2011/3/9 ramanujam thiruvenktasamy <[email protected]>
> > [image: > PDF]<http://savukku.net/index.php?view=article&catid=10%3A2010-10-16-14-42-56&id=506%3A2011-03-09-02-56-53&format=pdf&option=com_content&Itemid=2> > [image: > அச்சிடுக]<http://savukku.net/index.php?view=article&catid=10%3A2010-10-16-14-42-56&id=506%3A2011-03-09-02-56-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=2> > [image: > மின்-அஞ்சல்]<http://savukku.net/index.php?option=com_mailto&tmpl=component&link=aHR0cDovL3NhdnVra3UubmV0L2luZGV4LnBocD9vcHRpb249Y29tX2NvbnRlbnQmdmlldz1hcnRpY2xlJmlkPTUwNiUzQTIwMTEtMDMtMDktMDItNTYtNTMmY2F0aWQ9MTAlM0EyMDEwLTEwLTE2LTE0LTQyLTU2Jkl0ZW1pZD0y> > புதன்கிழமை, 09 மார்ச் 2011 > இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று நான்கு > நாள்களுக்கு முன்பு பிரிந்த தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போது மீண்டும் > சமரசமாகிக் "கை' கோத்திருக்கிறது. ""நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் > வைப்பதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், தங்களது ஆறு > அமைச்சர்களும் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்யப் போவதாகவும் > அறிவித்த தி.மு.க. தலைமை, இப்போது காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள் > அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பது, காங்கிரஸôர் > மத்தியில் மகிழ்ச்சியையும், தி.மு.க.வினர் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தி > இருப்பதில் ஆச்சரியம் இல்லை. > > > ""காங்கிரஸ்காரர்களை பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடிப் பார்க்க வேண்டும்'' > என்று வெளிப்படையாகவே விமர்சித்த தி.மு.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான > இ.ஏ.பி. சிவாஜியில் தொடங்கிப் பெருவாரியான தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சி > தங்களுக்கு ஒரு சுமை என்று கருதும் நிலையில், தி.மு.க. தலைமை எப்பாடுபட்டாவது > காங்கிரஸ் உறவைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது ஏன் என்பதுதான் > பலருக்கும் புதிராக இருக்கிறது. > > > ""கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா?'' > என்று முதல்வரிடம் கேட்டதற்கு, "அதுவும் ஒரு காரணம்' என்று முதல்வர் > பதிலளித்தது முதலே, காங்கிரஸ் - தி.மு.க. உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக் > காரணம், தொகுதிப் பிரச்னை அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட > விசாரணைதான் என்றும் தில்லி வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது. > > > அமைச்சர்கள் ராஜிநாமா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குப் பிரச்னைகள் > அடிப்படையிலான ஆதரவு என்று தி.மு.க. அறிவித்தவுடன், காங்கிரஸ் தலைமை பயந்து > போய் சமரசம் பேச சென்னைக்குத் தனது தூதுவரை அனுப்பும் என்று எதிர்பார்த்த > தி.மு.க. தலைமைக்கு ஒரே அதிர்ச்சி. காங்கிரஸ் தலைமையிடமிருந்து எந்தவித > சமிக்ஞையும் வரவில்லை என்பது மட்டுமல்ல, கிணற்றில் போட்ட கல்லாகப் பிரதமர் > அலுவலகம் கூட இதைப் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெüனம் > சாதித்துவிட்டது. > > > தங்களது அறிவிப்பு வெளியானவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்தோ, சோனியா > காந்தியிடமிருந்தோ தொலைபேசி வரும் என்று காத்திருந்த முதல்வருக்கும், அவரது > குடும்பத்தினருக்கும் பெருத்த ஏமாற்றம். வேறு வழியே இல்லாமல் மத்திய நிதித் > துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மூலமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைத் > தொடர்பு கொண்டு, ஏதாவது சமரசத்துக்கு வழி தேடும் முயற்சியில் ஈடுபட்டது > தி.மு.க. தலைமை. > > > இந்த நிலையில்தான், தங்களது குடும்பத் தொலைக்காட்சிச் சேனல்களின் நிருபர்கள் > மூலம் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பற்றிக் கேள்வி > எழுப்பப்பட்டு, அவரும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று பதிலும் > அளித்தார். பிரணாப் முகர்ஜியின் பதில், நீரில் மூழ்குபவனுக்கு நாணல் கிடைத்தது > போலத் தி.மு.க. தலைமைக்குத் தெம்பை அளித்தது. அதற்குப் பிறகுதான் தி.மு.க. > தலைமையிடம் காணப்பட்ட இறுக்கம் குறைந்தது என்று கூறப்படுகிறது. > > > எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க. - காங்கிரஸ் உறவு துண்டிக்கப்பட்டு விடக் > கூடாது என்பதில் மிகவும் முனைப்புக் காட்டியது மத்திய உர, ரசாயன அமைச்சர் மு.க. > அழகிரியும், பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸூம்தான் என்கிறார்கள் > விவரம் தெரிந்தவர்கள். > > > ""துணை முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை, தங்களது குடும்பத்தைச் > சூழ்ந்திருக்கும் "ஸ்பெக்ட்ரம்' மேகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள > மத்திய அரசின் ஆதரவும், அமைச்சர் பதவிகளும் தேவை என்கிற அளவில் மட்டும்தான் > காங்கிரஸ் உறவைப் பார்க்கிறார். ஆனால் மு.க. அழகிரியின் பிரச்னை அதுமட்டுமல்ல. > அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணி அமைத்தது முதலே, தென் மாவட்டங்களில் > தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. > போதாக்குறைக்கு, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அ.தி.மு.க. > அணியில் இடம்பெறுமானால், தி.மு.க. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி > மாவட்டங்களில் காங்கிரஸ் இல்லாமல் போட்டியிடாமல் இருப்பதுதான் நல்லது என்கிற > நிலைமை. அதனால்தான் அவர் எப்படியும் காங்கிரஸூடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் > என்று தலைமையை வற்புறுத்தினார்'' என்கிறார்கள். > > > காங்கிரûஸப் பகைத்துக் கொள்வதால் தேவையில்லாமல் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் > சிக்கக் கூடும் என்கிற பயம் மு.க. அழகிரிக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். > அதேபோல, டாக்டர் அன்புமணி ராமதாஸூம் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் > என்பதில் குறியாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான், அவர் சோனியா காந்தியை > நேரில் சென்று சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது. > > > சோனியா காந்தியுடனான சந்திப்பு தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக > அமையவில்லை. சோனியா காந்தி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி > மாறனும், மு.க. அழகிரியும் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. தி.மு.க.வைக் > கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால், காங்கிரஸூக்கு தேசிய அளவில் தர்ம சங்கடம் > ஏற்பட்டிருப்பதாக சோனியா கடிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள். > > > ""வேடிக்கை என்னவென்றால், சமரசம் நடைபெறும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் > தலைவர் கே.வீ. தங்கபாலு தில்லியில் இருக்கவில்லை. அவர் சென்னை திரும்பி > விட்டிருந்தார். சாதாரணமாக, இது போன்ற சமரசப் பேச்சுவார்த்தைகளில் தி.மு.க. > சார்பில் அனுப்பப்படும் கனிமொழியும் தில்லியில் இருந்தும் சோனியாவை சந்திக்கச் > செல்லவில்லை. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கு முழுக்க > முழுக்க மு.க. அழகிரியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும்தான் காரணம்'' > என்கிறார்கள் தில்லி பத்திரிகையாளர்கள். > > > சென்னையில் வீர வசனம் பேசிய தி.மு.க., தில்லியில் தலைகுனிந்தபடி காங்கிரஸ் > போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டதற்குப் > பின்னணி இருக்கிறது. 63 இடங்கள் கேட்பது நியாயமா என்று கேட்டு, அமைச்சர்கள் > ராஜிநாமா செய்யப் போவதாக பயமுறுத்திய தி.மு.க. இப்போது அதே 63 இடங்களைக் > காங்கிரஸூக்கு ஒதுக்கிக் "கை' குலுக்கிக் கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. > ஆனால், காங்கிரஸ் ஏன் இதற்கு ஒத்துக் கொண்டது? > > > ""தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெறப் போகும் தொகுதிகளை நாங்கள் தனியாகப் > போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை. ஆனால், > நாங்கள் 234 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு, அதிகபட்சம் 30 தொகுதிகளில் > வெற்றி பெறுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஏனைய 204 தொகுதிகளிலும் "டெபாசிட்' > இழக்க நேரிடும். இப்போது 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில் > வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் "டெபாசிட்' இழந்தது > என்கிற அவமானம் ஏற்படாது''- இதுதான் காங்கிரஸ் தலைமை போட்ட ராஜதந்திரக் கணக்கு. > > > > தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121 > தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது > என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் தி.மு.க. அணி வெற்றி > பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும். > > > காங்கிரஸ் தான் கேட்ட 63 தொகுதிகளையும் பெற்றுக் கொண்டது. கூட்டணி ஆட்சி > என்பதையும் உறுதி செய்துவிட்டது. > > > ""என்ன சிக்கல் தீர்ந்ததா?'' என்று ஒரு மூத்த தி.மு.க. தலைவரிடம் கேட்டபோது > அவர் தந்த பதில்- ""இல்லை. தி.மு.க. கூடாரத்தில் காங்கிரஸ் ஒட்டகம் மூக்கை > நுழைத்திருக்கிறது. இனிமேல்தான் சிக்கலே தொடங்கப் போகிறது...'' என்று > வருத்தத்துடன் சொன்னார். பெருவாரியான தி.மு.க. தொண்டர்களின் மனோநிலையும் > அதுதான்! > > > > நன்றி தினமணி > > > <http://savukku.net/index.php?option=com_content&view=article&id=506%3A2011-03-09-02-56-53&catid=10%3A2010-10-16-14-42-56&Itemid=2#> > >
