Sir
     நகரெங்கும் இப்போது நிறைய மிதிவண்டி பிரியர்களைக் காண முடிகிறது. வண்ண
வண்ணமான உடுப்புகளோடு, மண்டை கவசமணிந்தபடி எங்கேயோ போகிறார்கள்.
சிற்றுண்டியகங்கள், தேநீரகங்கள் முன்னர் நின்று தற்படம் எடுக்கிறார்கள்.
கூட்டமாக நின்று ஆங்கிலத்தில் கதைக்கிறார்கள்.

மிதிவண்டி ஓட்டம் சார்ந்த போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சி எடுப்பவர்கள்
ஒருவகையினர். மீறிப்போனால் 5% எண்ணிக்கையில் இருக்கும் அவர்கள் அலப்பறைகளில்
ஈடுபடுவதில்லை. ஒரு குறிக்கோளுடன் திட்டமிட்டு இயங்கும் அவர்களை
விட்டுவிடுவோம்.

திடீர் சைக்கிளிங் வெறியர்கள்தான் நம்மைப் பாடாய் படுத்துகிறார்கள்.
சைக்கிளிங் பண்ணுனா தொப்பையைக் குறைக்கலாம், கால் முட்டிக்கு ஜாகிங் போறதவிட
நல்லது, முதுகுக்கு பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு சிறந்தது, நல்ல
அவுட்டோர் எக்சர்சைஸ், இயிற்கையை இரசிக்கலாம் என்று அதன் சிறப்பம்சங்களை
எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஊதாரித்தனம், தேவையற்ற நுகர்வுக் கலாச்சாரத்தின் அடையாளம் இந்த திடீர்
மிதிவண்டி வெறியர்கள் என்றே சொல்லலாம்.

ஒரு நாளைக்கு இருபது முப்பது கிலோமீட்டர் ஓட்டுவதற்கு ஆரம்ப விலை
இருபதாயிரத்தில் இருந்து வரும் எட்டு கியர் உடைய சைக்கிள், இரண்டாயிரம்
ரூபாய்க்கு கபால கவசம், அதற்கு மேல் கேமரா, பிரத்தியேக டவுசர், மேல் சட்டை,
ஷூ, எவ்வளவு கிலோமீட்டர் ஓட்டியிருக்கிறோம் என்று அளவிட கார்மின்
கைக்கடிகாரம், அலைபேசி வைக்க தனியாகப் பை, மிதிவண்டிக்கென சிறப்பு தண்ணீர்
போத்தல்கள், ஆக்சசெரீஸ் என்ற பெயரில் பின்னால் ஒளிரும் சிவப்பு விளக்கு,
முகப்பு விளக்கு என சைக்கிளிங் வெறியர் ஒருவர் சாலைக்கு வருவதற்கு குறைந்தது
முப்பதாயிரம் செலவு செய்கிறார்கள்.

கார்பன் ஃபைபர் சைக்கிள்ல இருக்கற சேஃப்டி வேற எதுலயும் வராது தெரியுமா என்று
இன்னொரு கோஷ்டி. மல்லாக்க அடிச்சு விழுந்தப்புறம் சைக்கிளுக்கு காயம் ஆனால்
என்ன ஆகாவிட்டால் என்ன? கீழே விழுந்த பின் கை, காலைத் தடவிப் பார்த்துக்கொண்டு
சாலை ஓரத்தில் உட்கார்ந்திருப்பதற்கு எந்தக் கருமமாக இருந்தால் என்ன என்று
கேட்டுவிட்டால் காதைக் கடித்து விடுவார்கள்.

மிதிவண்டி இருக்கையை Saddle என்று சொல்லிக்கொள்கிறார்கள். வழக்கமாக குதிரை
மீது இருக்கும் சேணத்தைத்தான் saddle என்பார்கள். சைக்கிள் சீட்டு இவ்வளவு
சின்னதா இருக்குதே என்று அந்த மிதிவண்டி வெறியர்கள் கேட்கும்படி
சொல்லிவிட்டால் அவ்வளவுதான். ஏரோடைனமிக்ஸ், எர்கனாமிக்ஸ் என்று நம்மைக் கீழே
குந்த வைத்து ஒரு குச்சியை எடுத்து மண்ணில் படம் வரைந்து பாகம் குறித்து
வகுப்பு எடுத்துக் கொல்கிறார்கள்.

முன்பெல்லாம் சைக்கிள் சீட்டுக்கு பஞ்சு வைத்த உறை போடுவார்கள். இப்போது
சைக்கிள் வெறியர்கள் குண்டிக்கு அடியில் பஞ்சு வைத்த டவுசர் போட்டுக்கொண்டு
வருகிறார்கள். அதை எப்படி துவைச்சு காயப் போடுவீங்க என்று கேட்டதற்கு ஒருவர்
ஏதோ குறுக்கே ஓடிய நாயைப் பார்ப்பது மாதிரி பார்த்து முறைத்தார். சைக்கிளின்
சீட்டு அவ்வளவு சன்னமாகக் குறைந்தபட்ச cushion கூட இல்லாமல் வருகிறது. எதைக்
கேட்டாலும் ஏரோடைனமிக்ஸ் என்கிறார்கள்.

பாதுகாப்பு அம்சங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானதுதான். ஆனால் சைக்கிள்
வெறியர்களின் பாதுகாப்பு உலகம் முற்றிலும் hypocrite. தலைக்கவசம் ஒன்றை
ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பில் போட்டிருப்பார்கள். ஜாகிங் போகிறவர்களே 10 kmph
வேகத்தில் ஓடும்போது, 15 kmph வேகத்தில் சைக்கிள் ஓட்டுவதற்கு நிறைய
ஓட்டைகளுடன் கூடிய மண்டைக் கவசம் போட்டு வருகிறார்கள்.

ஆனால் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி அலுவலகம் செல்கையில் பைக்கில் ஹெல்மெட்,
காரில் சீட் பெல்ட் அணியாமல் 'விதின்னு ஒன்னு இருக்குது, அத யாரால மாத்த
முடியும்?' என்று கருத்து சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கட்டட வேலை செய்யும் ஆட்கள், பொறியாளர்கள் அணிந்திருக்கும் 200 ரூபாய்
ஹெல்மெட் சைக்கிள் வெறியர்களின் 2000 ரூபாய் ஹெல்மெட்டை விட பாதுகாப்பானது.
அதிலும் aeration, aerodynamics எல்லாம் இருக்கிறது. மிதிவண்டி ஹெல்மெட்
மாதிரி ஓட்டைகள் இல்லாததால் குறைந்தபட்சம் கீழே விழுந்தால் கபாலத்துக்குள் ஆணி
ஏறாமலாவது பாதுகாக்கும்.

விலை உயர்ந்த மிதிவண்டிகளில் mud guard எதுவும் இருப்பதில்லை. சிலவற்றில் ஒரு
பிளாஸ்டிக் அட்டை ஆடிக்கொண்டிருக்கும். லேசான மழைநீர், குடிதண்ணீர் குழாய்
உடைப்பைப் பார்த்தாலே இரண்டு காலையும் தூக்கிக்கொண்டு வித்தை காட்டுகிறார்கள்.
அந்த மட்-கார்டு ஏரோடைனமிக்ஸை பாதிக்கும், வண்டி எடை கூடும் என்கிறார்கள்.

பின்னால் இருந்து வரும் வண்டிகளின் வெளிச்சம் பட்டு ஒளிர்வதற்கு ஏதோ
துளியூண்டு ஒரு சிவப்பு பட்டையை ஒட்டி வைத்திருக்கிறார்கள். 3M reflective
sticker வாங்கி ஓட்டுவதற்குக் கூட இடமில்லை. எனவே அதற்கென ஒரு ஒளிரும் LED
விளக்கு வாங்கி சார்ஜ் போட்டு மாட்டிக்கொண்டு சுற்றுகின்றனர். தயாரிப்பாளர்களே
ஓர் எளிமையான விசயத்தை அவ்வளவு complicate செய்திருக்கின்றனர்.

'ஹைவேல போறப்போ அந்த flickering LED எவ்ளோ முக்கியம் தெரியுமா?' என்று ஒரு
அன்பர் விளக்கினார். முறைப்படி நெடுஞ்சாலைகளில் மிதிவண்டியில் செல்லக்கூடாது.
அணுகுச்சாலைகளில் (சர்வீஸ் ரோடு) மட்டும்தான் பயணிக்க வேண்டும். 'தம்ப்ரீ!,
மோட்டார் வெகிகிள் சட்டம் பத்தி சட்டம் பேசற பாத்தியா' என்றதும்
நிறுத்திக்கொண்டார்.

எட்டு கியர், டிஸ்க் பிரேக் என்று கலக்கு கலக்கினாலும் மிதிவண்டிக்கு நடுவில்
ஒரு சைடு ஸ்டேண்டு கொடுத்திருக்கிறார்கள். பக்கத்தில் நின்று தும்மினாலே அது
கீழே விழுந்துவிடுகிறது. அதனாலேயே எங்கு பார்த்தாலும் மரத்தில்,
மின்கம்பத்தில், சாலையோர முட்டுக்கல்லில் சாய்த்து வைத்துவிட்டு செல்பி
எடுக்கிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் சைக்கிளில் ஒரு நல்ல ஸ்டேண்டு போட்டுத்
தருவதில்லை.

சைக்கிளை பைக் என்று அமெரிக்கன் ஆங்கிலத்தில் சொல்லி குழப்பியடிப்பது
ஒருபுறம். இந்த பைக் வெறியர்களின் சைக்கிளில் கேரியர் என்பது ஆகவே ஆகாத ஒன்று.
குழந்தைகளை உட்கார வைத்து அருகிலுள்ள கடைக்குச் சென்றுவர, ஒரு செய்தித்தாளை
வாங்கி மடித்து வைக்க என்று பெயரளவுக்குக்கூட பின்னால் எதுவும் இருப்பதில்லை.
அதில் என்ன ஏரோடைனமிக்ஸ் பிரச்சினை வந்துவிடப்போகிறது?

எட்டு கியர்களை மாற்றி மாற்றி ஓட்டினால் நீண்ட தூரம் சென்றாலும் அலுப்பு
தெரியாதாம். பதினைந்து, இருபது கிலோமீட்டர் நீண்ட தூரம் என்று எப்படி முடிவு
செய்துகொள்கிறார்களோ.

தினமும் காலையில் குப்பை வாளியை எடுத்துக்கொண்டு மாநகராட்சி
குப்பைத்தொட்டிக்குச் செல்கையில் ஒரு அன்பர் கியர் மாற்றி மாற்றி
மிதிவண்டியில் பயணிப்பார். ஒருநாள் குப்பையைக் கொட்டிவிட்டு திரும்ப
வரும்போதும் அங்கேயே அவர் ஓட்டிக்கொண்டிருந்ததால் யாரையும் 'கவனிப்பதற்கு'
வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவரிடம் விளக்கம் கேட்டதற்கு ''இங்க
slope அதிகம் இருக்குதில்லையா, அதனாலதான் energy efficient-ஆ ride பண்றேன்''
என்றார். கோயமுத்தூர் டவுனுக்குள்ள அவ்வளவு பெரிய ஸ்லோப் இருக்குதா என்று
ஆச்சரியமாக இருக்கிறது.

ஐம்பது வயதுக்குக் கீழே இருக்கும்போது இருபது முப்பது கிலோமீட்டர் சைக்கிள்
ஓட்ட எட்டு கியர் தேவைப்படுகிறது என்றால் அந்த அளவுக்கு முட்டி கழண்டுவிட்டதா
அல்லது வீண் செலவு செய்ய நிறைய பணம் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

கார்களில் சைக்கிளை மாட்டிக்கொண்டு சுற்றும் வெறியர்கள் இன்னொரு வகை.
அண்மையில் பெங்களூரில் அத்தகைய ஆர்வலர் ஒருவரைப் பிடித்து செம்மத்தியாக
அபராதம் போட்டனர் போக்குவரத்து காவலர்கள். கார்களில் லக்கேஜ் எடுத்துச்செல்ல
கேரியர் மாட்ட அனுமதி உண்டு. ஆனால் சைக்கிள் என்பது ஒரு வாகனம் என்பதால் அதை
கார் மேலோ, பின்னாலோ மாட்டி எடுத்துச்செல்ல ஆடிஓ-விடம் ஆர்சி-யில் endorsement
வாங்க வேண்டும். காருக்குள் உள்ளே வைத்து எடுத்துச் செல்லலாம். ஆனால்
விபத்துக்குள்ளானால் காப்பீடு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை.

அடைமழை காலங்களில் எங்கள் கிராமத்தில் இரண்டு மாதங்கள் இட்டேறி நிரம்பி,
சாலையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். கிணறுகளுக்கு நீர்மூழ்கி மின் எக்கி
(மோட்டார்) வராத காலம் என்பதால் அவ்வப்போது விவசாயிகளும் மோட்டாரைக் கழற்றி
மேலே மாட்ட சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு மின்சாரம் இலவசம் என்பதால் தண்ணீரை
எடுத்து சாலையில் விடுவார்கள். பல தோட்டங்களுக்கு வண்டித்தடம் இருந்தாலும்
ஒற்றையடிப் பாதையில் மட்டுமே போய்வர முடியும்.

சில வசதியான பால்காரர்கள் மட்டுமே TVS50, பஜாஜ் M80 வண்டியில் வருவார்கள்.
மற்றவர்கள் எல்லாம் சைக்கிளில்தான் பால் எடுப்பார்கள். காலை மூன்று மணிக்கு
எழுந்து சைக்கிளில் பால்கேன்களைக் கட்டிக் கிளம்பினால் முதல் கறவையை நான்கு
மணிக்கு கறக்க ஆரம்பித்துவிடுவர். எட்டரை மணிக்கு கலெக்‌ஷன் வண்டி வரும்
இடத்தில் இறக்கும்போது சுமார் 60 - 70 லிட்டர் பாலை இறக்கி கேன்
மாற்றுவார்கள். மாலையும் இதே வேலை. காலையும், மாலையும் குறைந்தது 15 + 15
கிலோமீட்டர் பயணிப்பார்கள்.

கேரியரில் 50 லிட்டர் என்றால் முன்னால் 15+15 லிட்டர் கேன்களைத் தொங்கவிட்டு
பேலன்ஸ் செய்திருப்பார்கள்.

மழைகாலம், வெயில் காலம், காற்று என்று எந்த காலத்திலும் விதிவிலக்கு, விடுமுறை
கிடையாது. சாலைகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்போதும், ஒற்றையடிப் பாதைகளில்
சேறு, சகதி இருந்தாலும், கட்டுத்தறிகளில் மழைநீரும், மூத்திரமும் கலந்து
தினசரி பாதையின் தன்மை மாறினாலும், தென்னை மட்டைகள் விழுவது, பாம்புகள் டயரில்
சுற்றுவது, நாய் குறுக்கே ஓடுவது என எது வந்தாலும் ஒருநாள் கூட பால்கேனை கீழே
போட்டு, சாலையில் விழ மாட்டார்கள்.

இன்று கிடைக்கும் மழை கோட் போல அப்போது இல்லை என்றாலும், வண்ணமயமாக ரெயின்கோட்
போட்டுச் சென்றால் மாடு குண்டாவோடு சேர்த்து உதைத்துவிடும், கன்றுக்குட்டி
மிரண்டுவிடும் என்பதால் உரச் சாக்கு ஒன்றை மடித்து தலையில் மாட்டி ஒரு சரடு
போட்டு இடுப்பில் கட்டியிருப்பார்கள்.

இன்று hood வைத்த ஜாக்கெட் போட்ட சைக்கிள் வெறியர்கள் அதை மரத்தில் சாய்த்து
வைத்துவிட்டு 'hey, its drizzling na' என்று சொல்வதை பக்கத்தில் இருந்து
கேட்கும்போது 'அடிங்கொ###₹₹@₹#₹@₹#' என்று வாய் வரைக்கும் வந்துவடுகிது.

தெருவிளக்குகள் ஆங்காங்கே இருந்தாலும் பால்காரர்களுக்கு அது எந்தவிதத்திலும்
உதவாது என்பதால் ஒவ்வொரு சைக்கிளிலும் மில்லர் டைனமோவுடன் முகப்பு விளக்கு
கட்டாயம் இருக்கும்.

50 லிட்டர் பால், கேன்களில் எடை, mud guard, டயரில் உராயும் டைனமோ, மழைக்கு
மாட்டியிருக்கும் அங்கி என கரடுமுரடான சாலைகளில் தினசரி முப்பது கிலோமீட்டர்
பயணித்த பால்காரர்கள், ஊருக்குள் பாத்திரம் விற்க, ஐஸ் விற்க வருபவர்கள்
ஒருபோதும் aerodynamics, ergonomics, resistance training, endurance
practice, safety features of helmet and disc break, knee protection என்று
பேசி, சிக்கியவன் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவில்லை என்பது
நினைத்துப்பார்க்கவே நெகிழ்வாக இருக்கிறது.

அந்தக் காலம் சிறப்பாக இருந்தது, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்,
கிராமத்து அன்பு சாலைகளில் வழிந்து ஓடியது என்று பட்டிமன்ற பேச்சாளர்கள்
மாதிரி அங்கலாய்ப்பது இந்த பதிவின் நோக்கமல்ல.

Convenience factor என்பது எல்லாவற்றிலும் தேவைதான். ஆனால் ஒரு எளிமையான
விசயத்தை சிக்கலாக்கி, அதற்கு அள்ளிக்கொட்டி செலவு செய்வது, ஊதாரித்தனத்தை
நியாயப்படுத்துவதற்காக விளக்கங்கள் கொடுப்பது, அதை அறிவியல் என்பது தேவையற்ற
ஒன்று.

மற்ற எல்லா விளையாட்டிலும் பயிற்சியும், தேவையும் ஏற ஏறத்தான் உயர்தர கருவிகளை
நாடுவர். காலையில் நான்கு கிலோமீட்டர் வாக்கிங் செல்ல குழாயுடன் கூடிய தண்ணீர்
போத்தல், கார்மின் கைக்கடிகாரம், cross country running shoes எல்லாம்
போட்டுக்கொண்டு வந்தால் கோமாளி என்பார்கள். அதைச் சமாளிக்க my life, my rules
என்றோ, அல்லது I'm what I'm என்றோ அனத்திக்கொண்டிருக்க வேண்டியதாகிவிடும்.

கார் உட்பட, எந்த கருவிகள் வாங்கினாலும் தேவையே இல்லாமல் option-களை
அள்ளிக்கொடுப்பார்கள். ஆனால் மிதிவண்டியில் மட்டும் விலை ஏற, ஏற அனைத்தையும்
உருவி விட்டு ஒரு முக்கோணத்தில் இரண்டு டயர்களை மாட்டி நல்ல இலாபத்தில்
விற்கிறார்கள்.

உயர்தர சைக்கிள் வெறியர்கள் ஒருவர் கூட அன்றாட வேலைகளுக்கு, அருகில் உள்ள
கடைகளுக்கு, மாதத்தில் ஒருநாள் அலுவலகத்துக்கு மிதிவண்டியில் செல்வதில்லை.
சாதாரண உடைகளில் இயல்பாக அத்தகையவர்களை ஒருநாளும் சாலையில் பார்க்க முடியாது.

போட்டிகளில் ஓட்டுபவர்களுக்கு ஒவ்வொரு 5% resistance குறைந்தாலும் வெற்றி
வாய்ப்புக்கு மிக நல்லது. ஆனால் சும்மா சைக்கிள் ஓட்டுபவர்கள்
ஆரோக்கியத்துக்காகத்தான் என்றால் அதில் கொஞ்சம் resistance இருந்தால்தான் என்ன
குறைந்துவிடப் போகிறது?

ஐம்பதாயிரம் ரூபாய் சைக்கிளில் டீலர் மார்ஜின் 30%, டிஸ்டிரிபியூட்டர்
மார்ஜின் 15%, தயாரிப்பாளர் இலாபம் 25% போக, அசல் விலையில் 18% ஜிஎஸ்டி
கழித்தால் அதன் உண்மையான விலை எவ்வளவு வரும்?

என்னதான் இன்று EMI கிடைக்கிறது என்றாலும், சைக்கிளைத் தவணை முறையில் கடனில்
வாங்கி எந்த ஆரோக்கியத்தை நிலை நாட்டுகிறார்கள், யாரிடம் எதை prove பண்ண
நினைக்கிறார்கள் என்பது சைக்கிள் வெறியர்களுக்கே வெளிச்சம்.

எந்த விலையாக இருந்தாலும் கார், பைக் வாங்குவதன் பயன்பாடு, சமூக காரணிகள்
முற்றிலும் வேறானது. ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் இருபது கிலோமீட்டர் ஓட்ட
வாங்கப்படும் உயர்தர சைக்கிள்கள் உடல் ஆரோக்கியம் என்ற பெயரில் செய்யப்படும்
ஊதாரித்தனத்தின் அடையாளம் மட்டுமே.

இத்தகைய ஆட்களே கார்ப்பரேட் கம்பெனிங்க brand-ங்கிற பேர்ல தேவையில்லாதத நம்ம
தலைல கட்டி விடறாங்க, peer pressure-னால கண்ட கருமத்தை வாங்கிப் போடறோம்,
minimalism-ங்கிறது அந்த காலத்துல நம்ம முன்னோர்கள்கிட்ட வாழ்வியல் முறையாவே
இருந்தது சார், எல்லாத்தையும் இந்த மாடர்ன் எஜுகேஷன் அழிச்சிடுச்சு சார் என்று
வாட்சப்பிலும், வாய் வழியாகவும் எல்லா இடங்களிலும் பரப்புரை செய்துகொண்டே
இருக்கிறார்கள்.

A lot of bicycle lovers can be seen all over the city now. With colourful
costumes, they go somewhere with skull Armor. Restaurants and teapots stand
in front and take the present. They stand in a crowd and talk in English.

They are the kind of people who train to compete in cycling. 5% of them do
not engage in closets if exceeded. Let’s leave them running and planning
with a goal.

Sudden cycling fanatics make us feel bad. Cycling can reduce belly fat,
jogging to the knees is safe, safer for the environment, better for outdoor
exercise, and enjoy nature.

These sudden bicycle fanatics are arguably the hallmarks of a culture of
extravagance and unnecessary consumption.

The starting price for a twenty to thirty kilometre ride is an eight-gear
bicycle, a helmet for two thousand rupees, a camera, a special dowser, an
overcoat, a shoe, a Garmin watch to measure how many kilometres we have
driven, a special bag for bicycles, and a special water bottle for a
bicycle. , A red light flashing behind the name of accessories, as a home
light costs at least thirty thousand for a cycling fanatic to get on the
road.

Another question is whether the safety of a carbon fibre bicycle is
anything to go by. The cyclist was injured when he fell off the mallet but
what if not? After falling down, the hand will rub the leg and bite the ear
if asked what it is like to sit on the side of the road.

The bicycle seat is called Saddle. The saddle is usually the saddle on the
horse. That's all if those bicycle fanatics were to ask if the bicycle
ticket was so iconic. Aerodynamics, ergonomics, they put us down and take a
stick and draw a picture on the ground and take a class on the part.

Before, they would put a cotton pad on the bicycle seat. Now cyclists are
putting a cotton dowser under the pot. Someone stared at me like I was
looking at a dog that ran across something to ask how to wash it off. The
seat of the bicycle is so thin that it comes without even a minimal
cushion. Whatever you ask is called aerodynamics.

Security features are the most important of all. But the safety world of
cyclists is completely hypocrite. The helmet is designed in aerodynamics.
Joggers wear skulls with lots of holes to ride at 10 kmph and 15 kmph.

But when I go home and change clothes and go to the office without wearing
a helmet on the bike or a seat belt in the car, 'There is something, who
can say that?' They go around saying that.

The 200 rupee helmet worn by construction workers and engineers is safer
than the 2000 rupee helmet of cyclists. It also has aeration and
aerodynamics. The bicycle helmet model has no holes to at least protect the
nail from climbing into the skull if it falls down.

Expensive bicycles have no mud guard. Some have a plastic card shaking.
They do the trick by lifting both legs when they see a light rainwater or
drinking water pipe break. They say that the mud-card will affect the
aerodynamics and the weight of the vehicle.

The lights of the carriages coming from behind are stuck to a red bar with
something dripping on them. There is not even room to buy and drive a 3M
reflective sticker. So, they buy an incandescent LED lamp and charge it.
The makers themselves have complicated a simple matter so much.

'Do you know if the flickering LED is important when it comes to highways?'
Anbar explained. Do not ride bicycles on highways properly. Travel only on
access roads (Service Road). He also stopped short of saying, 'Thambree!
motor vehicle law paragraph law talks patia'.

Eight gears, disc brakes and a side stand in the middle of the bike.
Standing on the side and sneezing makes it fall down. That's why they take
selfies wherever they look, leaning on a tree, on a pole, on a roadside
stumbling block. Fifty thousand rupees does not make a good stand on a
bicycle.

On the one hand it is confusing to say in American English that a bicycle
is a bike. Being a carrier on the bike of these bike fanatics is therefore
something that is not. There is nothing even nominally behind the children
to sit down and go to the nearest store, buy a newspaper and fold it. What
aerodynamics problem is going to come up in it?



If you drive eight gears alternately, you will not feel bored even after
going long distances. How do they decide that the distance is fifteen,
twenty kilometres long?

He picks up the trash can every morning and rides a bicycle with an amber
gear as he goes to the corporation trash can. One day when he came back
from the garbage dump, he made sure that he did not come to 'take care' of
anyone because he was driving there and asked him to explain, "Isn't there
a lot of slope here, that's why I got an energy efficient ride." One
wonders if there is such a big slope within Coimbatore Town.

If you need eight gears to ride a twenty to thirty kilometre bicycle when
you are under the age of fifty I don’t know if you have knocked that much
off or have a lot of money to spend in vain.

Another type of fanatics who ride bicycles in cars. In Bangalore, one such
activist was recently arrested and fined by the traffic police. Carriers
are allowed to carry luggage. But since a bicycle is a vehicle, you have to
buy endorsement in RC from Audio to get it stuck in the back of the car.
You can put it inside the car and take it away. But no insurance is likely
to be available in the event of an accident.

During the rainy season, our village was flooded for two months and the
road was flooded. Since it is not the time for submersibles (motors) to
come to the wells, from time to time the farmers are too lazy to remove the
motor and put it on the road as the electricity is free. Many gardens have
a driveway but can only be reached by a single track.

Only a few comfortable milkmen will come in the TVS 50, Bajaj M80 cart.
Others take milk on a bicycle. If he gets up at three in the morning and
rides his bicycle to the falcons, he will start milking the first milk at
four. About 60-70 litters of milk will be unloaded and the can will be
replaced when the collection cart dies at the arrival place at eight
o'clock. The same work in the evening. They will travel at least 15 + 15 km
in the morning and evening.

If the carrier is 50 litters, the front 15 + 15 litter cans are hung and
balanced.

Rainy season, sunny, windy season is no exception. Even when the water is
running on the roads, the single-lane roads are muddy and muddy, the looms
mix with rainwater and urine and the daily path changes, the coconut husks
fall, the snakes crawl on the tires, and whatever comes across the dog will
never put the balcony down and fall on the road.

Although not like the raincoat available today, the colourful raincoat
would have kicked the cow along with the kunda, and the calf would have
been stunned by the fact that it was wrapped in a sack and tied around the
head with a string around the waist.

Today, cyclists with hooded jackets lean against a tree and hear 'hey, its
drizzling na' coming from the side and saying 'Adingo ### ₹₹ @ ₹ # ₹ ₹ #'
up to the mouth.

Home lighting with the Miller Dynamo is mandatory on every bicycle as it
does not help dairymen in any way even if the street lights are dim.

50 litters of milk, weight in cans, mud guard, tire rubbing dynamo, milkman
who travelled thirty kilometres daily on rough roads such as rain coat,
those who come to sell utensils and ice in town never sell aerodynamics,
ergonomics, resistance training, endurance practice, safety features of
helmet and disc Speaking of break, knee protection, it is flexible to think
that the trapped person did not pour lead into the ears.

It was not the purpose of this post to make the bar speakers model that
time was better, people lived happily, and village love flowed down the
roads.

Convenience factor is a necessity in everything. But to complicate a simple
matter and spend a fortune on it, to give explanations to justify
extravagance, is to say that science is something unnecessary.

In all other sports the training and need are almost as high as the
high-quality tools sought. A bottle of water with a tap to go for a four
kilometre walk in the morning, a carmine watch, cross country running shoes
are all called clowns. To deal with it you have to end up with my life, my
rules, or I'm what I am.

They offer options without the need to buy any equipment, including a car.
But only the price of the bicycle goes up, the climb is all figured out and
two tires stuck in a triangle and sold at a good profit.



Not a single high-end cyclist rides his bicycle to work, to nearby shops,
or to the office one day a month. Naturally in casual clothes such people
can never be seen on the road.

Every 5% reduction in resistance for race drivers is very good for the
chance of winning. But if cyclists are just for health, what is going to
decrease if there is little resistance in it?

Fifty thousand rupees on a bicycle go 30% of the dealer margin, 15% of the
distributor margin, 25% of the manufacturer's profit, 18% of the original
price after deducting GST, what is its actual price?

Although EMI is available today, it is up to the cyclists to decide what
health status they want to prove by borrowing the bicycle in instalments.

The use of buying a car or bike at any cost, social factors are completely
different. But the high-quality bicycles that are bought to drive twenty
kilometres three days a week are only a sign of the extravagance that is
being done in the name of physical health.
These are the kind of people who would rather buy the concept of peer
pressure to get rid of the unnecessary branding of corporate company
branding. Minimalism was the way of life of our ancestors at that time,
sir. All these had been destroyed by the modern education is the view
expressed in WhatsApp and vociferously as pleadings everywhere. KR IRS 51120

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor_pb8JfqMCuHWXOFJU%3D_zgdJUTgcsrUtA2cRVqQDMfqw%40mail.gmail.com.

Reply via email to