5.திருமணப் படலம்

நீதி  தவறாமல் ஆண்டுவந்த தடாதகைப் பிராட்டி மணப்பருவத்தை அடைந்தார் காஞ்சனமாலை
தன் அருமை மகளைப் பார்த்து, உனக்குக் கன்னி பருவம் வந்தும் இன்னும் திருமணம்
 ஆகவில்லையே என்று கூறி வருந்தினாள். அதற்குத் தாடதகை,யாவும் ஆகும்போது ஆகும்
: கவலை வேண்டாம். நான் எட்டுத் திக்குகளிலும் என் வெற்றியை நிலைநாட்டித்
திரும்புவேன். நீ இங்கே இருப்பாயாக" என்றார்.

தடாதகை நால்வகைப் படைளுடன் சென்று பல நாடுகளை வென்றார்.

இறுதியாக சேனையுடன் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு நந்தி முதலிய
சிவகணங்களுடன் போர் செய்து அவர்களை வென்றார்.அதனால் சிவபெருமானே போருக்கு
எழுந்தார்.அவரைக் கண்டவுடன் தடாதகையின் தனங்களில் ஒன்று மறைந்தது உடனே அவர்
நாணம் கொண்டு தலைகுனிந்து நின்றார்.பின்பு பிராட்டியார் மதுரைக்குத்
திரும்பிவிட்டார்.

முன்பு அசரீரி கூறியபடி சிவபெருமானே தடாதகையின் கணவன் என்பது புலப்பட்டது.
இருவருக்கும் திருமணம் நடத்த மிகச் சிறந்த எற்பாடுகள்
செய்யப்பட்டன.திருமணத்திற்குத் திருமால்,பிரம்மா முதலிய தேவர்களும்
முனிவர்களும் வந்திருந்தார்கள். நகரமக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை.வீடுகளும் மாளிகைகளும் நன்கு அலங்கரிக்கப்பட்டன.நம் தடாதகைப்
பிராட்டியார் இந்நம்பியை அடைவதற்கு என்ன தவம் செய்தாளோ? என்பர் சிலர்.இம்
மதுரை செய்த தவம்தான் யாதே? என்பர் சிலர்.
திருமணத்திற்குரிய நல்ல வேளையில் முரசங்கள் ஒலித்தன.சங்குகள்
முழங்கின.தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.சிவ பெருமானுக்குப் பக்கத்தில்
தடாதகைப் பிராட்டியார் வீற்றிருந்த காட்சி கற்பகத்தருவின் பக்கத்தே மலர்ந்த
பூங்கொடிபோல் இருந்தது.

திருமணச் சடங்குகள் எல்லாம் நிறைவேறின.பிரமதேவரே அவற்றைக் குறைவின்றிச் செய்து
முடித்தார்.சிவபெருமான் திருமாங்கல்யத்தை  தடாதகைப் பிராட்டியாருக்குச்
சூட்டினார்.அவர் முறைப்படி எல்லோருக்கும் பரிசுகளை வழங்கி வழியனுப்பினார்.

பின்பு சிவபெருமான் அரசர் பணி செய்து அரசியல் நடத்தும் முறையைப் பிறர்க்கு
எடுத்துக் காட்டினார். குடிமக்களுக்கு மன்னனையும்,பகையரசர்களாகிய
யானைகளுக்குச் சிங்கமாயும், பெண்களுக்கு மன்மதனையும்,நிலமக்களுக்குத்
திருமாலாயும்,ஞானியர்களுக்கு முழுமுதலாகியும் நிகரில்லாத சச்சிதானந்தப்
பொருளாயும் அவர் விளங்கினார்.

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to