🙏

On Fri, 26 Feb 2021 at 15:37, subra manian <[email protected]> wrote:

> பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன்
> கடோத்கஜன்.கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிகா. மகனுக்கு
> தாயே பயிற்சி அளித்து,சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள். சிவ பெருமான்
> பார்பாரிகாவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.
>
> முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.இரண்டாவது
> அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்கை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி
> விடும்.மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்துவிடும்.மூன்று
> அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்துவிட்டு  திரும்பிவிடும்.
>
> இதுதவிர அக்னிபகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு
> பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக
> விளங்கினான்.
> பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த
> பார்பாரிக்கா போரைக்காண ஆவலுற்றான்.
>
> தாயிடம் ஆசிப்பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான். புறப்படும்
> முன்,போரில் பலவீனமாக இருப்பவர்கள் பக்கம் சேர்ந்து, அவர்களை வெற்றி
> பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான்.பார்பாரிக்காவின் திறமை
> அறிந்திருந்த கண்ணன், அவனை நேரில் காண விரும்பி,பிராமண வேடம் தரித்து,
>
> அவனை காணச் சென்றார்.வழியிலேயே அவனைப் பார்த்து தடுத்து நிறுத்தினார்.ஒரு
> பிராமணர் தன்னை நிறுத்துவது கண்டு பார்பாரிக்காவும் குதிரையை விட்டு
> இறங்கினான்."என்ன பிராமணரே என்னை ஏன் வழிமறித்தீர்"என்று கேட்டான்
> பார்பாரிக்கா.
>
> “போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு,ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து
> கொள்ளும்,ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன்"என்றான்
> கிருஷ்ணன்."பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர்
> நடக்க உள்ளது,அதில் கலந்து கொள்ளப் போகிறேன்”என்றான் பார்பாரிக்கா.
>
> "யார் பக்கம் சேர்ந்து போரிடப்போகிறாய்"என்று வினவினான் கிருஷ்ணன்."அங்கு
> போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை
> ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா."நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா”
> என வினவினான் கிருஷ்ணன்.
>
> "நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான்
> பார்பாரிக்கா."இதோ இந்த அரசமரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க
> முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.
>
> மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்குத் தெரியாமல் தன்
> காலடியில் போட்டுக் கொண்டான்."இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு
> மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரிக்கா.அம்பு மரத்தில் இருந்த
> இலைகளை கோர்த்துக்கொண்டு,
>
> கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது."இது என்ன விபரீதம்.அம்பு
> என் பாதத்தை துளைக்க முற்படுகிறதே” என்றான் கிருஷ்ணன்."பிராமணரே உன் காலடியில்
> ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,உடனே பாதத்தை எடுத்துவிடும்” என்றான்
> பார்பாரிக்கா.
>
> கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து
> புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக்கோர்த்தது.அவனின்
> பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர்,பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் இவனது
> அம்பு தேடிக்கண்டு பிடித்துக் கொன்றுவிடும் என்று உணர்ந்தார்.
>
> ”உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.
> "எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே"என்றான் பார்பாரிக்கா."உன்
> தலையை கொய்து விடவேண்டும் என்று விரும்புகிறேன்”என்றான் கிருஷ்ணன்.சற்றே
> திகைத்து விட்ட பார்பாரிக்கா,
>
> ”நீர் யார்,உண்மையை சொல்லும்.நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல”என்றான்.பகவான்
> கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.
> கேசவா,நாராயணா,மாதவா, கோவிந்தா,மதுசூதனா...என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை
> துதித்தான்.
>
> ”பார்பாரிக்கா,நீ மாவீரன்.உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின்
> விளைவுகளை நீ அறியவில்லை. பாண்டவர்களுக்கு 7 அக்ஷொனி படைகளும்,கெளரவர்களுக்கு
> 11 அக்ஷொனி படைகளும் இருப்பதைப்பார்த்து,நீ பாண்டவர்கள் பக்கம் சேர்வாய். உன்
> பராக்கிரமத்தால் கெளரவப்படை தோற்கத் துவங்கும்.
>
> அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக
> நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய். பாண்டவர்கள் தோற்கத் துவங்குவார்கள்.முடிவில்
> பாண்டவ, கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.
> இது தர்மத்திற்கு நல்லதல்ல.ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.
>
> உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக இது சாத்தியமல்ல.ஆகவே
> தர்மத்தின் பொருட்டு நீ உயிர்த்தியாகம் செய்து விடு”என்றான்
> கிருஷ்ணன்.பார்பாரிக்காவும் இசைந்தான்.
>
> கிருஷ்ணர் கூறலானார்,"பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்ஷன்.
> முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த
> நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக்
> காப்பாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.
>
> அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை என்றும், நீ ஒருவனே போதும்
> என்றும் கூறினாய்.இதைக் கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று,நீ பூமியில் மகத்தான
> சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும்போது,நீயே
> என்னால் கொல்லப்பட்டு,முதல்பலி ஆகிவிடுவாய் என்றும் உன்னை சபித்தார்.
>
> அதன் காரணமாகவே, இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் போர்
> துவங்கும் முன்,ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.உன்னை மிஞ்சிய மாவீரன்
> இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.கிருஷ்ணனின் சக்ராயுதம்
> பார்பாரிக்காவின் தலையைக் கொய்தது.
>
> பரந்தமனின் பரமபதம் கிடைத்துவிட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி
> அடைந்த பார்பாரிக்கா,"கிருஷ்ணா நான் போரினைக்காண மட்டும் மிகவும் ஆவலுடன்
> இருக்கிறேன்” என்றான்.பார்பாரிக்காவின் தலையை,போர் பூமியைப் பார்த்து நின்ற
> ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.
>
> போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.
> தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.
> கிருஷ்ணரிடம் வந்து, “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில்
> வென்றோம் என்று கூறு” என்றனர்.
>
> எனக்கு எப்படி தெரியும்.நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு,அவன்
> சொன்னபடியெல்லாம் சென்று
> கொண்டிருந்தேன்.போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை
> பதம் பார்த்து கொண்டிருந்தன. இந்த நிலையில் என்னால் வேறு எதையும்
> பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.
>
> ”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.ஒரு
> ஆள் முழுப்போரையும் பார்த்திருக்கிறான். அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான்
> கிருஷ்ணன்.
> "யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார்
> கிருஷ்ணர்.
>
> ”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான்
> கிருஷ்ணன்."பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.
> "பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம்.யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம்
> என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.
>
> ”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை
> விழும்போதும்,அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது”என்றான்
> பார்பாரிக்கா. பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
>
> "எல்லாம் மாதவன் செயலே"🙏🏻 😍🌹
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/678305867.134709.1614334017419%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/678305867.134709.1614334017419%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqSGbQQEOgAYeUASXUuxgwH3gEOoArE1eKYggPxOB%2Brpw%40mail.gmail.com.

Reply via email to