ஓம் *ஓய்வூதியர்களின் தனி கவனத்திற்கு……………………………..*
* ஏப்ரல் 2015 முதல் நாள் தொடங்கி ஜூன் மாதம் 30 தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) சென்னையில் ஓய்வூதியம் வழங்கு அலுவலர் அலுவலகத்திலும்,, மாவட்டங்களில் கருவூல அலுவலகங்களிலும் நடை பெறுகின்ற mustering – இல் கலந்து கொண்டு வாழ்நாள் சான்றிதழ் அளிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறுகின்ற அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும். ஜூன் மாதத்திற்குள் Mustering – செய்து கொள்ளாதவர்களுக்கு ஜூலை மாதம் முதல் ஓய்வூதியம் வழங்கப் படாமல் நிறுத்திவைக்கப்படும். எனவே, இந்த Mustering –ல் தவறாமல் கலந்து கொண்டு விவரங்களை அளித்து பயன் பெற வேண்டுகிறோம்.* * இது தொடர்பாக சென்னையிலுள்ளா ஓய்வூதியம் வழங்கு அலுவலர் அவர்களால் 18-03-2015 அன்று ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் சி. இரத்தினராஜ், வட சென்னை மாவட்டத் துணைத்தலைவர் எஸ். கலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.* * இந்தக் கூட்டத்தில் Mustering –ன் போது கடைப் பிடிக்கவேண்டிய வழிமுறைகள், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான செயல்பாடுகள், அரசாணை எண் 363 தொடர்பாக நிலுவைத் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டடன. அதன் முடிவில் Mustering ன் போது கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓய்வூதியம் வழங்கு அலுவரால் தெரிவிக்கப்பட்டது.* *(1) சென்னையில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும்,, குடும்ப ஓய்வூதியம் உட்பட மாவட்டங்களில் கருவூலங்களின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும் ஏப்ரல் 2015- முதல் தேதியிலிருந்து ஜூன் 30-2015-க்குள் Musterrng செய்துகொள்ளவேண்டும். (காலை 10-00 மணி முதல் மதியம் 02-00 மணிக்குளாக அலுவலகங்களுக்குச் சென்று Musterng செய்துகொண்டால் மதியத்திற்குப் பிறகு ஓய்வூதியர் சம்பந்தப் பட்ட பணிகளைச் செய்ய ஏதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நேரத்திற்குள் ஓய்வூதியர்கள் அலுவலகங்களுக்குச் சென்று Mustering செயுதுகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்* *2.Mustering –இன் போது எடுத்துச் செல்லவேண்டிய ஆவணங்கள்* *1. **பென்சன் புத்தகம் அசலாக* *2. **வங்கி பாஸ் புத்தக முதல் பக்கத்தின் முதல் பக்க ஜெராக்ஸ்* *3. **ரேஷன் கார்டு ஜெராக்ஸ்* *4. **ஆதார் அடையாள அட்டை இருந்தால் அதன் ஜெராக்ஸ்* *5. **செல்;போன் எண்* *6. **வங்கிக் கணக்கு எண் பழையதாக இருந்தால் 11 எண்ணுடைய புதிய எண்ணுக்கு மாற்றம் செய்து அதற்கான ஆதாரங்களை அளித்தல்* *7. **PAN CARD ஜெராகஸ்* *3. மேற்கண்ட ஆவணங்களை தவறாமல் Mustering போது கொண்டு வரவேண்டும். அங்கு தரப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அளிக்க வேண்டும். வருமான வரி செலுத்தக் கூடிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 2015 பிப்ரவரி மாதம் முடிய உள்ள வருமானவரி ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது. இதற்கான படிவம் எண் 16 மற்றும் பென்ஷன் பெற்ற விவரம் ஆகியவை P.P.O அலுவலகத்தில் மே மாதம் 15 முதல் வழங்கப் படும்.* *4.. சோழிங்க நல்லூர், வேளச்சேரி, பல்லாவரம் ஆகிய இடங்களில் புதிதாகத் துவக்கப்பட்ட சார் நிலைக் கருவூலங்களுக்கு சென்னை P.P.O. அலுவலகத்தினின்றும் மாறுதல் பெற விரும்புவோர் ஜூன் மாதம் Mustering முடிந்த பிறகு ஜூலை -2015- இல் விண்னப்பிக்க வேண்டும்.* *5. நேரில் வர இயலாதவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை ஓய்வூதியம் வழங்க்கும் அலுவலகத்திலிருந்து பெற்று முழுமையாகப் பூர்த்திசெய்து பதிவு பெற்ற அலுவலர் சம்பந்தப் பட்ட வங்கி மேலாளரிடம் சான்றொப்பம் பெற்று பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வ்சைக்கலாம்.* *6. புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக அடையாள அட்டை (ID card) தயாராக உள்ளது என்றும், விர்ரைவில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு Mustering- இன் போது ஒரு படிவம் மட்டும் கொடுத்தவர்களுக்கு தற்போது ஐ.டி. கார்டு தயாராக இல்லை. இவர்கள் இரண்டாவது படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே ஐ.டி.கார்டு வழங்க இயலும் என்றும் தெரிவிக்கப் பட்டது.* *7. அரசாணை எண் 363. தொடர்பாக நிலுவைத் தொகை வழங்குவது பற்றி மாநில கணக்காயரிடமிருந்து வந்த விண்ணப்பங்களின் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.* *ஆதாரம் மற்றும் நன்றி : ஆலம் விழுதுகள் ஏப்ரல் 2015 மாத ஏடு.* *அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
