Pranam
  True and the contents sing about Tiruneermalai Kolli mountain etc also
since the mangalasasanam is as if nayaka nayaki bhava verse in Tamil. திருமங்கை
தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டார். மகள் படும் பாட்டைத் தாய்
முறையிடுவது போல எம்பெருமானிடம் முறையிடுகிறார். எம்பெருமானே என்மகள் நின்மீது
கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை பித்துப் பிடித்து அலைகிறாள். சொல்லொனாக்
காமமுற்று திகழ்கிறாள். அழகு பொருந்திய தடக்கைகள் கொண்ட ஆயனாக வந்த
கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிற தென்கிறாள். திவ்ய
தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். பல திவ்ய
தேசத்து எம்பெருமான்களை நினைத்துப் பார்க்கிறாள். திடீரென அவளுக்கு
புட்குழியெம்பெருமானின் நினைவு வருகிறது திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப்
பாடுகிறாள். அக்கணமே திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. திருநீர்
மலைக்குப்     போக மாட்டேனோ என்று     பொருமுகிறாள். கொல்லிமலைப்பாவை
    போன்றல்லவா     இவள்     இருக்கிறாள் (கொல்லிப்பாவை - தேவ மகளிருக்குச்
சமமாக கொல்லி மலையில் இருந்த ஒரு பெண் காண்போரை யெல்லாம் மோகிக்கச் செய்தவள்)
கோமள வதனமும், கொடியிடையும் மழைமேகம் போன்ற கூந்தலில் அழகிய மலர்களைச் சூடி
எழில்கொஞ்சும் தோள்களைக் கொண்டு கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள்
பொருட்டு நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் மகள் பொருட்டு
தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை கேட்டு மங்களாசாசனம் செய்துள்ள இப்பாடலில்
குறிக்கப்பட்ட புட்குழி என்னும் இத்தலம் காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில்
உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார்
2 பர்லாங் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில்
அமைந்துள்ள இந்த பாலு செட்டி சத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம்.
சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள்
உண்டு.
   2         இதே தல வரலாறு மற்றொரு திவ்ய தேசமான “புள்ளம் பூதங்குடி”
திருத்தலத்திற்கும்
கூறப்படுகின்றது. இது குறித்து “வைணவ மஹா பெரியவா்” பண்டித சிரோண்மணி தஞ்சை
என். எஸ். தாத்தாச்சாரியாா் பின்வருமாறு விளக்கமளித்துள்ளாா்.

“தலபுராணங்கள் பெரும்பாலும் பிரம்மாண்ட புராணம் கூறும் தகவ லாகும். அவைகளில்
பெரும்பாலும் நமக்கு ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே புராணம் பல
தலங்களுக்கும் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்தல வரலாற்றினை அந்தந்த தலத்துடன்
தொடா்புறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதில் அதிக ஆராய்ச்சி கூடாது,”
என்று கூறியுள்ளாா். அவரது கருத்தையே நாமும் பின்பற்றுவோம்.திருப்புட்குழி
திருத்தலத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானது திருநாமம் “விஜயராகவப் பெருமான்”
ஆகும். இலங்கை வேந்தனை வென்று “ஜெயம் கொண்ட ராகவன்” என்பதால் இப்பெருமானுக்கு
“விஜயராகவன்” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இப்பெருமான் நான்கு
திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் “விஜய கோடி விமானத்தின்”
கீழ் உள்ள கருவறையில் எழுந்தருளியுள்ளாா்.இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள்
உள்ளன. பாண்டிய மன்னா்களும் விஜயநகரப் பேரரசா்களும் இத்திருத்தலத்திற்கு அளித்த
கொடைகள் குறித்த விபரங்களை இக்கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.இத்தல
கல்வெட்டுகளில் எம்பெருமானான இவரைப் “போரேற்று நாயனாா்” என்றும்
இத்திருக்கோயிலை “சித்தன்ன வேலி திருப்புட்குழி நாயனாா் கோயில்” என்றும்
கூறப்பட்டுள்ளது. “மன்னு மரகதத்தை புட்குழியெம் போரேற்றை” என்றும்
மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளாா் திருமங்கையாழ்வார். இப்பெருமானுக்கு வட
மொழியில் “ஸமர புங்கவன்” என்ற திருநாமம் உள்ளது. இத்திருநாமத்தையே “போரேறு” என்று
தூயதமிழில் குறிப்பிடுகின்றாா் ஆழ்வாா்.. பெருமானுக்கு வலது பக்கம் இருக்க
வேண்டிய ஶ்ரீதேவி இடது புறத்திலும், இடது புறம் இருக்க வேண்டிய ஶ்ரீபூமி தேவி
வலது புறத்திலும் எழுந்தருளியுள்ளனா். ஶ்ரீதேவி இடது புறத்தில்
“திருவிடவெந்தை” திருத்தலத்திலும்
எழுந்தருளியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.புஷ்கரணியாகும்
தீா்த்தக்குளம் “கிருத்ர
ஸரஸ்” என்றும் வழங்கப்படுகின்றது. இப் புஷ்கரணியில் புனித நீராடி, விஜய ராகவப்
பெருமானை வழிபட தீராத நோய்களெல்லாம் தீா்ந்து ஆரோக்யம் மேம்படும் என்பது இங்கு
வழிபடும் அடியவா்களின் நம்பிக்கையாகும். படுத்தி, அரிய இந்த தமிழ்ப்
பாசுரத்தைப் பாடியிருக்கின்றார்.எம்பெருமான் மீது கொண்ட தீராத காதல் நோயால்
தன் மகள் படும்பாட்டை ஒரு தாயின் நிலையிலிருந்து முறையிடுவது போல
எம்பெருமானிடம் முறையிடுகின்றார் திருமங்கையாழ்வார்.“எம்பெருமானே! என்
மகளுக்குத் தங்கள் மீது கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை. அதனால் பித்துப்
பிடித்து அலைகின்றாள். அழகு பொருந்திய தடக்கைகள் கொண்ட ஆயனாக வந்த
கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே அவளது உள்ளம் துடிக்கின்றது
என்கிறாள். இந்த நேரத்தில் பல திவ்யதேசத்து எம்பெருமான்களின் பேரழகை எல்லாம்
சொல்லிச் சொல்லி மாய்கின்றாள். பல திவ்யதேசத்து எம்பெருமான்களை நினைத்துப்
பார்க்கிறாள். திடீரென அவளுக்குத் “திருப்புட்குழி”  எம்பெருமானின் நினைவு
வருகின்றது. திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகின்றாள். அக்கணமே
திருநீர்மலை எம்பெருமா னின் நினைவு வருகிறது. திருநீர்மலை க்குப் போகமாட்டேனோ
என்று பொருமுகிறாள்.கோமள வதனமும், கொடியிடையும், மழை மேகம் போன்ற கூந்தலில்
அழகிய மலர்களைச் சூடி எழில் கொஞ்சும் தோள்களைக் கொண்டு கொல்லியம்பாவை போன்ற
பேரழகு பொருந்திய என் மகளான இவள் பொருட்டு நீ என்ன நினைத்துக்
கொண்டிருக்கிறாய்,” என்று தன் மகளுக்காகத் தாயொருத்தி கேட்பதுபோல திருமங்கை
ஆழ்வார் திருப்புட்குழி எம்பெருமானை மங்களாசாசனம் செய்து
மகிழ்ந்துள்ளாா்.இப்பாசுரத்தில்
திருவிடவெந்தைப் பெருமானையும் குறிப்பிடுகின்றாா் ஆழ்வாா்.

அத்வைதத்தில் நம்பிக்கை கொண்ட யாதவப் பிரகாசா் வேதாந்தத்தை அறிவுப் பூா்வமாக
விளக்கி வந்தாா். ஆனால் ராமானுஜரோ திருக்கச்சி நம்பிகளின் வழியைப் பின்பற்றி
பக்தி மாா்க்கத்தில் நம்பிக்கை கொண்டாா். யாதவப் பிரகாசரின் அறிவு வழியைக்
காட்டிலும் திருக்கச்சி நம்பிகளின் இதய வழியில் ஈா்க்கப்பட்டாா் ராமானுஜா்.  தாம்
அருளிச் செய்த “நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில்” பிள்ளைப் பெருமாள்
ஐயங்காா் கீழ்க்கண்ட பாடலால் திருப்புட்குழி எம்பெருமானை வணங்கிப்
போற்றுகின்றாா். “மால்வேழ்கு மரவும் மாயையும் வெற்பும் கடலும் மேல் வீழப்
படையும் விட்டுப் போய்ப்−பாலன் நெருப்புட்குழி குளிர நின்றதும் கேட்டதோா்
திருப்புட்குழி
யமலன் சீா்” −என்று மகிழ்ந்துள்ளாா். பொருள்:−பக்தன் பிரகலாதனைக் கொல்வதற்காக
இரண்யன் பெரிய மதயானைகளை (மால்வேழம்) அனுப்பினான். பாம்புகளை ஏவினான். எண்ணற்ற
மாயைகளைச் செய்ய வைத்து அச்சுறுத்தினான். மலை மீதிருந்து உருட்டச் செய்தான்.
கை, கால்களைக் கட்டிக் கடலில் எறியச் செய்தான். படைக்கலன்களால் தாக்கச்
செய்தான். பெற்ற அன்னையின் கரத்தினாலேயே விஷத்தையும் கொடுக்கச் செய்தான்.
ஆனால், இவைகளனைத்தும் பயனின்றிப் போய்விட்டது. இறுதியில் தீக்குழி அமைத்து
எரிகின்ற தணலில் இறக்கினான். ஆனால் அப்போதும் அந்நெருப்பு அவனுக்கு இதமான
குளிா் போன்று இருந்தது. இத்தனைக்கும் பிரகலாதன் பெற்றிருந்த பலம்
“நாராயணா” என்னும்
மந்திரம் மட்டுமே. இதை யெல்லாம் கேட்டும் “நாராயணன்” நாம மகிமையை அறியாமல்
உள்ளனரே இந்த மானிடா்கள். அன்று பிரகலாதனுக்காக நெருப்புக்குழியைக் “குளிா்ந்த
தடாகம்” போன்று மாற்றிய ஶ்ரீமந் நாராயணன் அன்றோ “திருப்புட்குழியில்” உள்ளான்.
இப்பெருமானது சீா்மைகள் எளிதில் சொல்லத் தக்கவோ? என்று திருப்புட்குழியில்
எழுந்தருளியுள்ள “விஜயராகவன்” திருமலரடியை நாடுங்கள் என்று இத்தலத்திற்குப்
பெருமை சூட்டுகின்றாா் பிள்ளைப் பெருமாள் ஐயங்காா்

3     I wrote that putkuzhi and Jatayu are incongrent  K R IRS 15221

On Sun, 14 Feb 2021 at 14:39, Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> Pranam
>     *1 மங்களாசாசனம்     திருமங்கையாழ்வார்*
>
> அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் *புலங்கெழு*
> *பொருநீர்* *புட்குழி* *பாடும்* *போதுமோ* நீர்மலைக் கென்னும் குலங்கெழு
> கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந்
> திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
>
> rāmasya vanavāsaṅ ca kṣayaṅ daśarathasya ca৷৷4.55.21৷৷  janasthānavadhaṅ
> caiva vadhaṅ caiva jaṭāyuṣaḥ.
> haraṇaṅ caiva vaidēhyā vālinaśca vadhaṅ raṇē৷৷4.55.22৷৷  rāmakōpaṅ ca
> vadatāṅ harīṇāṅ bhayamāgatam.
>
> 2 Overtaken by the fear of death, the monkeys kept talking about Rama's
> exile into the forest, Dasaratha's death, *destruction of demons in
> Janasthana,* *the death of Jatayu*, abduction of Sita, Vali's death and
> Rama's anger.
>
> 3  sa saṅviśadbhibahubhirmahīdharō  mahādrikūṭapratimaiḥ plavaṅgamaiḥ.  
> babhūva
> sannāditanirdarāntarō bhṛśaṅ  nadadbhirjala dairivō lbaṇaiḥ৷৷4.55.23৷৷
>
> while the numerous monkeys, resembling *peaks of high mountains were
> roaring,* it resounded through the *mountain caves*. It was like the
> sound of the stormy thunderclouds.
>
>
> 4  ityārṣē śrīmadrāmāyaṇē vālmīkīya ādikāvyē kiṣkindhākāṇḍē
> pañcapañcāśassargaḥ৷৷  kandarādabhiniṣkramya sa vindhyasya
> mahāgirēḥ.upaviṣṭānharīndṛṣṭvā hṛṣṭātmā giramabravīt৷৷4.56.3৷৷
>
> *Coming out of the cave of the great mount Vindhya, Sampati was glad* to
> see the monkeys seated there and said to himself:
>
> tadicchēyamahaṅ śrōtuṅ vināśaṅ vānararṣabhāḥ৷৷4.57.5৷৷ bhrāturjaṭāyuṣastasya
> janasthānanivāsinaḥ.
>
>
> 5  'O bulls among monkeys I desire to hear about *the death of my brother
> Jatayu, who was dwelling at Janasthana.  *
>
> ēvaṅ gṛdhrō hatastēna rāvaṇēna balīyasā.  saṅskṛtaścāpi rāmēṇa gataśca
> gatimuttamām৷৷4.57.18৷৷
>
>   'Thus the vulture was slain by Ravana who was stronger. *Cremated by
> Rama and his last rites performed, he reached the supreme heavenly abode.
> (It was the luck of Jatayu, unlike Dasaratha, to be cremated by Rama.)*
>
> *6  Tirumangai alvar period is 776 AD.  Jatayu cremation is in 7000 BCE to
> 5000 BCE. The mountain, Caves, Janastanam , sea facing east seen from the
> cave, peaks of mountain, so airy, Vindya, Sampati and Jatayu as birds
> reside only on mountain, can raise and fight only from the mountain when
> Ravana is flying thro vindya satpura mountains shows that it is not
> Kanchipuram where the Jatayu was cremated. *
>
> *   7   Mangai alvar sings “Pulangezgu poruneer putkuzhi padum podumo- “
> ezhu poru neer putkuzhi= shall mean water raising and entering the tunnel
> viz ; so Jatayu is highly unconnected ; when I was there about 2 decades
> back I asked the temple priest also who could not enlighten me better. *
>
> *K R 14221*
>
> On Sun, 14 Feb 2021 at 00:53, 'venkat giri' via iyer123 <
> [email protected]> wrote:
>
>> *Respected Sir/s,*
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>> * திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில்
>> ஒன்றாகும் Thiruputkuzhi is a small temple town in Tamil Nadu, India. It is
>> situated about 7 miles west of Kanchipuram and half a kilometre from
>> Baluchetti Chattiram which lies on the Chennai - Vellore highway. The place
>> is known after the Vijayaraghava Perumal temple.Thiruputkuzhi-Sri
>> Vijayaraghava Perumal Temple is one of the 108 Divya Desams of Lord Maha
>> Vishnu situated 15kms away from Kanchipuram. This is one of the Thondai
>> Nadu Divya Desams closely related to the great epic Srimad Ramayanam. Here
>> Lord Perumal appears as Sri Vijayaraghava Perumal, as the Moolavar in
>> Amarntha Thirukkolam facing East direction. Thaayar here is named
>> MaragathaValli, has her own temple. Thirumangai Alwar wrote 2
>> pasurams.Special Rituals/ Prarthana performed in templeIn Sri Vijayaraghava
>> Perumal Temple, ladies who doesn't have children, gives the dhal, (Paruppu)
>> to Madapalli (place where the Lord’s food is prepared). After it’s given,
>> the dhal is soaked inside water and it is tied around their stomach and
>> said to sleep. After waking up from their sleep, if the seed buds, it is
>> confirmed that they will give birth to a child.Info on the deity – Specific
>> to the temple deityIn Sri Vijayaraghava Perumal Temple sthalam, the
>> Moolavar is Vijaya Raghava perumal. He holds Jatayu in his hands. Both the
>> Naachiyaars, are found on both the sides, but in opposite manner. Moolavar
>> in found in sitting position facing East direction.  Prathyaksham for
>> Jadaayu (Eagle) and Thaayar is Maragathavalli Thayaar. She has her own
>> temple.Sri Devi to the Left of the Lord- A unique featureSri Vijaya Raghava
>> Perumal is seen in a sitting posture, having the bird (Jataayu) on his
>> thigh. Not able to bear the smell caused by the final rites and because of
>> the flames that arose out of the cremation of Jaatayu; Sri Devi Thaayar is
>> said to have moved to the other side of the Lord. At this temple, the
>> Goddess is seen to the left of the Lord Vijayaraghava with her head
>> slightly turned in the Lord’s direction (in all Divya Desams, Sri Devi
>> Thaayar is seen to the right of the Lord). Also, the Thaayar Sannidhi is to
>> the left of the Lord. In all Divya Desams, the Thaayar Sannidhi is always
>> to the right of the Lordதிருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில்
>> காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும்
>> சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு
>> மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள்
>> (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.திருப்புட்குழி ஸ்ரீ
>> விஜயராகவன் தெப்போத்ஸவம் 2ம்
>> நாள்.https://www.tamilbrahmins.com/data/video/10/10259-01038dc0e7305108a9f2da3b2098efa7.mp4
>> <https://www.tamilbrahmins.com/data/video/10/10259-01038dc0e7305108a9f2da3b2098efa7.mp4>RegardsV.SridharanTrichy*
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "iyer123" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to [email protected].
>> To view this discussion on the web visit
>> https://groups.google.com/d/msgid/iyer123/1166189854.146247.1613244226377%40mail.yahoo.com
>> <https://groups.google.com/d/msgid/iyer123/1166189854.146247.1613244226377%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
>> .
>>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop4xrYph0n5YBhwL5c-pLr0QpGhaL2QzTuCGEiygfhH%3DQ%40mail.gmail.com.

Reply via email to