள்ளதால் சனிபகவான் இவ்வாலயத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். வட தமிழ்நாட்டில் நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றான சனி பகவான்தலமாக வடதிருநள்ளாறு என அழைக்கபடுகிறது. ----------------------------------------------------------- மகிழ்ச்சியை நாளும்வழங்கும் மந்தன் சனிபகவான் கவசம். -------------------------------------------------------------- கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும் ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன் அருள் கேட்டு வணங்குகின்றேன் ஆதரித் தெம்மைக் காப்பாய். பொருளடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்.............(1) ஏழரைச் சனியாய் வந்தும், எட்டினில் இடம் பிடித்தும், கோளாறு நான்கில் தந்தும், கொண்டதோர் கண்ட கத்தில் ஏழினில் நின்ற போதும், இன்னல்கள் தாரா வண்ணம் ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!......(2) பன்னிரு ராசிகட்கும் பாரினில் நன்மை கிட்ட, எண்ணிய எண்ணம் எல்லாம். ஈடேறி வழிகள் காட்ட, எண்ணெயில்குளிக்கும் நல்ல ஈசனே உன்னைத் துதித்தேன் புண்ணியம் எனக்குத் தந்தே புகழ்கூட்ட வேண்டும் நீயே!...........(3) கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய் ! இரும்பின் உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்! அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்சி கொள்வாய்! பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!.........................(4) சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய் அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்ரட்டாதி, இனிதே உன் விண்மீனாகும் எழில்நீலா மனைவி யாவாள் பணியாக உனக்கு ஆண்டு பதொன்பதென்று சொல்வார்...............(5) குளிகனை மகனாய்ப் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்! எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்! விழிபார்த்துப் பிடித்துக் கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச்செல்வாய் துணையாகி அருளைத் தாராய்...........(6) அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த மன்னனே! சனியே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்! உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே மன்னர்போல் வழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்.......................(7) மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா! தந்ததோர் கவசம் கேட்டே சனி என்றும் எங்கள் ஈசா! வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு! எந்த நாள் வந்தபோதும் இனிய நாள் ஆக மாற்று!.....................(8) -------------------------------- அன்புடன் வெ. சுப்பிரமணியன், ஓம். ஓம் .
