<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*48. கஜாந்திக மூர்த்தி* *கஜாந்திக மூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாகச் சைவர்களால் வணங்கப்பெறும் வடிவமாகும். சூரபத்மன் முருகன் போரில் தேவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது தேவர்களுடன் ஐராவதமும் போரில் சண்டையிட்டது. பானுகோபனின் தாக்குதலால் ஐராவதம் தன்னுடைய தந்தத்தினை இழந்தது. போர்முடிந்ததும் தேவலோகம் சென்ற ஐராவதம் தன்னுடைய அழகையும், வலிமையும் புதுப்பிக்கச் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரங்களைப் பெற்றது. * *ஐராவதம் எனும் இந்திரனின் யானையானது, போரில் படுகாயமுற்று பின்வாங்கியமைக்காக வருந்தியது. எனவே திருவெண்காடு வந்து சிவபெருமானை வணங்கியது. சிவபெருமான் ஐராவதத்தின் வேண்டுதலைக் கண்டு மகிழ்ந்து ஐராவதத்தின் உடைந்த கொம்பினைச் சரிசெய்து, மனவருத்தத்தினை நீக்கினார்.சூரபன்மனுடைய தொல்லை தாங்காமல் இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் தங்கியிருந்தான். அங்குவந்த தேவர்கள் அசுரனின் தொல்லை அதிகமாக இருப்பதைச் சொல்ல இந்திராணியை அரிகரபுத்திரனின் பாதுகாப்பில் வைத்துவிட்டுத் தேவர்களுடன் கயிலை சென்று நந்தி தேவரிடம் சிவபெருமானைச் சந்திக்க அனுமதி கேட்டார். சிவனார் சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தமையால் நந்திதேவர் அனுமதி மறுக்க இந்திரன் கயிலையில் பலகாலம் தங்கியிருக்க நேர்ந்தது.சூரபன்மனுடைய தங்கை அசமுகி, துன்முகி இருவரும் பூவுலகில் இருந்த இந்திராணியைப் பார்த்துத் தன் தமையனுடன் வாழும்படி கேட்க அதை இந்திராணி மறுத்ததனால் அவளைப் பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றனர். அரிகரபுத்திரன் அவர்களைத் தடுக்க, தங்களிடமிருந்த சூலத்தை அவன்மேல் ஏவிவிட்டு இந்திராணியை தூக்கிக் கொண்டு வான்வழி செல்ல அரிகரபுத்திரன் அசமுகி இடுப்பைப் பற்றி அவளின் கரத்தை வெட்டி இந்திராணியை விடுவித்தார். பின் நீயும் இந்திராணியைத் தொட்டாய் அல்லவா எனக்கூறி துன்முகியின் கைகளையும் வெட்டினார்.கைகள் வெட்டப்பட்ட நிலையில் இருவரும் தன் சகோதரனிடம் சென்றுகூற சூரபன்மனின் மகன் பானுகோபன் தான் சென்று அவர்களைச் சிறைசெய்து வருவதாகக் கூற அவனை ஆசீர்வதித்து அனுப்பினான் சூரபன்மன். எங்கு தேடியும் இந்திரன் இந்திராணியைக் காணாததால் தேவலோகம் செல்ல அங்கு இந்திரன் மகன் சயந்தனைக் கண்டு அவனுடன் போர் புரிய பானுகோபனின் அம்பு பட்டு சயந்தன் மயக்கமடைய, ஐராவதம் பானுகோபனை அழிக்க எதிர்த்து வந்தது. தாக்குதலில் ஐராவதத்தின் கொம்புகள் உடைந்ததால் அதன் வலிமை குன்றியது. சயந்தனையும் தேவர்களையும் பானுகோபன் சிறைபிடித்துத் தன் தந்தைமுன் நிறுத்தினான்.தன் கொம்புகளை இழந்த ஐராவதம் மண்ணுலகில் திருவெண்காடு தலத்தில் சுவேதாரண்யேசுரரை நினைத்து சூரிய, சோம, அக்னி தீர்த்தங்களில் மூன்று வேளை நீராடி இறைவனைத் தொழுதது. சிவபெருமான் காட்சி கொடுத்து நின் கொம்புகள் பழையபடி ஆகுக என்றும் அமரர் துயர் ஒழிந்தபின் அமராவதியை அடைந்து இந்திரனுக்கே ஊர்தியாய் இரு எனவும் அருள்புரிந்தார். முருகன் சூரபன்மனால் தேவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை அகற்றி தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பின்னர் ஐராவதம் விண்ணுலகு சென்றது.சூரபன்மன் மகன் பனுகோபனுடன் போரில் தன் தந்தங்களையும் வலிமையையும் இழந்த ஐராவதத்திற்கு அருள் புரிந்த வடிவம் கஜாந்திக மூர்த்தி. ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிக் கொடுத்து வேண்டும் வரம் கொடுக்க சிவபெருமான் கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படுகிறார். இவரை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் வணங்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் என்றும் இறைவி திருநாமம் பிரம்மவித்யா நாயகி என்றும் வணங்கப்படுகிறது. இங்கமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும். மேலும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம். * *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! * *வாழிய பாரதமணித் திருநாடு! * *வணக்கம்* *சுப்பு* *[image: 🔰NB Neil🔰10Q SuzUPG2] * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BrMhnhf5HRQQAnh%2BMqzYpdMSW3nkmEGY-9vjLuygkgOJA%40mail.gmail.com.
