Pranam A SATIRE ON THE VOTERS OF TN EQUALLY APPLICABLE TO EVERY STATE
மோடிஜிக்கும் அமித்ஷாஜிக்கும் ஓர் வேண்டுகோள். நீங்கள் அகில இந்திய அளவில் பார்க்கும் பார்வை வேறு. தமிழ்நாட்டில் அதே பார்வையை செலுத்தக் கூடாது. காரணம் இங்குள்ள மக்களின் மனநிலை அப்படி. கர்ம வீரர் காமராஜர் செய்யாத நல்ல திட்டங்கள் உண்டா? அவரும் அவரின் அமைச்சர்களும் கோடிகோடியாகவா சம்பாதித்து சுவிஸ் வங்கியில் போட்டார்கள்? இல்லையே? அவரை அவரின் சொந்த தொகுதி யிலேயே அதுவும் ஓர் கல்லூரி மாணவனிடம் மண்டியிடவைத்த மக்கள் என் தமிழ் மக்கள். தேர்தல் சமயத்தில் அவர்கள் சென்னையில் குடியிருந்த வாடகை வீட்டை போகஸ் மூலம் போட்டோவை பிடித்து ஏழை பங்காளனின் வீட்டை பார்த்தீர்களா? என்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு சுவர் விடாமல் ஓட்டிய போஸ்டரை உண்மை என்று நம்பிய கூட்டம் அவரை மண்ணைகவ்வ செய்தது. அந்த உத்தமனின் மனம் அந்நேரம் என்னபாடுபட்டிருக்கும் சற்று சிந்தித்து பாருங்களேன். அவர் தோற்றதற்கு அவர் கலங்க வில்லை. தர்ம தேவதை கலங்கி நின்றாள். இங்கு நல்லதை செய்பவர்களை எளிதில் மறந்து விடுவர். சென்னை வாழ் மக்கள் குடிக்க தண்ணீருக்கு இரவும் பகலுமாக அலைந்தபோது அந்த தாகத்தை தீர்த்துவைக்க அம்மையார் வீராணம் திட்டத்தை கொண்டுவந்து தவித்த வாய்க்கு தண்ணீரை தந்தாரே அந்த நன்றி கடனுக்காவது ஒரு பத்துபேரையாவது ஜெயிக்கவைத்திருக்கலாமே? செய்தார்களா சென்னை வாசிகள்? காவிரி பிரச்சனையே இந்த தேர்தலில் இல்லாத அளவிற்கு அணை கட்டுகள் எல்லாம் நிரம்பின இயற்கை தந்த கொடையால். எடப்பாடியார் நீர் மேலாண்மை வாயிலாக நல்லது தானே செய்தார். விவசாயிகளுக்கு அவர் செய்த துரோகமென்ன? ஆனால் தஞ்சை டெல்டா பகுதியில் அவரை தண்ணி காட்டி விட்டனரே !? இதைவிட கொடுமை என்னவென்றால் இந்து மக்கள் பெருவாரியான அதுவும் புண்ணிய சேஷ்திரங்களில் வாழும் மக்கள் அங்கு குடிகொண்டு அருள் பாவிக்கிற இறைவனை கருப்பர் கூட்டங்கள் எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்தியும். திருச்சி கும்பகோணம் மதுரை காஞ்சிபுரம் போன்ற திருத்தலத்தில் அதிமுக வையும் அதன் தோழமை கட்சிகளையும் மண்ணைகவ்வ செய்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன நிலையில் இருக்கீறிர்கள் என்று விளங்கவில்லை யே? ஸ்ரீ ரங்க பெருமாளை பெரியார் இருக்கும் இடத்தில் வைத்து விட்டு. பெரியாரை தூக்கி கோவிலில் வைத்துவிடலாமா ? இவ்வளவுக்கும் காரணம் அவர்களின் கையில் உள்ள தொலைக்காட்சிகள். பத்திரிக்கை துறைகள். நான் எப்போதுமே பாலிமர் நியூஸை மட்டும் பார்ப்பேன். அது கூட தேர்தல் சமயத்தில் திசை மாறி சென்றதை பார்த்தேன். அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடியாரை மட்டும் காட்டுவர். அங்கு குவிந்துள்ள மக்கள் கூட்டத்தை காட்ட மாட்டார்கள். அதே நேரத்தில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் அலைகடலென திரண்டிருக்கும் கூட்டத்தை நாலாபுறமும் சுழன்று காட்டிவிட்டு பிறகு ஸ்டாலினை காட்டுவர். இதை பார்க்கும் மக்கள் பார்த்தீரா எடப்பாடிக்கு கூட்டமே இல்லை. ஸ்டாலினுக்கு அப்பப்பா எவ்வளவு கூட்டம் என்று பேசிக் கொண்டதை பார்க்க முடிந்தது. அதே போல் புதிய தலைமுறை பழைய தலைமுறை போன்றவை நடத்தும் விவாத மேடை காரி துப்பும் மேடையாக இருக்கும். நெறியாளர் சொறியாளராக பேசுவர். சுப்ரீம் கோர்டில் நடக்கும் வாத பிரதிவாதம் தோற்று விடும். காங்கிரஸ் ஆட்சியில் அதாவது 2014 வரை இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்த மீனவர்கள் சுமார் 650 பேர்கள் இருக்கும். அதேபோல் இவர்களின் ஆட்சியில் இலங்கை தமிழர்கள் ஏறத்தாழ 1.50 லட்சம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று எந்த மீன வரும் குண்டடிப்பட்டு சாகவில்லை. மூன்று தூக்கு தண்டனைப்பெற்ற மீனவர்களின் உயிரை மீட்டது மோடி அரசு. ஆனால் அங்கே நல்ல மனிதர் பொன்னாரை மண்ணாராக்கினார்கள். எனவே நீங்கள் எந்த மாநிலத்திற்காவது ஏன் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரிக்கு கூட நல்லது செய்யுங்கள். இங்கு திரும்பி கூட பார்க்காதீர்கள். அப்படி நல்லது செய்வதாக இருந்தால் குறைந்த பட்சம் 32 டிவி சேனல்களை ஆரம்பிக்கவும். அதில் 12 சேனல்களில் நீங்கள் செய்த நல் திட்டங்களையும். நாட்டை துண்டாட எதிர் நாட்டவர்களை விட இங்குள்ள பல களவாணிகளின் முகத்திரையை கிழித்தெறிய உங்கள். மீதமுள்ள 20 டிவி களில் 5 டிவி களில் இந்து ஆன்மீகத்தையும் ஜோதி தொலைக்காட்சியைப்போல் ஆன்மீகத்தை ஊட்டுங்கள்.மீதமுள்ள 15 தொலைக்காட்சிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று வீதம் இரவு 10 மணிவரை... 1) கமலாவின் கல்யாணம். 2) கள்ளக் காதலுடன் ஓடிய கமலா. 3) கணவனை வெளுத்து வாங்கிய கல்யாணி. 4) கருவாடு மீனானது. 5) காமாட்சி கருநாகமானாள்... 6) காதல் மலரந்தம்மா.. 7) மாமியாரை மடக்கிய மாப்பிள்ளை 8) மாமியாருக்கு பிறந்த குழந்தை யாருடையது..? 9) மாமனார் எப்படி மாமியாரானார்.!!! 10) கல்லும் இசை பாடும்.. 11) கலங்காத மனமும் கரையும். 12) காற்றுக்கு எதிர் திசையில்... 13) காற்றினிலே ஆக்ஸிஜன். 14) ஜாக்கி ஜானும் ஜானகியும்.. 15) வாடாத மலர்கள்.. இப்படி சமுதாய சிந்தனை தூண்டும் தொடரை நீங்கள் மாறிமாறி ஒளிப்பரப்பி பெண்கள் சாப்பிடுவதற்கு கூட போகா வண்ணம் இப்படிப்பட்ட தொடரை ஒளிப்பரப்பாகும். மற்ற எந்த சேனல்கள் பக்கம் மக்களின் பார்வை செல்லா வண்ணம் நாடக தொடர்கள் அமையவேண்டும். குறிப்பாக தொடர்கள் யாவும் குடும்பத்தின் ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் இருக்கவேண்டும். எந்த இடத்திலும் தர்மம் நியாயத்தை உணர்த்தக்கூடாது. விவாத மேடையில் உங்களுக்கு சார்பாக மூன்று பேரை நியமித்து எதிர் கட்சி காரர்களை அதுவும் எதுவும் பேசத்தெரியாத களிமண்ணாக பார்த்து பேச வைத்து காலாய்க்கவும். அப்படி வந்தவர் விவரம் தெரிந்தவராக இருந்தால் நெறியாளர் அவர் பேசும்போது குறுக்கே பேசி அவரின் கருத்துக்கள் கேட்பவருக்கு புரிந்து விடாதபடி மற்ற மூவரை வைத்து காலாய்க்கவும். இப்படி நீங்கள் செய்தால்தான் வரும் தேர்தலில் கணிசமான ஏன் ஆட்சியையும் பிடிக்கலாம். இதெல்லாம் சரி பட்டு வராது என்று கருதினால் காமராஜரின் கதிதான் இங்கு... என்ன புரிஞ்சிதா ஜீ.... Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx Google Translation An appeal to Modiji and Amit Shahji. The view you see on an all-India level is different. The same view should not be paid in Tamil Nadu. Because the mood of the people here is like that. Are there any good plans that Karma Veerar Kamaraj did not do? Did he and his ministers make billions and put them in a Swiss bank? Isn't it? My Tamil people are the people who made him kneel before a college student in his own constituency. During the election, did you take a photo of the rented house where they lived in Chennai with a focus and see the house of the poor partner? The crowd that believed that the poster that drove a wall in every town and every street was true made him cringe. Let me think about what the mind of that Uttaman was like at that time. He was not upset by his appearance. The Dharma angel was agitated. Those who do good here are easily forgotten. When the people of Chennai wandered day and night for drinking water, Ammaiyar Veeranam came up with a plan to quench their thirst and gave water to their dying mouth. Could it be that ten people have won over that debt of gratitude? Did the people of Chennai? The Cauvery problem is due to the gift of nature, which is full of dams to an extent not present in this election. Edappadiyar did good by himself through water management. What was his betrayal of the farmers? But did they water him down in the Tanjore delta area !? What is even more horrible is that the majority of the Hindu people, as well as the people living in the holy shrines, drink as much blasphemy as the black congregations can. Trichy Kumbakonam Madurai Kanchipuram If the AIADMK and its allies have been grounded in a revision like that, you do not understand what you are in? Leave Sri Ranga Perumala at Periyar's place. Can Periyar be thrown away and kept in the temple? The reason for this is the televisions in their hands. Press Departments. I always watch only polymer news. I even saw it change direction during the election. That means only Edappadi will be shown during the election campaign. The people gathered there will not show the crowd. At the same time, Stalin's campaign will show the crowd swirling around and then Stalin. People who see this have never seen Edappadi crowded. Stalin could see how much Dad was talking about the crowd. As well as the new generation will be the spit on the debate platform run by the old generation as well. The narrator will speak as a narrator. The debate in the Supreme Court will fail. Under the Congress rule, until 2014, there will be about 650 fishermen shot dead by the Sri Lankan military. Similarly, about 1.50 lakh Sri Lankan Tamils were massacred during their rule. But today no fish has been shot and killed. Modi government rescues three executed fishermen But there the good man buried the gold. So do good even to the neighboring state of Pondicherry which is why you belong to any state. Don't even look back here. Start at least 32 TV channels if you want to do so well. And the good projects you did on 12 channels. Yours to rip off the face of so many thieves here than the adversaries to tear the country apart. Feed Hindu spirituality on 5 out of the remaining 20 TVs as well as Jyoti TV. 1) Kamala's marriage. 2) Kamala who ran away with fake love. 3) Kalyani who bleached her husband. 4) The embryo is a fish. 5) Kamatchi Karunakamanal ... 6) காதல் மலரந்தம்மா .. LOVE BLOSSOMED 7) The groom who folded the mother-in-law 8) Whose child is born to the mother-in-law ..? 9) How did the father-in-law become the mother-in-law !!! 10) Singing stone and music .. 11) The restless mind will also melt. 12) In the opposite direction to the wind ... 13) Oxygen in the air. 14) Jackie John and Janaki .. 15) Unripe flowers .. Boca Color is such a series that even the women who alternately broadcast the social thought-provoking series like this can eat it. No other channels page should be set in color series to go public view. The series in particular should be such as to distort the unity of the family. Nowhere should dharma realize justice. Appoint three people on your behalf in the debate and make the opposition party look like they have nothing to speak about. If such a person knows the details, the moderator should cross-talk when he speaks and leave the other three so that the listener does not understand his comments. Only if you do this can you come to power in the coming elections. If you think that all this will not work out, here is the story of Kamaraj ... What Purinchita ji .... As Received KR IRS 11521 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorm%2Bq4tJRwJF3xbbPXprMMNzzj7t5Jq1W_D_MOx5GXeCw%40mail.gmail.com.
