*காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்*







*காயத்ரி மந்திரத்தை இந்தப் பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர்
ஆவார். அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாகத் தியான நிலையிலிருந்து இதனைக்
கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன
காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர். ஆனால் இன்று மூன்று
வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள்
ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர்
வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹித்யோயோந: ப்ரசோதயாத்இதுதான் அந்த காயத்ரி
மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ,
த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.*


*இதன் தமிழ் அர்த்தம் என்ன?*


*‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான்
வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.*


*சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல
வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!*




*லட்சுமி, சரசுவதி, பார்வதி, மகேசுவரி, மனோன்மணி என்ற ஐந்து முகங்களும்
சிவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய தொழில்களை
நினைவுபடுத்துகின்றன.காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து
ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு
‘ஆத்ம சுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து
சுகங்களையும் அனுபவிப்பார்கள்.*


*காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத் தூய்மையுடனும்
இருக்க வேண்டும்.காயத்ரி மந்திரத்தை குரு முகமாக உபதேசம் பெற்ற பின் தினமும்
ஜபிக்கச் சிறந்ததாகும்.*

*அஷ்ட ஐஸ்வர்யங்களும், அஷ்ட மா சித்திகளும் காயத்ரி தேவியை வழிபட்டால்
கைகூடும் என்பது பல்லாயிரக் கணக்கானவர்களின் அனுபவம்.*


*காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும். உதடுகள்
மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்கு பலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10
பங்கு பலனும் தரும். ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.*


*இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன் (பத்ரகாளி அல்லது மாரி அல்லது
வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்)
சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால்
கிடைக்கும் பலன்க**ள்* *கிடைக்கும்.*


* யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன்
கிடைக்கும். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக் கூற 27,000
முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக் கூறி
அனைத்துச் செல்வங்களையும் அடையலாம்.*




*தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்து வந்தால் அவன்/ள்
பெரும் செல்வந்தராவது நிச்சயம்.வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரி மந்திரத்தைப்
பயபக்தியோடும் முழு மனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன்
பெறுவார்கள்.இந்த ஜபம் செய்யத் தண்ணீர் மட்டும் போதுமானது.*


*ஒரு வேளை தண்ணீருக்குப் பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக
நன்று. நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால்
அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும்*


<http://4.bp.blogspot.com/_g9Ssbl03NHs/Ruk3pv9yd2I/AAAAAAAAAFA/uLlOLkkkTa4/s1600-h/Gayatri1.jpg>


பிரணவ மந்திரமான "ஓம்" என்ற வார்த்தைக்கு அடுத்தபடி இந்தக் காயத்ரி மந்திரம்
தான் சொல்லப் படுகிறது. பரப்ரும்மத்தின் ஸ்வரூபமான இந்த மந்திரத்தின் அதி
தேவதையான காயத்ரி மாதா, மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் சேர்ந்த
உருவமாகப் போற்றப் படுகிறாள். விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப் பட்டதான இந்த
மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. வேத மாதாவான காயத்ரியை ப்ரப்ரும்ம சொரூபம்
என்ற அளவில் மட்டுமில்லாமல், ஆத்ம ஞானத்தைக் கொடுக்கும் ஒரு சக்தியாகவும்
கருதுகிறார்கள்.

செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் காயத்ரி தேவி செல்வத்துக்கு அதிபதியாகவும்
கருதப் படுகிறாள். ஐந்து தலைகளுடனும், பத்துக் கண்களுடனும், எட்டுத் திசைகள்
மட்டுமின்றி, ஆகாயத்தில் உதிக்கும் சூரிய, சந்திரரையும், கீழே பூமியையும்
பார்க்கும் விதமாக இருக்கும் காயத்திரியின் , பத்துக் கரங்களும், அந்த
விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கும். வெண்ணிற அன்னத்துடன் இருக்கும்
இவளை வணங்கினால் அறிவு வளரும் எனவும், கல்விக்கும் இவள் அதிபதி எனவும்
சொல்கிறார்கள். மேலும் இவளின் மூல மந்திரத்தை ஜெபிக்கும் முறைப்படி ஜெபித்து
வந்தால் மனதில் அதைரியம் மறைந்து எதையும் எதிர்நோக்கும் மனம் தானாகவே ஏற்படும்
என்றும் சொல்கிறார்கள். மனதில் தெய்வீக சக்தி அதிகரித்து, புத்தியும், மனமும்
இணைந்து ஆத்ம ஞானத்தை அறிய முற்பட இந்த மந்திரம் உதவுகிறது.

முக்கியமாக மனச் சஞ்சலம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து
வருவதால் மனச் சஞ்சலம் மறைந்து மன உறுதி தோன்றுவது நிச்சயம்.

"இவ்வுலகைப் படைத்த அந்த பிரபஞ்ச சக்தியைப் போற்றுவோம்! நம்முடைய மன இருள்
அகன்று ஒளி பிறக்கட்டும்" என்பதே இதன் அர்த்தம். "ஓம்" என்னும் வார்த்தை,
ஆரம்பத்திலும் முடிவிலும் சேர்க்கப் படும்.

ஓரளவு பிரகாசமான ஒளியைப் பார்க்கும் பொழுது, நமக்குள் மெலோடோனின் என்ற
தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் அளவு குறைக்கப்பட்டு செரோடோனின் என்ற
உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகிறது.

இந்த முறையில் தான் SAD (Seasonal Affective Disorder) என்று சொல்லப்படும்
பனிக்கால மன அழுத்த நோய்க்குச் சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. செரோடோனின்
ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருந்தால், புத்தி கூர்மை அதிகரிக்கத்
தானே செய்யும்.

இந்த உண்மையை உணர்ந்து, சூரிய சக்தியின் மூலம், நம் புத்திக் கூர்மையை
மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயல் விளக்கமான ஒரு மிகப் பெரிய உண்மை தான்
காயத்ரி மந்திரம்.

காயத்ரி மந்திரம்
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: பிரச்சோதயாத்

சரியான உச்சரிப்புக்கு வகைசெய்ய ஆங்கிலத்தில்

Thath Savithur Varennyam
Bhargo Thevasya Theemahee
Thiyo Yo Nah Prachothayaath

பொருள்

நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும், அருள்மிகு சவிதூரிலிருந்து கிடைக்கப் பெரும்
ஒளியை தியானிக்கின்றோம்.

சவிதூர் என்பது சூரியனைக் கடவுளாகக் குறிக்கும் சொல்.

இந்த மந்திரம் நிகழ்காலச் செயலாக இயற்றப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
சூரியனுடைய ஒளியைத் தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய
ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம். இமைகளின்
வழியே ஊடுருவிச் செல்லும் ஒளி அளவே ஹார்மோன்களைச் சமன் படுத்தப் போதுமானது.

முதல் வரியைக் குறிப்பிடவில்லையே ஏன்? இந்த மந்திரத்தை அறிந்தவர்களாக
இருந்தால் இந்தக் கேள்வி மனதில் எழும்.

சூரிய ஒளியில் நின்றுகொண்டு " நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும் அருள்மிகு
சவிதூரிலிருந்து கிடக்கப்பெறும் ஒளியைத் தியானிக்கிறோம்" என்று
சொல்லிக்கொள்வதே மந்திரம்.

தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோந: பிரச்சோதயாத்

இதைச் சொல்லி முடிப்பதற்கு 10 வினாடிகளே போதுமானது.ஆனால் அலைபாயும் மனதை தியான
நிலைக்குக் கொண்டுவர 10 வினாடிகள் போதுமா?

படைக்கப்பட்ட எல்லாமுமே நகர்ந்து கொண்டிருந்தால் நகர்ந்து கொண்டே இருக்கும்,
கிடந்தவண்ணம் இருந்தால் கிடந்தே இருக்கும். அவற்றின் மேல் ஏதேனும் விசைகள்
செயல்பட்டால் இந்தநிலைகள் மெதுவாகவே மாறும். அதுபோலவே எப்போதும் இயக்கத்தில்
இருக்கும் மனதைச் சட்டென்று தியான நிலைக்குக் கொண்டுவரமுடியாது.

சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களின் முன் இருந்தால், குறைந்தது 100 விநாடிகளில் மன
ஓட்டத்தைத் திசை திருப்ப முடியும்.

இந்த அடிப்படையில் திரும்பத் திரும்ப மந்திரத்தைச் சங்கல்பம் செய்தால் 100
வினாடிகளில் 10 முறை மந்திரம் ஜெபிக்க முடியும்.

மனதை ஒரு பொருளின் மீது நிறுத்த முயற்சி செய்து பாருங்கள். எகிறி ஓடத்தான்
பார்க்கும். தியான முறைகளில் ஒரு பொருளின் மீது மனதை நிறுத்துவதைவிடச் சிறந்த
முறை இருக்கிறதா?

காயத்ரியில் ஒளியைத் தியானிக்க வேண்டும். அப்படியென்றால் இதுவும் மனதை நிறுத்த
முயற்சி செய்வது போலாகிவிடுமல்லவா?

ஒளியைத் தியானிப்பதனையும் கடந்து ஏதாவது சிறப்பு காயத்ரியில் இருக்கிறதா?

சங்கல்பம் செய்வதில் நம் புத்தியைப் பற்றியும் இருக்கிறதே.

மனது, புத்திக்கும் ஒளிக்கும் இடையே ஒரு நேர்கோட்டுப் பதையை தியானிக்க
முற்படும். சங்கல்பத்தில் தன் நிலை உணர்வையும் சேர்த்துக் கொண்டால்,
நேர்கோட்டுப்பாதை முக்கோணப் பாதையாக உருமாருவதை உணரலாம்.

முக்கோணப்பாதை மனதை சுழற்சிக்கு வழிசெய்யும். இயக்கத்தில் சுழற்சி என்று
ஆகிவிட்டாலே சுழற்சி மையம் ஒன்று அமைந்துவிடும். இந்த மையத்தைச் சுற்றி மனம்
எளிதாக சுழன்று தியானம் சுலபமாய் கைகூடும்.

தன் நிலை உணர்வைக் குறிக்க

ஓம் பூர் புவ: சுவ:
(OM BHUR BHUVAHA SUVAHA)

என்று மனதின் நான்கு நிலைகளையும் உள்ளடக்கிய சொற்றொடர் காயத்ரியின் முன்னால்
இணைக்கப்படுகிறது.

ஓம்- சிந்தனையற்ற விழிப்பு நிலை.
பூர் - நிகழ்காலத்தில் செயலாற்றலில் ஈடுபட்ட நிலை
புவஹ- கனவும்,கற்பனையும் ஆகிய நிலை
சுவஹ- உறக்கநிலை.

ஓம் பூர் புவ: சுவ: என்ற சொற்றொடர் இறைவழிபாட்டிற்கு சொல்லப் படும்
மந்திரங்கள் அத்தனையிலும் முதல் வரியாகி நிற்கிறது.

ஓம் பூர் புவ: சுவ: சேர்த்து ஒரு முறை காயத்ரி ஜபம் செய்ய 14 வினாடிகள் ஆகும்.
10 முறை ஜபம் செய்ய 140 வினாடிகள் அதாவது ஏறத்தாழ 2½ நிமிடமே தேவைப்படும்.
இந்தக் குறைந்த பட்ச அளவே போதுமானது. இந்த அனுபவம் சுகமாகப் பட்டால் 28 முறை
சொல்ல 6½ நிமிடம் அதாவது ¼ விநாழிகைக்குக் கணக்கு வரும். மனம் முழுவதுமாக
அமைதியடைந்து அமைதியுணர்வு நெடுநேரம் நீடிக்க 1 நாழிகை நேரம் தியானம்
தேவைப்படுவதை அனுபவத்தில் உணர்ந்ததால், 108 முறை காயத்ரி சங்கல்பம் செய்வது
பரிந்துரைக்கப் படுகிறது போலும்.

108 முறை செய்வதற்கு அதிகாலை நேரமோ, அந்திமாலையோதான் உகந்த நேரம். இந்த அளவு
உலக விஷயங்களில் பற்றற்ற நிலையைக் கொடுக்கக் கூடும்.

சாதரணமாக 10 முறை சங்கல்பம் என்பது தினசரி பயிற்சிக்குப்
போதுமானது.நின்றுகொண்டே கூடச்சொல்லி முடித்துவிடலாம்.

சமஸ்கிருத ஒலிச் சேர்க்கையால் 24 எழுதுக்களில் அமைந்த காயத்ரி மந்திரத்தின்
ஒலியின் அதிர்வுகள், நம்முடைய சுவாசமண்டலத்தை பரிசுத்தமாக்குவதை உணரமுடிகிறது.
தொண்டையில் சளியோ, இருமலோ இருக்கும் காலங்களிலும், ஜலதோஷம் பிடித்துள்ள
நாட்களிலும், எழாவது - எட்டாவது முறை மந்திரம் சொல்லும் பொழுதே தொண்டை
அடைத்துக்கொள்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஜபம் முடிந்தவுடன், குரல்
மிகத்தெளிவாக மாறி இருப்பதையும், சுவாசம் நன்றாக இருப்பதையும் உணர முடிகிறது.
-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



 *v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to