டயட் பற்றி வள்ளூவர் கூறுவதாவது
*மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது * *அற்றது போற்றி உணின்.* ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை. (ஒரு வேளை உணவு உண்டபின் குறைந்தது 2.5 முதல் 3 மணிநேரம் வரை பொறுத்திருந்தே அடுத்த வேளை உணவை உண்ணவேண்டும் என்கிறது தற்கால அறிவியல்) *அற்றால் அறிவறிந்து உண்க அஃதுடம்பு * *பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.* முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி. (அடுத்த குறளில் தன் டயட் முறையை மேலும் தெளிவாக்குகிறார் வள்ளுவர். முன்பு உண்டது ஜீரணம் ஆகிவிட்டது..சரி. ஆனால் அதற்காக உடனே உண்ண வேண்டும் என இல்லை. உனக்கு பசிக்கிறதா, எங்காவது பயணம் செல்லவேண்டுமா? அப்படியானால் தேவை அறிந்து அதற்கேற்ப உண்ணு. தேவை இல்லை எனில் உண்ணாதே..) *அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல * *துய்க்க துவரப் பசித்து.* முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க. அடுத்த குறளில் எதை உண்ணவேண்டும் என்பதையும் கூறுகிறார். உடலுக்கும் காலத்துக்கும் ஒத்துவரக்கூடிய உணவாக உண்ணு. இரவு எனில் லேசான உணவையும், மதியம் எனில் சற்று ஹெவியாகவும் உண்ணலாம் என்பது போல நாம் நமக்கு ஏற்ற உணவுகளை உண்ணலாம். குப்பை உணவுகளை தவிர்க்கலாம் *மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் * *ஊறுபாடு இல்லை உயிர்க்கு.* உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. அப்படி உடலுக்கு ஒத்துவரும் உணவைக் கூட அளவுடன் உண்ணு, அளவுக்கு மிஞ்சினால் மறுத்துவிடு என்கிறார் வள்ளுவர் *இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் * *கழிபேர் இரையான்கண் நோய்.* அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை. (டயபடிஸ், பிளட்பிரஷர், ஸ்ட்ரோக் முதலிய பல வியாதிகள் அதிகம் உண்பதால் வரும் என்கிறது தற்கால அறிவியல்) வள்ளுவரது டயட் வழிமுறைகள் இன்றும் பொருந்துவது மிகப்பெரும் விந்தை.அந்தக் காலத்திலேயே வள்ளுவர் மிகப் பெரிய டயட்டிசியனாக இருந்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. செல்வன் *[image: Inline image 2]**வணக்**க**ம் *சு*ப்பு**[image: Inline image 2]* -- **** <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *V a n a k k a m S u b b u * ** **** <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join> ** *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! **வாழிய பாரதமணித் திருநாடு!* <http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018> ** -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/groups/opt_out.
<<1.gif>>
