---------- Forwarded message ---------- From: p.v. narayanan Date: 2016-02-14 22:32 GMT+05:30 Subject: Fwd: Maha Periyava To:
- Thanks to Vijayaraghavan Sundaram: Shakala Devatha Darsan <https://www.facebook.com/photo.php?fbid=1112275602150937&set=gm.1090314764346533&type=3> "மருத்துவ அற்புதமா?...குருவின் மருத்துவ அற்புதமா?" கட்டுரையாளர்-டாக்டர் சுதா சேஷய்யன். நேற்று தினமணி வெள்ளி மணி 12-02-2016 1972-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி ஊட்டியில் இருந்தார் சந்திரசேகர மேத்தா.திடீரென்று சென்னையிலிருந்து தொலைபேசி அழைப்பு. H.M. மருத்துவமனையிலிருந்து Dr.P.C.ரெட்டி பேசினார். "உங்கள் தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். உயிர் பிழைப்பது கடினம்." செய்வதறியாத மேத்தா அப்போது மதுரையில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பெரியவர்களிடம் ஓடினார் கதறினார். "கவலைப்படாதே" என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார்கள் ஸ்ரீ பெரியவர்கள். "இந்த பிரசாதம் எப்படியாவது காலையில் உங்கள் தந்தைக்கு இட்டுவிடவேண்டும். நீ பாட்டுக்கு ஊட்டிக்குப் போகாலாம்" என்றும் சொல்லி விட்டார்கள். ஸ்ரீ பெரியவர்கள் மீது வைத்த ஆணித்தரமான பக்தியுடன் மதுரை ரயில் நிலையம் சென்றார் மேத்தா.அன்றிரவு சென்னைக்குப் புறப்படும் ரயிலின் ஓட்டுனரைத் தேடிப் பிடித்தார். அவரிடம் வேண்டிக்கொண்டு பிரசாதத்தைக் கொடுத்தார். சென்னைக்குத் தொலைபேசியில் தெரிவித்து 'இந்த ரயிலுக்கு வந்து பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம்' என்பது மேத்தாவின் திட்டம். ரயில் டிரைவர் ஒத்துக்கொண்டவுடன் சென்னைக்கு 'லைட்னிங் கால்' போட்டார்.விஷயத்தைச் சொன்னார். வீட்டுக்காரர்களுக்குக் கோபம். "மகன் நீ தந்தைக்கு ஒன்று கிடக்க ஒன்றாகிவிட்டால்... வர வேண்டாமா?" "என் குருநாதர் என்னை ஊட்டிக்குப் போகச் சொல்லி விட்டார். அவர் சொல்வதைக் கேட்பது என் கடமை" இது மேத்தா. ரயில் டிரைவரிடம் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு சென்னைக்கும் ரயில் நெம்பர் எல்லாம் தெரிவித்து விட்டு ஊட்டிக்கும் சென்றுவிட்டார் மேத்தா. மறுநாள் காலை 9-30 மணியளவில் ஊட்டிக்குத் தொலைபேசி அழைப்பு.அதே Dr.P.C.ரெட்டி. "மேத்தா ஏதோ மெடிக்கல் மிராக்கிள் (Medical Miracle) நடந்து விட்டது. உங்கள் அப்பாவுக்கு நோய் வந்ததும் தெரியவில்லை.போனதும் தெரியவில்லை. மருத்துவ அற்புதமா?...குருவின் மருத்துவ அற்புதமா? -- P.V.NARAYANAN -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
