<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
தனித்திறன் மேம்பாடு – வாழும் கலை
தனித்திறன் என்பது சிந்தனை, உணர்வு, செயல் போன்றவற்றால் ஒருவரை
மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது.

உங்களில் மறைந்திருக்கும் திறமையை கண்டறிந்தால் உங்களால் ஒரு வெற்றிகரமான
மனிதராக புகழ் பெற முடியும்.

*உலக வரலாற்றில், உங்களைப் போன்று வேறு ஒருவர் இருக்க முடியாது. எந்த
காலத்திலும் உங்களைப் போன்ற வேறு ஒருவரை காண முடியாது. நீங்கள் மட்டுமே அசல்.
நீங்கள் உங்களுக்கான தனித்தன்மையை உடையவர். உங்களின் தனித்தன்மையை
கொண்டாடுங்கள். *
*- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் *

பலர் கூடியிருக்கும் ஒரு அறைக்குள் வரும் குழந்தை மற்றவர்களைக் கவர்வதற்கு
எந்த ஒரு முயற்சியும் செய்யாத பொழுதும், அனைவரின் கவனமும் குழந்தையிடம்
ஈர்க்கப் படுகிறது. இயற்கையாகவே குழந்தையின் மழலைப் பேச்சும், கள்ளமில்லா
சிரிப்பும், அதன் எல்லாவித செயல்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

அனைவரும் வாழ்க்கையில் வெற்றிபெற எண்ணி உழைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் வெற்றி எண்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும்
அதிகமான பணத்தையோ அல்லது நீங்கள் வாழும் ஆடம்பர வாழ்க்கையையோ குறிப்பதல்ல.
நீங்கள் வைத்திருக்கும் அதிகமான பணமோ, வாழும் ஆடம்பர வாழ்க்கையோ உங்கள் உடல்
நலம் குன்றிவிட்டால் அதனை அனுபவிக்கும் மனநிலை உங்களுக்கு வராது.
பெரும்பாலானவர்கள் தங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை கொள்ளாமல் பணம்
சேர்ப்பதிலேயே குறியாக இருந்து கடுமையாக உழைக்கிறார்கள். அவ்வாறு பணம்
சேர்ப்பதே வெற்றி என்று எண்ணுகிறார்கள். ஆனால் வெற்றி என்பது பணம் சேர்ப்பது
மட்டுமா?

உங்கள் பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு அவற்றை உங்களின் வெற்றிக்கான
வாய்ப்புகளாக மாற்றுவதே உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக நீங்கள்
கற்றுக்கொள்ள வேண்டிய கலை.

அறிவை மேம்படுத்துவதற்கும், சுயமுன்னேற்றம் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு பல
நூல்கள் கிடைத்தாலும் அந்த நூல்களை படிப்பதால் மட்டுமே உங்களின் தைரியம்,
எண்ணங்கள், செயல்பாடுகள் மேம்படாது என்பதே உண்மை.

*உங்களைப்பற்றி அறிந்து கொள்வதே உங்களது வெற்றிக்கு ஆரம்பம் - அரிஸ்டாட்டில் *

உங்களது திறனை மேம்படுத்தும் முன்னர் உங்களைப்பற்றி அறிந்து கொள்வது மிக
முக்கியம். உங்களின் தனித்தன்மை, பலம், பலவீனம் அனைத்தும் உங்கள் வாழ்வின்
முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களது பலவீனங்களை
அறிந்துகொள்வதற்கு வெட்கப்படாதீர்கள்.

உங்களது எண்ணங்களும், செயல்களும் நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தால் மட்டுமே
உங்களை தனித்தன்மையுடைய மனிதராக மாற்றிக் கொள்ள முடியும். நேர்மறை எண்ணங்கள்
ஒருவருக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்.

வாழ்க்கையின் சூழ்நிலைகளும், நிகழ்வுகளும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. ஆனால்
நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களை மற்றவரிடமிருந்து தனித்துக் காட்ட உதவும்.

உங்களது கருத்துக்களை தெளிவாக, துணிச்சலுடன் சொல்லுங்கள். எந்த ஒரு
சூழ்நிலையிலும் எவ்வளது பேர் இருக்கும் அரங்கத்திலும் வெட்கப்படாமல் உங்களது
கருத்துக்களை நாகரீமான முறையில் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில்
தெளிவாக, திடமாக சொல்லுங்கள். அதே சமயம் மற்றவர் கருத்துக்களையும் கவனமாக
கேளுங்கள். அவற்றிலிருந்து நீங்கள் மாறுபடுகிறீர்கள் என்றால் அதனையும் தெளிவாக
வெளிப்படுத்த தயங்காதீர்கள்.

புதிய, வெவ்வேறு நிலையிலான பல மனிதர்களை சந்தியுங்கள். அவர்களிடமிருந்து
வெவ்வேறு கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் அனுபவங்களை கற்றுக்
கொள்ளலாம். புதிய சிந்தனைகளையும், ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால்
அதிகமாக படியுங்கள். நல்ல சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்
புத்தகங்களையும் படியுங்கள். எந்தவொரு விவாதம் நடைபெறும்போதும் உங்களது
எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு வாசிப்பு உங்களுக்கு உதவும்.

பெரும்பாலானவர்கள் மற்றவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்பதில்லை. மற்றவர்கள்
பேசுவதைக் கவனமாக கேட்டு அதன்பின் அதற்கு தெளிவாக பதில் சொல்பவர்கள்தான்
அனைவராலும் உற்று கவனிக்கப் படுவார்கள்.

அனைவராலும் மிகவும் விரும்பப் படும் நபராக நீங்கள் இருக்க வேண்டுமென்றால்
நீங்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் கருணையும் மனிதாபிமானமும் உடையவர்கள்
அனைவராலும் மதிக்கப் படுகிறார்கள்.

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் உங்களின் உடல்மொழி முக்கியப் பங்கு
வகிக்கிறது. நீங்கள் நடக்கும் முறை, பேசும் தொனி, உணவு உண்ணும் முறை அனைத்தும்
உங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும். நடக்கும்போது நிமிர்ந்த நிலையில்
இருப்பது உங்களின் தனித்தன்மையையும், தைரியத்தையும் வெளிப்படுத்தும்.
இருக்கையில் அமரும்போது நிமிர்ந்த நிலையில், எதிரில் அமர்ந்திருப்பவரின்
கண்களை நோக்கி பேசுவது உங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும்.   பேசும்போது
உங்கள் கைகளின் சைகைகள் உங்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.

உங்களின் உடைகள் விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். விலை உயர்ந்த
ஆடைகளோ அல்லது எளிமையான ஆடைகளோ முக்கியமல்ல. நாகரீகமாக உடை அணிவது முக்கியம்.
கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் அல்லது அதிகமான டிசைன்கள் உள்ள உடைகள் உங்கள்
மேல் கொண்டிருக்கும் மதிப்பை குறைக்கும். எனவே சூழ்நிலைகளுக்பேற்ப நாகரீகமான
உடைகளை அணிவது உங்கள் மதிப்பை உயர்த்தும்.

உங்களது தனித்தன்மையிலிருந்து எப்போதும், யாருக்காகவும் மாற முயற்சி
செய்யாதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரது செயல், நடை மற்றும் உடை மற்றும்
பழக்கங்கள் வேறுபடும். நீங்கள் மற்றொருவரைப் பார்த்து அவரைப் போல மாற
நினைக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை முன்னேற்ற முயற்சியுங்கள்.

உங்களின் முன்னேற்றத்தின் சாவி தன்னம்பிக்கை மட்டுமே. உங்களின் திறனை
மேம்படுத்துவதில் தன்னம்பிக்கை முக்கியம். உங்களின் நம்பிக்கையில் எந்த வித
சந்தேகங்களும் இல்லாமல், தீராத முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே
வாழ்வின் பயங்களை உதறி நம்பிக்கையை அதிகரிக்க முடியும். வெற்றிபெற்றவர்களின்
வாழ்க்கையைப் பற்றி அதிகம் படியுங்கள். அதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை
அதிகரிக்க முடியும்



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   *v **a n a k k a m**  S u b b u*    [image: humming-bird]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to