---------- Forwarded message ---------- From: p.v. narayanan <> Date: 2016-01-20 23:05 GMT+05:30 Subject: Maha Periyava To:
Thanks to K.V.Krishnamoorthy: Saraswathi Thyagarajan <https://www.facebook.com/saraswathi.thyagarajan?fref=nf> *to* PERIYAVA THUNAI <https://www.facebook.com/groups/MAHAPERIYAVAA/permalink/741646805970249/> Yesterday at 19:11 <https://www.facebook.com/groups/MAHAPERIYAVAA/permalink/741646805970249/> · இறைவனால் ஆகாத காரியமும் உண்டோ! ஆனையாம்பட்டிதிரு எஸ்.தண்டபாணி ஜலதரங்கத்தில் அந்த நாளில் புகழ் வாய்ந்த வித்வான் என்பது யாவரும் அறிந்த விஷயம். 1984ல் பெரியவா தேனம்பாக்கம் வேதபாடசாலையை அடுத்த ஒரு சிறு அறையில் தங்கி கிணற்றுக்கு அப்புறம் இருந்து தரிசனம் கொடுத்து வந்த கால கட்டம். வித்வான் உடல் நிலை மோசமாக இருந்தமையால் அவர் இளைய சகோதரர் திரு கணேசன் தன் அண்ணா உடல் நிலை குறித்து பெரியவாளிடம் கேட்க வந்திருந்தார். திரு கணேசன் ஏஐஆரில் வாய்ப் பாட்டு, வயலின் வித்வானாக இருந்தவர். இவர்களின் தகப்பனார் சுப்பையர் மைசூர் அரண்மனையின் ஆஸ்தான வித்வானகத் திகழ்ந்தவர். கணேசன் தன் அண்ணா உடல் நிலை குறித்து பெரியவாளிடம் கேட்டபோது, பெரியவா மௌனத்தில் இருந்தமையால் ஜாடையில் ''நீயே ஜலதரங்கம் வாசியேன்'' எனச் சொல்லவும் திரு கணேசன் ''எனக்கு வாசிக்கத் தெரியாதே'' என பதில் சொல்லியிருக்கிறார். திரும்ப ஸ்வாமிகள் ஜாடையில் ''நீ வாசிப்பாய்'' என ஜாடையிலே சொல்ல அங்கயே வாசிக்கத் தொடங்கினார். என்ன ஆச்சர்யம்! தங்கு தடையின்றி வாசிக்க முடிந்தது அவரால்! தன் அண்ணாவுக்குப் பக்க வாத்யமாக வயலின் வாசிப்பது தவிர இந்த வாத்யம் பற்றிய சிறிதளவும் தெரியாத திரு கணேசன் அன்று அங்கு வாசித்தது அவர் அரங்கேற்றமாக அமைந்தது! அன்று தொடங்கி பல நிகழ்ச்சிகளில் வாசித்ததோடல்லாமல் ஸ்ரீ மடத்தின் ஆஸ்தான விதவானாகும் பாக்கியமும் கிட்டியது. அவன் அருளாலே எதைத்தான் சாதிக்க முடியாது என்பதற்கு மேலும் ஓர் சான்று! இந்த நிகழ்ச்சி நடந்து சரியாக பதினைந்து நாட்களில் அவரது தமையனார் இறைவனடி சேர்ந்தார். அதை முக்காலமும் உணர்ந்த சாக்ஷாத் பரமேச்வரன் அவரது தம்பியை அவரது வாரிசாக இசை உலகில் ப்ரக்யாதி அடையுமாறு செய்தது திரு கணேசன் பெற்ற பெரும் பாக்கியம்! இன்றும் கணேசன் அவர்கள் சென்னையில் தன் மகனுடனும் மனைவியுடனும் வசித்து வருகிறார். இதனை என்னிடம் பகிர்ந்தது திருமதி ஸ்ரீவித்யா அவர்கள் .அவரது மகள் ஜய ஜய சங்கரா.... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
