*திருமாலைப் போற்றிப் பரவி ஆழ்வார்கள் பாடிய திவ்ய பிரபந்தத்தில், அவரின்
அவதாரமான ஸ்ரீராமர் பற்றிய சேதிகள் இல்லாமல் இருக்குமா?*
*அங்கங்கே ராமாயணச் செய்திகள், அற்புதச் சொற்பதங்களில் அரங்கேறியுள்ளன.*
*எங்கெங்கே ஸ்ரீராமன் கதை இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து அடிக்கோடிட்டார்
ஒரு வைணவப் பெரியவர். அடிக்கோடிட்ட ஆழ்வார் பாசுர வரிகளைத் தொகுத்தால், ராம
காவியம் முழுவதுமே திவ்ய பிரபந்த பாசுரங்களில் உள்ளது என்பதை அறியலாம். *
*'பாசுரப்படி ராமாயணம்’ எனத் தலைப்பிட்டு, அதை உலகுக்குத் தந்தவர்
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை. 13-**ஆ**ம் நூற்றாண்டில், கண்ணன் பிறந்த
நன்னாளில்தான் இவரும் கண் மலர்ந்தார். ஆம்... ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம்,
தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தார் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா.
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையும் தேகம் எடுத்து பூமிக்கு வந்தது, அதே நாளில்தான்!*
*வால்மீகி பாடிய ராமாயணம், வனத்தில் தொங்கும் பலாப்பழம் என்றால், கம்பன் பாடிய
காவியமோ தோட்டத்தில் தொங்கும் மாதுளம்பழம்! ஆனால், இந்த பாசுரப்படி ராமாயணமோ
வாயில் விழுந்த வாழைப்பழம்.*
*ஆம்! இதை மிக எளிதாக எல்லோருமே தினசரி படிக்கலாம். அப்படிப் படிப்போருக்கு,
ராமாயணத்தைப் பூரணமாகப் பாராயணம் செய்த நிறைவும், ஆழ்வார் பாசுரங்களை
அனுபவித்த ஆனந்தமும் ஒரு சேரக் கிட்டும் என்பது உறுதி!*
பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம்
*பால காண்டம்*
*திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழநலம் அந்தம் இல்லது ஓர் நாட்டில்அந்தம்
இல் பேரின்பத்து அடியரோடுஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருக்கும்அயர்வு
அறும் அமரர்கள் அதிபதியானஅணி ஆர் பொழில்சூழ் அரங்க நகர் அப்பன்அலை நீர்க்
கடலுள் அழுந்தும் நாவாய்போல்ஆவார் ஆர் துணை என்று துளங்கும்நல் அமரர் துயர்
தீரவல் அரக்கர் வாழ் இலங்கை பாழ்படுக்க எண்ணிமண் உலகத்தோர் உய்யஅயோத்தி
என்னும் அணி நகரத்துவெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு ஆய்கௌசலைதன் குல மதலை
ஆய்தயரதன் தன் மகன் ஆய்த் தோன்றிக்குணம் திகழ் கொண்டல் ஆய்மந்திரம் கொள் மறை
முனிவன்வேள்வி காக்க நடந்து வந்துதனை எதிர்த்த தாடகைதன் உரம் கீண்டுவல்
அரக்கர் உயிர் உண்டுகல்லைப் பெண் ஆக்கிகார் ஆர் திண் சிலை இறுத்துமைதிலியை
மணம் புணர்ந்துஇரு பத்து ஒருகால் அரசு களைகட்டமழுவாளி வெவ் வரி நல்சிலை வாங்கி
வென்றி கொண்டுஅவன் தவத்தை முற்றும் செற்றுஅம் பொன் நெடு மணி மாட அயோத்தி
எய்திஅரியணைமேல் மன்னன் ஆவான் நிற்க.*
*அயோத்தியா காண்டம்*
*கொங்கை வன் கூனி சொல் கொண்டகொடிய கைகேயி வரம் வேண்டஅக் கடிய சொல்
கேட்டுமலக்கிய மா மனத்தனன் ஆய்மன்னவனும் மறாது ஓழிய'குலக் குமரா! காடு உறையப்
போஎன்று விடை கொடுப்பஇந் நிலத்தை வேண்டாதுஈன்று எடுத்த தாயரையும்,
இராச்சியமும் ஆங்கு ஒழிந்துமைவாய களிறு ஒழிந்துமா ஒழிந்து தேர் ஒழிந்துகலன்
அணியாதேகாமர் எழில் விழல் உடுத்துஅங்கங்கள் அழகு மாறிமான் அமரும் மென் நோக்கி
வைதேவி இன் துணையாஇளங்கோவும் வாளும் வில்லும் கொன்டு பின் செல்லகலையும்
கரியும் பரிமாவும் திரியும்கானம் கடந்து போய்பத்தி உடைக் குகன் கடத்தகங்கை
தன்னைக் கடந்துவனம் போய்ப் புக்கு; காயோடு நீடு கனி உண்டுவியன் கான மரத்தின்
நீழல்கல் அணைமேல் கண் துயின்றுசித்திரகூடத்து
இருப்ப தயரதன் -
தான், 'நின் மகன் மேல் பழி விளைத்திட்டுஎன்னையும் நீள் வானில் போக்கஎன்
பெற்றாய்? கைகேசி!நானும் வானமே போகின்றேன்’ என்று வான்ஏறதேன் அமரும் பொழில்
சாரல் சித்திரக்கூடத்துஆனை, புரவி, தேரொடுகால்- ஆள் அணி கொண்ட சேனைசுமந்திரன்,
வசிட்டருடன் பரத நம்பி பணியதம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துகுவலயத்
துங்கக் கரியும், பரியும், இராச்சியமும்எங்கும் பரதற்கு அருளி; விடை
கொடுத்துதிரு உடைய திசைக் கருமம் திருத்தப் போய்தண்டகாரணியம் புகுந்து;*
*ஆரண்ய காண்டம்*
*மறை முனிவர்க்கு 'அஞ்சேல்மின்’என்று அருள் கொடுத்துவெங் கண்விறல் விராதன் உக,
வில் குனித்துவண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கிபுலர்ந்து எழுந்த
காமத்தால்'சீதைக்கு நேர் ஆவன்’ என்னபொன் நிறம் கொண்ட சுடு சினத்த
சூர்ப்பணகிகொடி மூக்கும் காது இரண்டும்கூர் ஆர்ந்த வாளால் ஈரா விடுத்துகரனோடு
தூடணன் தன் உயிரை வாங்கிஅவள் கதறி, தலையில் அம் கை வைத்துமலை இலங்கை ஓடிப்
புககொடுமையின் கடு விசை அரக்கன்அலைமலி வேல்கணாளை அகல்விப்பான்ஓர் உரு ஆய மானை
அமைத்துசெங்கல் பொடிக் கூறை, சிற்றெயிற்றுமுற்றல் மூங்கில் மூன்று தண்டத்தன்
ஆய், வஞ்சித்துஇலைக் குரம்பில் தனி இருப்பில்கனி வாய்த் திருவினைப்
பிரித்துநீள் கடல் சூழ் இலங்கையில்அரக்கர் குடிக்கு நஞ்சு ஆகக் கொண்டு
போய்வம்பு உலாம்கடி காவில் சிறையா வைக்கஅயோத்தியர் கோன் மாய மான் மாயச்
செற்றுஅலை மலி வேல் கண்ணாளை அகன்று, தளர்வு எய்திசடாயுவை வைகுந்தத்து
ஏற்றிகங்குலும் பகலும் கண்துயில் இல்லாக்கானகம் படி உலாவி உலாவிகணை ஒன்றினால்
கவந்தனை மடித்துசவரி தந்த கனி உவந்து;*
*கிஷ்கிந்தா காண்டம்*
*வன மருவு கவி அரசன் காதல் கொண்டுமரா மரம் ஏழ் எய்துஉருத்து எழு வாலி
மார்பில்ஒரு கணை உருவ ஓட்டிகருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு
அளித்துவானரக் கோனுடன் இருந்துவைதேகிதனைத் தேட விடுத்த திசைக் கருமம்
திருத்ததிறல் விளங்கு மாருதியும்மாயோன் தூது உரைத்தல் செப்ப;*
*சுந்தர காண்டம்*
*சீர் ஆரும் திறம் அனுமன்மா கடலைக் கடந்து ஏறிமும் மதில் நீள் இலங்கை
புக்குகடி காவில் வார் ஆரும்முலை மடவாள் வைதேகி தனைக் கண்டுநின் அடியேன்
விண்ணப்பம் கேட்டருளாய்அயோத்தி தனில் ஓர் இடவகையில்எல்லியம் போது இனிது
இருத்தல்மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்கலக்கிய மா மனத்தனள் ஆய்க்
கைகேசி வரம் வேண்டமலக்கிய மா மனத்தனன் ஆய்மன்னவனும் மறாது ஒழிய''குலக் குமரா!
காடு உறையப்போ'' என்று விடை கொடுப்பஇலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும்கங்கை
தன்னில் கூர் அணிந்தவேல் வலவன் குகனோடு சீர் அணிந்ததோழமை
கொண்டதுவும்சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்சிறு காக்கை முலை
தீண்டிமூவுலகும் திரிந்து ஓடி''வித்தகனே இராமா! ஓ! நின் அபயம்'' என்னஅத் திரமே
அதன் கண்ணை அறுத்ததுவும்பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து, இனிது விளையாடநின்
அன்பின் வழிநின்றுசிலை பிடித்து எம்பிரான் ஏகபின்னே அங்கு இலக்குமணன்
பிரிந்ததுவும்அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்'ஈது அவன் கை மோதிரமே’என்று
அடையாளம் தெரிந்து உரைக்கமலர்க்குழலாள் சீதையும்வில் இறுத்தான் மோதிரம்
கண்டு''அனுமான்! அடையாளம் ஒக்கும்'' என்றுஉச்சிமேல் வைத்து உகக்கத்திறல்
விளங்கு மாருதியும்இலங்கையர் கோன் மாக் கடிகாவை இறுத்துகாதல் மக்களும்
சுற்றமும் கொன்றுகடி இலங்கை மலங்க எரித்துஅரக்கர் கோன் சினம் அழித்துமீண்டு
அன்பினால் அயோத்தியர் கோன்தளிர் புரையும் அடி இணை பணிய.*
*யுத்த காண்டம்*
*கான எண்கும் குரங்கும் முசுவும் படையாகொடியோன் இலங்கை புகல் உற்றுஅலை ஆர்
கடற்கரை வீற்றிருந்துசெல்வ விபீடணற்கு நல்லன் ஆய்விரிநீர் இலங்கை அருளிசரண்
புக்க குரை கடலைஅடல் அம்பால் மறுக எய்துகொல்லை விலங்கு பணி செய்யமலையால் அணை
கட்டி; மறு கரை ஏறிஇலங்கை பொடி ஆகச்சிலை மலி செஞ்சரங்கள் செல
உய்த்துக்கும்பனோடு நிகும்பனும் படஇந்திரசித்து அழிய, கும்பகர்ணன் படஅரக்கர்
ஆவி மாளஅரக்கர் கூத்தர் போலக்குழமணிதூரம் ஆடஇலங்கை மன்னன் முடி ஒருபதும்தோள்
இருபதும் போய் உதிரசிலை வளைத்துச் சர மழை பொழிந்துகரம் துணித்து; வென்றி கொண்ட
செருக்களத்துக்கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்எண்மர், பதினொருவர், ஈர்
அறுவர், ஓர் இருவர்மற்றும் உள்ள வானவர் மலர் மழை பொழிந்துமணி முடி பணிதர அடி
இணை வணங்ககோலத் திரு மாமகளோடுசெல்வ விபீடணன், வானரக் கோனுடன்இலங்கு மணி நெடுந்
தேர் ஏறிசீர் அணிந்த குகனோடு கூடிஅங்கண் நெடு மதி புடைசூழ் அயோத்தி எய்திநல்
நீர் ஆடிபொங்கு இள ஆடை அரையில் சாத்தித்திருச் செய்ய முடியும் ஆரமும்
குழையும்முதலா மேதகு பல்கலன் அணிந்துசூட்டு நன் மாலைகள் அணிந்துபரதனும் தம்பி
சத்துருக்கனனும்இலக்குமனும் இரவும் நன் பகலும் ஆட்செய்யவடிவு இணை இல்லாச்சங்கு
தங்கு முன்கை நங்கைமலர்க் குழலாள் சீதையும் தானும்கோப்புடைய சீரிய
சிங்காசனத்து இருந்துஏழ் உலகும் தனிக்கோல் செல்லவாழ்வித்தருளினார்.*
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.