பகை!

இந்த இரண்டெழுத்துச் சொல்லால் அழிந்த நாடுகள் எத்தனை? முறிந்த உறவுகள் எத்தனை?
சிதைந்த குடும்பங்கள் எத்தனை? எத்தனை? பகைமை தொடர்கதையாவதின் விளைவே இது.
இந்தத் தொடர்கதை தொடராதிருக்க என்ன வழி இப்பகை உணர்வை வேறோடு மாய்க்க மாற்று
வழி என்ன. அன்புதான் மாற்று வழி. மாற்றம் ஏற்படுத்தும் வழி.

"பகையாளி குடியை உறவாடிக்கெடு" என்பது பழமொழி. அதாவது பகைவனிடம் நட்பு கொண்டது
போல நடித்து அவன் குடியைக் கெடுக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றனர்.
அப்படி உறவாடிக் கெடுத்த நம் குடியை வெறொருவர் உறவாடிக் கெடுக்கமாட்டாரா?
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, என்பதும் பழமொழி தானே? நாம் செய்யும்
காரியம் காரணமாக மாறி நம்மைக் கெடுக்கும் என்பதே உண்மை. இதனையே என்று உளவியல்
வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பகையாளி குடியுடன் உறவாடிப் பகையைக் கெடு என்பதே உண்மையான பழமொழி. அதன்
அர்த்தம் மாறி அனர்த்தமாகக் கூறப்பட்டு வருகிறது. எனவே பகை தொடர்கதையாகிறது.
இந்தத் தொடர்கதைக்கு முடிவுரைதான் என்ன? முடிவுரை மட்டுமல்ல - முகவுரையும்
தருகிறான் அந்த முண்டாசுக் கவிஞன்.

"பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான்
- பாரதி"

பகையை வெல்லும் வெற்றி அன்று மட்டும் அவனுக்கு மட்டும் இன்பம் பயப்பது.
பகைவனுக்கு அருளுவதால் ஏற்படும் வெற்றி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது.
ஆம் ! மனிதனும் தெய்வமாகலாம்!! பகைவனுக்கு அருளும் போது!!! அப்படிப்
பகைவனையும் பரமசிவன் வடிவாகவே கண்டவர்  மெய்ப்பொருள் நாயனார்.

சேது நாட்டின் தலைநகர் திருக்கோவிலூர். அங்கு மலாடர் மரபில் வந்த மன்னன்
ஒருவன் வாழ்ந்து நன்னெறியுடன் ஆண்டு வந்தான். மிகச் சிறந்தவீரன். வெற்றிகள் பல
கண்டவன். சிவநேசச்செல்வன். சிவனடியார்களின் திருவுருவே மெய்ப் பொருள் என்று
நம்பியவன் சிவனடியார்களுக்குப் பண் செய்து மகிழ்ந்தவன் அவர்களின் திருவுருவே
மெய்ப்பொருள் என்று கருதியதால் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கப்பட்டார்.

இதனிடையே முத்தநாதன் என்ற பகை மன்னன் சேது நாட்டை வெற்றி கொள்ள விரும்பினான்.
பலமுறை போரிட்டும் - பலனில்லை. தொடர்ந்து தோல்வியே கண்டான். சேது நாட்டின்
வளம் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது. நேர் வழியில் கிடைக்காத வெற்றியை
குறுக்கு வழியில் அடைய முடிவு செய்தான். என்ன செய்வது? குறுகியபுத்தி உள்ளவன்
தேர்வு செய்வது குறுக்கு வழியைத்தானே?

குறுக்கு வழியில் வாழ்வு தேடிட கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு
மனிதன் ஆனான் முத்தநாதன். குணத்திற்கு ஏற்ப திருட்டுத்தனமாய் ஒரு திட்டம்
தீட்டுகிறான். அதன்படி சிவனடியார் வேடம் பூண்டு திருக்கோவிலூர் அடைகிறான்.
வேடம் தந்த துணிவில் அந்தப்புர வாசல் வரை வருகிறான். காவல் காக்கும் தத்தன்
தடுக்கிறான். உறங்கும் வேளை என உரைக்கிறான். மன்னருக்கு வீடுபேறு அளிக்கவல்ல
மந்திரம் உபதேசிக்க வந்துள்ளேன் தடுக்காதே எனக் கூறி உள்ளே நுழைகிறான்.அரசி
எழுப்ப மன்னன் துடித்து எழுகிறான். தலை வணங்கி வரவேற்கிறான். தங்கள் வருகையின்
நோக்கம் என்ன என்று வாஞ்சையுடன் கேட்கிறான்.

இறைவனே இயற்றிய ஆகமநூல் என்னிடம் உள்ளது, வேறு எங்கும் இல்லாத நூல், அதனை
உனக்குப் போதிக்கவே வந்தேன். அதைத் தனிமையில் உபதேசிக்க வேண்டும் என்கிறான்.
குறிப்பறிந்து அரசி அகலுகிறாள்.

தான் பணிந்து வணங்கிக் கண்மூடி அமர்ந்து பாடம் கேட்க ஆயுத்தமாகிறார்
மெய்ப்பொருளார். ஓலைச் சுவடியில் மறைத்து வைத்திருந்த வாளால் ஓங்கி
வெட்டுகிறான் முத்தநாதன். அப்போதும் அவனது தவ வேடமே மெய்ப்பொருள் என
வணங்கித்தானே வென்றவர் ஆகிறார் மெய்ப்பொருளார்.

தத்தன் சந்தேகத்தோடு உள்ளே நோக்க நடந்த விபரீதம் புரிகிறது. முத்தநாதனை
வேட்டப் பாய்கிறான்.தடுக்கிறார் மெய்ப்பொருளார். இவரை யாதொரு இடையூறும் இன்றி
அனுப்பி வைப்பாய் எனக் கூறுகிறார். செய்தி அறிந்து ஓடி வந்த வீரர்களை
தடுக்கிறார் தத்தன். மன்னன் ஆணைப்படி இவரை பாதுகாப்பாக நகர் எல்லையில் கொண்டு
விட வேண்டும் என்று கூறி அதன்படியே செய்கிறான். அனுப்பித்த செய்தி கூறுகிறான்
மன்னனிடம். செய்தி கேட்டு சிந்தை குளிர்கிறார் மெய்ப்பொருளார். தத்தனை
வாழ்த்துகிறார்.

அழுது அரற்றும் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார். திருநீற்றுச் செல்வர்களைப்
பேணிப் பாதுகாக்கப் பணிக்கிறார். தன் மன அரங்கில் நடமிடும் தில்லைக் கூந்தனைத்
தியானிக்கிறார். தில்லைக் கூத்தன் தரிசனம் தந்து தனது திருவடி நிழலும்
தருகிறான்.

"கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார்கோள்"

-- 

 ****





   *V a n a k k a m  S u b b u *

****


  <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join>

**
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!
*<http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018>

**

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


Reply via email to