பெண்களின் கூந்தலைப் பற்றிக் காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகமாக
பேசப்பெறுகின்றன. நீண்ட தலைமுடியையே கூந்தல் என அழைக்கின்றோம். நீண்ட கூந்தலை
விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும்,
பெண்களும் வித்தியாசமின்றிக் கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று
பெண்கள் கூடக் கூந்தலைக் கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக்
கொண்டுள்ளனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல்
என்பது சில பெண்களுக்குக் கனவாக அமைந்துவிடுகிறது. கூந்தலை வளர்ப்பது
பெரிதல்ல... அதைப் பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி
உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளைப் பயன்படுத்தி சிலர்
மேலும் முடிகளை இழக்கின்றனர். முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய
கூந்தலைப் பெறவும் பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம்.
பொடுகினால்தான் அநேகப் பேருக்கு முடி உதிர்கிறது. தலையில் அரிப்பு இருந்தாலே
பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த
நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தைச்
சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை
முழுவதும் பரவிச் சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல்
பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.

சிலருக்கு இந்நோயின் தாக்கம் *கண் **புருவங்களிலும்* ஏற்படுவதுண்டு. தலையைச்
சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும்  இது
உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்த பொடுகைத்
தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும்.

கூந்தல் பராமரிப்பு  என்பது ஒரு தனிக்கலை எனலாம். அக்காலத்தில் பாட்டிமார்,
அம்மா, அக்காள்  போன்றவர்கள் உதவியுடன் கூந்தலைச்  சிக்கலெடுத்து, பின்னி,
மலர்களால் அலங்கரித்துச் சிங்காரிப்பதெல்லாம் பொழுது போக்காகச் செய்தார்கள்.
இன்றைய அவசர உலகில் இது சாத்தியமாகாமல் விடுவதும் ஒரு காரணமாகும்.

தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூந்தல் உதிர்தல் அதிகமானதால், சிலருக்கு
வழுக்கைத் தலை கூட வந்துவிட்டது. அதுவும் இத்தகைய வழுக்கைப் பிரச்சனை
இளமையிலேயே வந்திருப்பது வேதனைக்குரியதே.

எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை
பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை
வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின்
பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன்
மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது
என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையைக் கட்டுப்படுத்தவோ
அல்லது உதிர்தலின் அளவைக் குறைக்கவோ முடியும்.

இதற்கு இயற்கை முறைகளே சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும்
மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு
கட்டுப்படுத்த முடியும். கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய பொருட்கள்
என்னவென்பதையும் அவைகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்ற விபரங்களும் கீழே பதியப்
பெற்றுள்ளன.

அத்துடன் கூந்தல் வளர்ச்சிக்கு உடலில் சுரக்கும் ஹார்மோன்களும்
காரணிகளாகின்றன. அவ்வாறான ஹார்மோன் சுரப்புகளைச் சுரக்கத் தூண்டும் சில உணவு
வகைகளையும் நமது உணவில் சேர்த்துக் கொள்வதனால் அடர்த்தியான, கருமையான
கூந்தலைப் பெறுவதோடு சுகதேகியாகவும் வாழலாம் என்பது வைத்திய நிபுணர்களின்
கருத்து. அவற்றைத் தங்கள் உடல் நிலைக்கு ஏற்பச் சரியானதைத் தெரிவு செய்து
பாவித்து பயன்பெறுவது உங்கள் பொறுப்பு.

*பொடுகு வராமல் தடுக்க*
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நெய், பால், வெண்ணெய்
முதலிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை
கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக்
காப்பாற்றலாம்.

*பொடுகினை அழிக்க*
பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே
சிறந்தது.
வேப்பிலை     2 கைப்பிடி
நல்ல மிளகு - 15-20
இரண்டையும் அரைத்து தலையில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால்
பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து
1 மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் பொடுகு வராது.
அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி
ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு
வராமல் காக்கும்.

நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை
தினமும் தலையில் தேய்த்து வரலாம்.
வெள்ளை மிளகு        4 தேக்கரண்டி
வெந்தயம்                       2 தேக்கரண்டி
இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம்
ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு
வளரும்.

சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து
குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாகக் கருகும் வரை கொதிக்க வைத்து அதை
வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது
நீங்கும்.
தேங்காய் பால்           - 1/2 கப்
எலுமிச்சை சாறு   - 4 தேக்கரண்டி
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்துவந்தால்
பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
பசலைக் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு
நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட
கூந்தலைப் பெறலாம்.

*தலைமுடி பராமரிக்கும் முறை:*
1. வேப்பிலையை அரைத்துத் தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை
அலசலாம்.

2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து
அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள்
கழித்து அலசலாம்.

3. வெந்தயத்தைக் கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்துத் தலையில் தேய்த்து 20-30
நிமிடங்கள் கழித்து அலசலாம்.

4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனைத் தலையில் தேய்த்து ஊறவிட்டு
பின்னர் நன்கு அலசி விடலாம்.

5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர்
காலையில் தலைக்குக் குளிக்கலாம்.

6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு
கொதிக்கவிடவும். அந்தத் தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல்
தடுக்கலாம் .

7. வினிகரைத் தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிப்பருப்பு, ஆவாரம்பூ இவை
எல்லாவற்றையும் வெய்யிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்
கொள்ளுங்கள். இந்தப் பொடியை ஷாம்பூவுக்குப் பதிலாக வாரம் இருமுறை  கூந்தலில்
தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

9. ஹேர் டிரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின்
வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர்
கலர் உபயோகிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது .

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள்
காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

11. முட்டை வெள்ளைக் கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து , ஊற வைத்து மாதம்
இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

12. முடி உதிர்வதைத் தடுக்க அதிகம் அயன்(இரும்பு) ,வைட்டமின் நிறைந்த உணவு
வகைகளைச் சாப்பிட்டு வரவேண்டும் .

13. இன்று முக்கால் வாசிப் பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது
முற்றிலும் தவறு .தலைக்குத் தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம்
எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது  நல்ல எண்ணையில் இரண்டு மிளகு
,பூண்டு இவை இரண்டையும் போட்டுச்  சிறுது  நேரம் குறைந்த தீயில் காயவைத்து
தலையில் தடவி சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி
உதிர்வதையும் தடுக்கலாம் .

15. கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம்
இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையைத் தடுக்கலாம்.

*தலை முடியில் பேன், ஈர் உள்ளவர்கள்:*
தலை குளித்த (முழுகிய) பின்பு  ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரை கலந்து
தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையைக் கட்டி .15 நிமிடம் வரை சுவற
(ஊறவைக்கவும்)
விடவும்.  பின்பு தலைமுடியை பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈர்,
பேன் எல்லாம் வந்து விடும். இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை செய்து
வந்தால் பேன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

*தலைமுடிக்கு உகந்த வெந்தயம்:*
1. இரவு படுக்கப் போகும் முன்பு வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில்
ஊறப் போடவும்.

2. மறுநாள் காலையில் அதை விழுதாக அரைத்துத் தலையில் தேய்த்து ஒரு மணிநேரம்
தலையில் சுவற விடவும்.

3. பின்பு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

4. கோடை காலத்தில் இந்த வைத்தியம் மிகவும் ஏற்றது. கண்களுக்கும் குளிர்ச்சியை
அளிக்கும்.

5. உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்கும்.

6. சளி பிடித்திருக்கும் போது மற்றும் காய்ச்சல் சமயங்களில் இதனைச் செய்ய
வேண்டாம்.

*கூந்தல் கருமையாக வளர:*
1. உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கருமையாகவும் இருக்க உங்கள் உணவில்
எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

2. உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது.

3. தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக்
நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி
மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

4. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.

5. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான்
முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.

6. ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும். கண்டிஷரை
முடியின் வேர்களைவிட நுனிப் பாகத்தில் தடவுவது நல்லது.

7. தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு நுனிப்பகுதியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதனால் பெண்களின் கூந்தல்  வளர்ச்சி குன்றி அழகு கெடுகிறது.

8. இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண, நுனிப் பகுதியை அடிக்கடி சிறிய
அளவில் வெட்டி விட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிச்
செய்வது  பலன் அளிக்கும்.

9. மேலும் மாதம் ஒருமுறையாவது ஷாம்பூ தடவிய பின் நீண்ட நேரம் கழித்துக்
குளிக்க வேண்டும். சிறந்த நிறுவனங்களின் பிராண்டட் ஷாம்பூகளையே பயன்படுத்த
வேண்டும். தலைமுடியை  அதிக சூட்டில் உலர்த்த வேண்டாம்.

10. குளித்தவுடன் ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது
தொப்பியை உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து  முடியைப்  பாதுகாக்கவும்.

11. கூந்தலை பராமரிப்பதற்கு ஏராளமான அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால்,
அவ்வப்போது அதுபோன்ற அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக்
கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                 [image: Right ☯ no buy ever !!!]   *V A N A K K A M     S
U B B U *
[image: xyz]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to