*< * *: * * * * வைஷ்னவன் என்போன் யார்? * *-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- * * (நாமக்கல் கவிஞர்) * * பல்லவி * *வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின் வகுப்பேன் அதனைக் கேட்பீரே!........(வை) * ** * சரணங்கள் * *பிறருடைய துன்பம் தனதென எண்ணும் * * பெருங் குணத்தவனே வைஷ்ணவனாம்* *உறுதுயர் தீர்த்ததில் கர்வங்கொள்ளான்* * உண்மை வைஷ்னவன் அவனாகும்* *உறவென மனிதர்கள் உலகுள யாரையும்* * வணங்குவன் உடல் மனம் சொல் இவற்றால்* *அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்* * அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.........1* ** *விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை* * விளங்கிட ஆசைகள் விட்டவனாய்* *ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென* * உணர்வான் வைஷ்ணவன் தன் நாவால்* *உரைப்பதில் பொய்யிலன் ஒருபோதும் அவன்* * ஊரார் உடைமையைத் தொடமாட்டான்* *வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ* * அவனே உண்மை வைஷ்ணவனாம்......2* ** *மாயையும் மோகமும் அணுகாத வனாய்* * மனதினில் திடமுள வைராக்யன்* *நாயகனாகிய ஸ்ரீ ராமன் திரு* * நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து* *போயதில் பரவசம் அடைகிற அவனுடை* * பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்* *ஆயன யாவையும் அடக்கிய க்ஷேத்திரம்* * ஆகும் அவனே வைஷ்ணவனாம்....................3* ** *கபடமும் லோபமும் இல்லாதவனாய்* * காம க்ரோதம் களைந்தவனாய்* *தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்* * தரிசிப்பவரின் சந்ததிகள்* *சுபமடைவார்கள் எழுபத்தோராம்* * தலைமுறை வரையில் சுகமுறுவர்* *அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்* * அலைகடல் நீநதிக் கரைசேர்வார்..................4* * (வை)* ** *
வெ.சுப்பிரமணியன் ஓம் * ** அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம். ** * *
