தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் / கைலாச நாதர் ஆலயம் நவ கைலாச நான்காவது தலம்

*அகத்தியரின் கூற்றுப்படி ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க
விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.*

*இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் பாபநாசம், கோடங்க நல்லூர், சேரன் மகாதேவி,
கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை,
ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை
ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.*

*தாமிர பரணி ஆற்றில்விட்ட தாமரை மலர் ஒதுங்கிய நான்காவது இடம் தான்
குன்னத்தூர் *


*நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது
நவகைலாயங்களில் நான்காவது கைலாயமான குன்னத்தூர் ராகு திருத்தலமாகும்.
ஜோதிடவியலில் தசா வரிசையில் ராகு ஆறாவது இடத்தைப் பெறுகிறது. ராகுவின் அருள்
கிட்டினால் நமக்கு நன்மைகள் நடந்து கொண்டிருக்கும். குன்னத்தூர் என்ற இவ்வூர்
செங்காணி எனவும் அழைக்கப்பட்டது. செங்காணி என்பது இவ்வூரில் உள்ள செம்மண்
நிலத்தைக் குறிக்கிறது. *

*மூலவர் ; கோத பரமேஸ்வரர் (கைலாசநாதர்)*
*அம்மை ; சிவகாமி அம்மாள்*
*தலவிருட்சம் ; நாகலிங்க மரம்*
*ஊர் ; குண்ணத்தூர்.  திருநெல்வேலி டவுன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2
கி.மீ. தூரத்தில் உள்ளது,*


*தலத்தின் சிறப்பு ; *
*லிங்கத்தில் நாகம் இருப்பதால் நவக்கிரகத் தலங்களில் ராகு பரிகாரத்தலமாகவும்
விளங்குகிறது.*

*சிவலிங்கத்தி்ல் நாகர் இருப்பது இதன் தனிச்சிறப்பு.*

*பிராத்தனை ; கால சர்ப்ப தோசம் , வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, குழந்தையின்மை
இவற்றிக்காகப் பால் அபிசேகம் செய்வது *


*வரலாறு ;  *

*   குன்னத்தூரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் காலத்தில் இவ்வூரில் ஒரு அதிய
மரம் இருந்தது. அந்த மரம் ஆண்டிற்கு ஒரு பூ மட்டும் பூத்து ஒரு பழம் மட்டும்
பழுக்கும். அந்த அதிசயக் கனியை அரசன் ம்ட்டுமே உ்ண்பான், ஒரு முறை
இம்மரத்தி்ல் பழுத்த பழம், அதன் பக்கமாக தண்ணீர் எடுத்துச் சென்ற பெண்மணியின்
குடத்தில் தானாகவே விழுந்து விட்டது, அதை அப்பெண்ணும் கவனிக்க வில்லை, எனவே
தனக்குத் தெரியாமல் விழுந்த பழத்துடனே வீட்டிற்குச் சென்று விட்டாள்
இப்பெண்மணி. அப்போது, அதிசய மரத்தில் இருந்த பழம் காணாதது கண்டு மன்னனிடம்
காவலர்கள் புகார் செய்ய , அக்கனியைத்  திருடிச் சென்றவர்களைக் கவனிக்க
உத்தரவிட்டான், காவலர்கள் அவ்வூரில் உள்ள எல்லாருடைய வீடுகளிலும் சென்று
தேடினார்கள், இத்தருணத்தில் தண்ணீர் குடத்தில் விழுந்த பழத்துடன் சென்ற பெண்,
தான் நீர் குடிப்பதற்கு த்தண்ணீர் எடுக்கும்போது அக்குடத்தில் இருந்த
அதிசயப்பழத்தையும் கண்டாள். உடனே இதனை மன்னனிடம் கொண்டுபோய் சேர்ப்பித்தாள்,
உடனே மன்னன் இந்தப் பெண்தான் இக்கனியைத் திருடிக் கொண்டு சென்றதாக குற்றம்
சாட்டி, இப்பெண்ணைக் கழுவேற்ற உத்தரவிட்டான்.*

*  இந்தப் பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் பெண்களும்,
குழந்தைகளும், பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் எனச் சாபமிட்டாள். எனவே
இதன்படி இவ்வூர் நாளடைவில் விருத்தியின்றிக் காணப்பட்டது, இருப்பினும்
இங்குள்ள கைலாச நாதர் சிறப்பினால் புத்துயிர் பெற்றது. இவரை வணங்கினால்
பெண்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அழியாத
நம்பிக்கை.*

*கல்வெட்டு சான்று: *
*இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவைகளாகும். கோயில்
பூஜைகளை நடத்த வீரபாண்டிய மன்னன் நான்காயிரத்து இருநூறு பணம் கொடுத்துள்ளார்
என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலில் நில அளவுகோல்
ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க இந்த
நில அளவு கோல் பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. *

*தனிச்சிறப்பு: *
*இத்திருக்கோயிலின் இறைவன் கோத பரமேஸ்வரர் ஆவார். இறைவி சிவகாமி அம்மன் ஆவார்.
கருவரையில் உள்ள இறைவன் நெஞ்சில் சர்ப்பம் உல்லது போல் சிலை
அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் பன்னிரெண்டு கரங்களோடு ஆறுமுக
நயினார் அருள் பாலிக்கிறார். இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகும்.
இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னரே மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் கோத பரமேஸ்வரரை வேண்டி ராகு பரிகாரம் செய்தால் தடைபடும்
திருமணம் நடக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும் நற்புத்திரர்கள்
கிடைப்பார்கள். காலசர்ப்ப தோஷம் நாக தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று வளம்
பெறலாம். *

*அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேல
திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது*

*you tube link*
* https://www.youtube.com/watch?v=L9OXbjf29og*
<https://www.youtube.com/watch?v=L9OXbjf29og>

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   [image: [?]]🏼[image: [?]]🏼[image: [?]]🏼[image: [?]]*v **a n a k
k a m**  S
u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to