Thirukolur Penpillai Rahasyam-45

*வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே*
அயோத்தியின் அரசர் தசரதனுக்கு நான்கு மகன்கள் –மூத்தவர் இராமர், இலக்குவன்,
பரதன்,  சத்துருகனன். நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாகச் சேர்ந்து பல்வேறு
கலைகளைக் கற்றனர். இலக்குவன், இராமரிடம் தனி அன்பும், மரியாதையும்
கொண்டிருந்தார். விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன்
யாகங்களுக்கு இராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனைத்
தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு
இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார்.

இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணிய பொழுது, கைகேயி  தனது மகனான பரதன் அரசனாக
வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு
வரங்களைக் கேட்க, தாய் சொல்லை மறுக்காமல், இராமரும் உடனடியாகவே காட்டுக்குக்
கிளம்பினார். அவர் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன்
காட்டுக்குக் கிளம்பினர்.

தனித்து வனவாசம் செல்ல எண்ணிய ராமரிடம், இலட்சுமணன் – “நீரின்றி மீனால் வாழ
முடியாது. அது போல் தான் தாங்கள் எனக்கும், சீதா தேவிக்கும்.  எங்களையும் உடன்
அழைத்துச்செல்லுங்கள்.”, என்றார்.

இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரையும் சீதா
தேவியையும் பாதுகாத்து வந்தார் இலட்சுமணன். இராமனுக்கும் சீதா தேவிக்கும்
தேவையான பணிவிடைகளை இலட்சுமணன் செய்தார். பஞ்சவடியில் இராமரும் சீதா தேவியும்
தங்குவதற்கு குடில் அமைத்துக் கொடுத்தார்.

சீதா தேவியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராமருக்குப் பக்க பலமாய் நின்று
இராவணனை வென்று சீதையை மீட்க உதவினார். அயோத்தி திரும்பிய பின், மன்னராக முடி
சூடிக்கொண்ட இராமர், இலட்சுமணனைப் பட்டத்து இளவரசராக முடி சூடிக் கொள்ளக்
கூறிய போது, அதைப் பணிவுடன் மறுத்து, “என்னை விட பரதனே அப் பதவிக்குத்
தகுதியானவன். அடியேன் தங்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்.”, என்றார்.

திருக்கோளூர் அம்மாள், “இலட்சுமணன் போல் சரணாகதி அடைந்து, இராமர் செல்லும்
இடமெல்லாம் அவருடன் சென்று அவருக்கு பணிவிடைகள் செய்தேனா?” – என்று
வினவுகிறார்.
*         ========********========**********========**********========*


*vazhi adimai seydhEnO lakshmaNanaip pOlE*

Rama was born to Kaushalya and King Dasharatha while Lakshmana and his
brother Shatrughna were born to Sumitra and King Dasharatha. Lakshmana is
personified by Rama as a man with unwavering loyalty, love and commitment
to his elder brother through times of joy and adversity alike. Lakshmana is
specially attached to Rama.

When sage Vishwamitra took Prince Rama with him for killing the demons,
Lakshmana accompanied his brother. When Rama was asked to go to the forest
based on the boons that Kaikeyi got from King Dasaratha, Lakshmana too
wanted to go with Him. Initially, Rama did not agree to that.

Lakshmana pleaded with Lord Rama stating: "Just as a fish would not survive
out of the water, so too mother Sita and myself cannot survive separation
from You. Therefore, You have to take me with You." He then told Lord Rama
that when He and Sita live and play in the sides of mountains, he would
perform all kinds of services to them "aham sarvam karishyAmi".

Lakshmana's mother Sumitra tells him that he was made for the sake of
living in the forest "srushTstavam vanavAsAya". She also warned him that he
should not lose his mind watching the beauty of Rama's walk and fail in his
duties.

During their exile, Lakshmana served Rama and Sita reverently. In
Panchvati, Lakshmana also built a hut for Lord Rama and Sita to live
in. There, never, was a situation where Lakshmana opposed Rama, except
when, after the war, when Rama asked Sita to give test of her purity,
Lakshmana for the first time got angry on Rama and opposed him.

After the war in Lanka, Rama was crowned king of Ayodhya and Bharata became
the crown prince. Rama had offered to make Lakshmana the crown prince but
he refused, saying Bharata is greater than he, and more deserving of the
title. He added that he love to be on service for Rama than bearing the
crown prince title.


Thirukkolur Ammal is asking "Did I stay always with Him and perform all
kinds of services like Lakshmana?"




Audio LInk:

http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr45.m4a


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 [image:
oEYIwho5P65TiFULlri0IGP98yjfF3i_Pu6P9Rip2BHdReujIr3MmDnJ9Yn8411O.png]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bo2Zkfzo-Q3bfS1AY31ceY9gGJyffhwqvgHxCdLKdY4AQ%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to