*47. அசுவாருட மூர்த்தி* *பரிமேலழகர் அல்லது அசுவாரூட மூர்த்தி என்பது, ஈசனின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒன்றாகும். மணிவாசகருக்கு அருள்வதற்காக, ஈசன் கொண்ட திருக்கோலமே இப்பரிமேலழகர் திருக்கோலம் ஆகும். *
*வெண்ணிறாடை புனைந்து, கம்பீரமான தோற்றத்தில், மணிக்குண்டலமும், முத்துமா்லையும் தரித்தவராக குதிரை மீது காட்சி தருகின்றார் பரிமேலழகர். அவரது திருக்கரங்களில் ஒன்று, குதிரைக் கடிவாளத்தைத் தாங்கியதாகவும், மறுகரம் வெண்குடையொன்ரு தாங்கியதாகவும் அமையும்படி சித்தரிக்கப்படுவதுண்டு அப்பொழுது வயதானப்பாட்டி தனக்கு ஆள்இல்லாமல் வருந்தினார். அப்பொழுது கூலியான் போல் வேடமுற்று பாட்டியின் பிட்டுவை உண்டு வேலை செய்யாமல் படுத்திருந்தார். அச்சமயம் அங்குவந்த மன்னன் சிவபெருமானைப் பிரம்பால் அடிக்க அவ்வடி உலக உயிர்கள் ஒவ்வொருவரின் மேலும் பட்டது. உடன் வானில் அசரீரீ தோன்றி மாணிக்கவாசகரை விடுவிக்கும்படி சொன்னது உண்மையறிந்த மன்னன் அவரை விடுவித்து சிவபெருமானிடமும், அவரிடமும் மன்னிப்பு வேண்டினான். மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தி யாகும்.* *திருப்பெருந்துறையை விட்டு மதுரை திரும்பிய மணிக்கவாசகர் தன் இல்லம் சென்றார். உறவினர்கள் அவர் நிலை அறிந்து அவருக்கு அறிவுரை கூறினர். அரசன் ஆனைப்படி செய்யாததால் உங்கள் பெருமைக்கு இழுக்கு ஏற்படும் என்றனர். என்ன நேர்ந்தாலும் கவலையில்லை, நான் எம்பெருமானை மறவேன் என்றார். மன்னன் குதிரைகள் ஏன் வரவில்லை என்றார். இன்னும் மூன்று நாட்களில் வரும் என்றார். அனைவரும் காத்திருந்தனர், ஆனால் குதிரைகள் வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. ஆகவே மாணிக்கவாசகரைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தார். சிறையில் மாணிக்கவாசகர் சோர்ந்துவிடாமல் சிவபெருமானைத் துதித்தபடியே இருந்தார் பாடல்கள் பலப்பாடியபடி இறைவனை துதித்தார். இறைவன் நந்தி முதலான கணங்களை அழைத்துக் காட்டில் திரியும் நரிகளைப் பரிகளாக்கி நீங்கள் அவற்றை நடத்தும் சேவர்களாக உரு மாறுங்கள் என்றார். சிவபெருமான் தானே குதிரைகளை ஓட்டுபவனாக மதுரைக்குச் சென்றார். குதிரைகள் வந்தும் மன்னன் மாணிக்கவாசகரை விடுவித்தான். குதிரை வல்லுநர்கள் அந்தக் குதிரைகளின் திடம் மற்றும் சுழியை ஆரய்ந்து மன்னா, நாம் கொடுத்த விலையைவிட பன்மடங்கு மதிப்புக் கொண்ட உயர்சாதிக் குதிரைகள் இவை என்றனர். குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டது. சிவனார் தன் பரிவாரங்களுடன் மறைந்தார்.* *இரவில் புதிய குதிரைகள் கனைப்பதற்குப் பதிலாக ஊளையிட்டுப் பழைய குதிரைகளை கடித்துக் குதறி காட்டுக்குள் ஓடி மறைந்தது. மீண்டும் மாணிக்கவாசகர் சிறையில் அடைக்கப்பட்டார்.* * அச்சமயத்தில் மாணிக்கவாசகரின் எண்ணத்தின் விளைவாகவும், சிவபெருமான் மேல்கொண்ட நிந்தனையாலும், வைகை ஆற்றில் நீர் நிலை குன்றி மக்கள் துன்பமடைந்தனர். மக்கள் துன்பம் தீர மாணிக்கவாசகர் இறைவனைப் பிரார்த்தித்தார். இறைவன் அருளால் வைகையில் வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. ஆற்றின் கரைகளை பலப்படுத்த வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் வர வேண்டும் என மன்னன் கட்டளையிட்டான். அப்போது பிட்டு விற்கும் மூதாட்டி தனி ஆளாக இருந்ததால் தனக்குப் பதிலாக பணியாற்ற ஆளின்றி வருந்தி சிவபெருமானை வேண்டினாள். அந்த மூதாட்டியின் வேண்டு கோளுக்கிணங்கி சிவன் கூலியாளாக வந்து கூலியாகப் பிட்டு தரச்சொல்லி சாப்பிட்டு வைகை சென்றவர் வேலையைச் செய்யாமல் படுத்து உறங்கினார். கோபம் கொண்ட மன்னன் பிரம்பால் அவன் முகில் அடிக்க அந்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் பட பாண்டியன் ஆச்சரியப்பட்டான்.* *அப்போது விண்ணிலிருந்து வாதவூராரை விடுவிக்க என்ற ஒலி கேட்க மன்னன் அவரை விடுவித்து மன்னிப்பு கேட்டான். அரசன் கொடுத்த பொருட்களை சிவப்பணிக்கே செலவிட்டார் மாணிக்கவாசகர்.* *திருவாதாவூரார் துன்பம் அடையக்கூடாது என்பதற்காக நரிகளைப் பரிகளாக்கி தானே குதிரைத் தலைவனாக மதுரை மன்னனிடம் சென்று புரவிகளை ஒப்படைத்த வடிவம் அசுவாரூட மூர்த்தி. மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி யாகும். இங்கமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி நமக்கு மேலிடும். இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க வாகன யோகம், மனம் பக்குவமடையும். * <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *பரிமேலழகரின் திருக்கோலத்தை மணிவாசகரும், * *திருவாலவாயுடையார் புராணமும் வருமாறு வருணிக்கிறார்கள்.* *வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் - அன்னைப்பத்து 07 * *மன்னியநித் திலமாலை நில வெறிப்ப மாணிக்கக் குண்டலங்கள் வெயில் விரிப்பத் துன்னுலகுக்கு ஒருகுதிரை யாளாம் சோதி சோதிவிடு குப்பாயம் மெய்ப்பால் மின்ன, முன்னைமறைப் பரியைநெறி ஐந்தும் ஓங்க முடுகிவலம் இடம்பரிவத் தனம்செய் வித்து மின்னுண்மணிப் பொலன்கலினக் குசை வலித்து விளங்குகர வாளம் கை துளங்க வந்தான்” - நரி பரியான திருவிளையாடல் 34* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! * *வாழிய பாரதமணித் திருநாடு! * *வணக்கம்* *சுப்பு* *[image: 🔰NB Neil🔰10Q SuzUPG2] * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BohswhOkwG%2BUXai2C1kdqdFNU30KMf1nxsWuQVJSfhF-g%40mail.gmail.com.
