ஓம்.
அன்புடையீர்! வணக்கம்.
காந்தி அஞ்சலி என்ற தலைப்பிட்டு, நாமக்கல் கவிஞர் எழுதிய நூல், கோயம்புத்தூர்
கவிஞர் பதிப்பகம் வெளியீடு, மூன்றாம் பதிப்பு, ஐப்பசி மாதம் மன்மத ஆண்டு விலை
ரூ 1-0-0.
எளிமையான சொற்களால் நெய்து வண்ணமயமாகப் படைக்கப்பட்டிருக்கும் அதன் நேர்த்தி
மிகவும் சிறப்புடையது.*
வையகம் வாழ்த்தும் காந்தி*
--------------------------------------------------
அடிமையின் அச்சம் போக்கி
அச்சத்தை அடிமையாக்கிக்
குடிகளைக் கோன்களாக்கி
கோன்களைக் குடிகளாக்கி
மடமையை மதியாய் மாற்றி
மதிக்கும் ஓர் புதுமை கூட்டித்
திடமுறச் செய்த காந்தி
திருக்கதை மறக்கலாமா?..........(1)
மேழியைச் செங்கோலாக்கிச்
செங்கோலை மேழியாக்கி
ஏழையின் துயரம் நீக்கித்
துயரத்தை ஏழையாக்கிக்
கோழையை வீரனாக்கி
வீரத்தில் கொலைகள் நீக்கும்
வாழிய காந்தி நாமம்
வையகம் உள வரைக்கும்.............(2)
தூய்மையின் துணிவுண்டாக்கித்
துணிவினைத் தூய்மையாக்கி
வாய்மையின் வறுமை போக்கி
வறுமையும் வாய்மை காக்கத்
தீமையை தீமையாலே
தீர்த்திட முடியாதென்று
தாய்மையே செய்த காந்தி
தவம் செய்த தவமாம் அன்றோ...........(3)
உள்ளத்தைக் கோயிலாக்கி
உண்மையைத் தெய்வமாக்கிக்
கள்ளத்தைக் கடிந்து நீக்கிக்
கருணையின் காட்சிகண்டு
எள்ளொத்த ஆசையின்றி
'என்கடன் பணியே' என்ற
தெள்ளுற்ற தியாகி காந்தி
கண்கண்ட தெய்வமன்றோ......................(4)
அன்பினைத் தகழியாக்கித்
அறிவினை நெய்யாய் வார்த்து
வன்புலக் காம மாதி
வர்க்கத்தைத் திரியாய் வைத்துச்
செம்பொருள் காணும் தூய்மைச்
செழுங்கனல் பற்றச் செய்து
இன்பருள் கருணை ஜோதி
ஏந்திடும் காந்தி நாமம்..........................(5)
வஞ்சமும் பகையும் போரும்
வையகம் முழுதும் ஓங்கிப்
பஞ்சமும் பசியும் நோயும்
படுத்திடும் கொடுமை நீங்கத்
தஞ்சமொன்றுண்டோ காந்தி
தந்துள வழியை விட்டால்
அஞ்சலி செய்வோம் காந்தி
அண்ணலின் அருளைப் போற்றி.............(6)
காந்தியை மறந்துவிட்டால்
கதிநமக் கில்லை கண்டீர்
சாந்தியை இழப்போம் மக்கள்
சமரச வாழ்வு குன்றும்
சேர்ந்திடும் தீமை யாவும்;
திரும்பவும் அடிமை வாழ்வு
நேர்ந்திடல் ஆகும் உண்மை
நித்தமும் நினைக்க வேண்டும்..................(7)
-=-=-=-=-=
வெ.சுப்பிரமணியன் ஓம்
2009/12/12 Geetha Sambasivam <[email protected]>
> கவிதையின் தமிழாக்கம் பற்றிய கருத்தை நான் சொல்லவில்லை. கவிதையைப் படிச்சதுமே
> வைஷ்ணவ ஜனதோ நினைவில் வந்தது என்று கூறி உள்ளேன். ஆகவே என் கருத்து வேறே. இப்போ
> அதில் இறங்கவில்லை. நன்றி குமரன். பல மாதங்கள் கழிச்சுச் சந்திக்க
> நேர்ந்ததுக்கும், கருத்துக்கும் வாழ்த்துகள்.
>
> 2009/12/12 Kumaran Malli <[email protected]>
>
>
>> வைஷ்ணவ ஜனதோ பாடலின் அருமையான தமிழாக்கத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
>> ஐயா.
>>
>> எந்தப் பொருள் மாறிப் போய்விட்டது என்று வருந்துகிறீர்கள் கீதாம்மா?
>> புரியவில்லையே. விஷ்ணு பக்தன் வைஷ்ணவன் என்ற பொருள் மாறிப் போய்விட்டதா, வைஷ்ணவ
>> ஜனதோ பாடலின் ஏதோ ஒரு வரி தவறாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறதா, வேறு ஏதாவதா?
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
>> to visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to [email protected]
>> To unsubscribe from this group, send email to
>> [email protected]
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
> post to this group, send email to [email protected]
> To unsubscribe from this group, send email to
> [email protected]
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
>