>
>
>   *Subject:* அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
> அப்பாவும் அலைந்தார் அன்று பள்ளிக்காக மகனும் அலைந்தான் இன்று இல்லத்திற்காக
> அவர் அலைச்சலில் அறிவு வளர்ந்தது இவன் அலைச்சலில் உறவு கலைந்தது
> முகம் தெரியா கவிஞர் வர்ணித்தது  தேடிப்  படிக்கையில் மனம் வலித்தது அன்பன்
> ஸ்ரீநிவாஸன்
> *
> *
> *அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
> *
> **
> *
> *
> *[image: Inline image 1]
>
> அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
> வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
> நீ கொண்டு வந்து சேர்த்த
> முதியோர் இல்லம்
> பொறுப்பாய் என்னைஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
> வெளியேறிய போது, முன்பு நானும்
> இது போல் உன்னை
> வகுப்பறையில் விட்டு விட்டு
> என் முதுகுக்குப் பின்னால்
> நீ கதறக் கதறக்
> கண்ணீரை மறைத்தபடி
> புறப்பட்ட காட்சி
> ஞாபகத்தில் எழுகிறது!
>
> முதல் தரமிக்க
> இந்த இல்லத்தை
> தேடித் திரிந்து
> நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
> அன்று உனக்காக நானும்
> பொருத்தமான பள்ளி
> எதுவென்றே
> ஓடி அலைந்ததை
> ஒப்பீடு செய்கிறேன்!
>
> இதுவரையில்
> ஒருமுறையேனும்
> என் முகம் பார்க்க
> நீ வராமல் போனாலும்
> என் பராமரிப்பிற்கான
> மாதத் தொகையை
> மறக்காமல்
> அனுப்பி வைப்பதற்காக
> மனம் மகிழ்ச்சியடைகிறது
> நீ விடுதியில்
> தங்கிப் படித்த காலத்தில்
> உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
> ஆவல் இருந்தாலும்
> படிப்பை நினைத்து
> உன்னை சந்திக்க மறுத்ததன்
> எதிர்வினையே இதுவென்று
> இப்போது அறிகிறேன்!
>
> இளம் வயதினில்
> நீ சிறுகச் சிறுக சேமித்த
> அனுபவத்தை
> என் முதுமைப் பருவத்தில்
> மொத்தமாக எனக்கே
> செலவு செய்கிறாய்
> ஆயினும்…
> உனக்கும் எனக்கும்
> ஒரு சிறு வேறுபாடு
> நான் கற்றுக்கொடுத்தேன்
> உனக்கு…
> வாழ்க்கை இதுதானென்று
> நீ கற்றுக் கொடுக்கிறாய்
> எனக்கு…
> உறவுகள் இதுதானென்று!
>
>
> -யாரோ !*
>
>
>
> ****
>




-- 


* *

****
****


           *V a n a k k a m  S u b b u *

****

  <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join>

**
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!
*<http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018>

<<Parents_09.10.12.jpg>>

Reply via email to