சின்னஞ்சிறு இடைச்சி அவள் வயதில் சிறிய ஓர் இடைப்பெண். அவளுடைய அண்ணன் மாடு மேய்ப்பவன். அவள் தன் ஊரான மதுரையை விட்டுத் தில்லை நகரில் உள்ள ஒருவனுக்கு மனைவியாகிப் போனாள். அந்த ஒருவனோ ஆடு மேய்ப்பவன். அவ்வாறு ஆட்டுக் காரனுக்கு மனைவியாகியவளுக்கு அன்றாடப் பணி அங்கும் இங்கும் ஓடித்திரியும் ஆட்டுக் குட்டிகளை மறித்து மந்தைக்கு கொண்டுவருவது தான். அதற்கென அவள் கோட்டானைப் போல ஒரு பிள்ளையையும் பெற்றாள். ஆட்டுக் கழுத்தில் உள்ளதைப் போன்று ஒரு மணியையும் தன் இடுப்பில் கட்டிக் கொண்டாள். மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோனுக்குப் பெண்டுஆயினாள்-கேட்டிலையோ! குட்டிமறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள் கட்டிமணிச் சிற்றிடைச்சி காண். ஐயே! ஒரு பெண்ணைக் கேவலப்படுத்துவதற்கு இப்படி ஒரு பாட்டுத் தேவையா? அதுதான் இல்லை. மாட்டுக் கோன் - பசுக்களைக் காத்த கோபாலனின் தங்கையாகிய பார்வதிதேவி திருமணம் செய்து கொண்டு மதுரைவிட்டு சிதம்பரம் போனாள். அவளின் கணவனோ ஆட்டுக்கோன் - ஆடலரசன்- நடராஜன். அவள் இல்வாழ்க்கை நடத்தி முதல் பிள்ளையாக ஒரு கோட்டானை-ஒரு கோட்டு ஆனையை- ஒற்றைத் தந்தத்தையுடைய ஆனைமுகக் கடவுளைப் பெற்றாள். எதற்காக? குட்டி மறிக்க- நாம் தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதற்காக. அந்த விநாயகப்பெருமானைப் பெற்றவள் விலை மதிப்பற்ற மாணிக்க மணிகள் கோர்த்துச் செய்யப்பட்ட மேகலை எனும் ஒட்டியாணத்தை அணிந்த சிற்றிடைச்சி- சிறிய இடையினளான பார்வதி தேவி.
காவி காளமேகம். செய்தி மூலம் தர்மச்சக்கரம். -=-=-=-=-=-=-=-=- அமைதியைத் தேடியும்..... <http://news-thf.blogspot.com/> Prasdent's Tamiz kavithai on 8-6-04 100 கோடி இந்தியர்களுக்காக கலாம் பாடிய தமிழ் கவிதை புதுதில்லி, ஜூன் 8: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது உரையின் துவக்கத்தில், 100 கோடி இந்திய மக்களுக்காக இறைவனிடம் தமிழ் கவிதை வடிவில் வேண்டினார். ஞாயிற்றுக்கிழமை காலை நடைப் பயிற்சியின்போது அவரது மனதில் உருவான கவிதை இதுதான்: நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன். எங்கு இருக்கிறது என் லட்சிய சிகரம் இறைவா? நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன். எங்கு இருக்கிறது அறிவுப் புதையல் என் இறைவா? நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கு இருக்கிறது அமைதித் தீவு இறைவா? இறைவா, 100 கோடி மக்கள் லட்சிய சிகரத்தையும் அறிவுப் புதையலையும் இன்ப அமைதியையும் உழைத்து அடைய அருள்வாயாக! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஸ்ரீ அப்துல்கலாம் குடியரசுத் தலைவர். -=-=-=-=-=-=-=-=-=-=---=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <http://www.blogger.com/email-post.g?blogID=460398894909162828&postID=1161531196921249831> <http://www.blogger.com/post-edit.g?blogID=460398894909162828&postID=1161531196921249831> <http://news-thf.blogspot.com/2009/10/blog-post.html> ஓம். மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது உண்மையா? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~` மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று முதல் பார்வையில் நமக்குத் தோன்றலாம். மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனத்துக்குள் அடக்கி வைப்பதனால் நம்ம்டைய இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு என்று நாம் இயல்பாக எண்ணுவதும் கருத்தில் கொள்ளவேண்டியதே. நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றிவிடுவோமானால், விறைப்பிலிருந்து விடுபட்டு உடலுக்கும் மனததுக்கும் நிம்மதி பிறக்கும் என்று நாம் அறிந்ததுண்டு. ஆனால், மன்னிக்கிறவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒடுக்கி வைத்திருந்தும் நீடித்த ஆயுளைப் பெறுவான் என்பதிலும் சாஸ்த்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.பாபம் மனிதத் தன்மைக்கு உரியதும், மன்னிப்பு தெய்வத்தன்மைக்கு உரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டவர் அமெரிக்காவின் மிசிகன் பல்கலைக் கழக விஞ்ஞானி டாக்டர் லாரன் எல்.டாசன்ட் என்பவரே, ஒருவருக்கு மன்னிப்பு அளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவரின் உள்ளத்தில் உருவாகின்றதால் அவர் மகிழ்வுறுகின்றார். ஆனால், தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரைத் துரத்திவருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள். மகிழ்வுற்ற மனதுடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே அந்த விஞ்ஞானி தன் கண்டுபிடிப்புகளின் சாரமாக வெளியிட்டுளார். நன்றி ’ஓலைச்சுவடி’ டாக்டர் வெங்கானூர் பாலகிருஷ்ணன். ஓம்.சுப்பிரமணியன் ஓம்.
