- திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
*மூலவர் : வரதராஜப்பெருமாள் (கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன்). * *தாயார் : திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி பூதேவி). * *மூர்த்தி : கருடாழ்வார், நம்மாழ்வார்.* *தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி* *வழிபட்டோர் : கருடாழ்வார், சந்திரன்.* *பாடியோர் : திருமங்கையாழ்வார்.* *பூஜை விவரம் : காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை, * * மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.* *திருவிழா : வைகுண்ட ஏகாதசி.* *அருகிலுள்ள நகரம் : சீர்காழி.* *கோவில் முகவரி : அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில்,* *திருமணிக்கூடம் - 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்* [image: temple history in tamil] *தலச்சிறப்பு : பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 37 ஆவது தலம் ஆகும். இத்தலத்தின் உள்ளே சென்றதும் பலிபீடம், கருடாழ்வார் சன்னதி உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் மூலவர் வரதராஜப் பெருமாள் தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி ஸ்ரீதேவியும், இடது புறத்தில் பூமா தேவியும் காட்சியளிக்கிறார்கள். அருகிலேயே உற்சவமூர்த்தி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் தை அமாவாசை மறு தினம் திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் 11 பெருமாள்களும் எழுந்தருளும் கருட சேவை உற்சவம் நடைபெறும். 11 பெருமாள்களில் ஒருவரான திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் திருநாங்கூர் கருட சேவைக்கு எழுந்தருள்வார். தீராத நோய்கள் எல்லாம் திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.* *தல வரலாறு : தக்கனுக்கு 27 மகள்கள் இருந்தனர். சந்திரன் தக்கனின் 27 மகள்களையும் திருமணம் செய்து கொண்டார். சந்திரன் தன் 27 மனைவியிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் வாக்கு கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த அன்புடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையான தக்கனிடம் முறையிட்டனர். தக்கன் கோபம் கொண்டு சந்திரனுக்கு "உன் அழகும், ஒளியும் தினமும் குறையட்டும்”, எனச் சாபம் கொடுத்தார். சாபத்தின் காரணமாக முழுச் சந்திரன் நாளுக்கு நாள் தேயத் தொடங்கினான். சாபம் நீங்கப் பல தலங்களுக்குச் சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். இத்தலத்தில் பெருமாள் வரத ராஜனாகக் காட்சி தந்து சந்திரனின் சாபம் நீக்கி வரமளித்தார்.* *பிரம்மன் தன் மனம் பரிசுத்தம் ஆவதற்குக் காஞ்சியில் யாகம் ஒன்று செய்தார். அப்போது அவர் மனைவியான சரஸ்வதியைத் தவிர்த்து மற்ற இரு மனைவிகளான சாவித்ரி, காயத்ரி ஆகியோருடன் யாகம் செய்தார். இதை அறிந்த சரஸ்வதி சினம் கொண்டு வேகவதி என்ற நதியாக மாறி அந்த யாகத்தைத் தடுக்க முயற்சித்தார். எனவே பிரம்மா விஷ்ணுவிடம் வேண்டினார்.* *விஷ்ணு யதோத்தகாரி யாக வந்து பிறந்த மேனியாக நதியின் குறுக்கே சயனித்துக் கொண்டார். பிரம்மாவின் யாகமும் இனிதே நிறைவேறியது. பின் யாகத்தில் இருந்து பெருமாள் தோன்றினார். பின்னர் பிரம்மா அத்தி மரத்தில் சிலை ஒன்று செய்து இங்கு பிரதிஷ்டை செய்தார். வேண்டிய வரம் தருபவர் என்பதால் அவர் வரதராஜர் எனப் பெயர் பெற்றார்.* *இக்கோவிலின் இராஜகோபுரம் 96 அடி உயரம் உள்ளது 7000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம். பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோவில். மண்டபத்தின் வடக்குப் புறத்தில் இரண்டு நீராழி மண்டபம் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தில் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபத்தில் மிகப் பெரிய அத்தி மரத்தில் ஆன பழைய அத்தி வரதராஜப் பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மக்கள் தரிசனத்திற்கு வெளியே கொண்டு வந்து வழிபாடு செய்யப்படுகிறது.* *இத்தலத்தில் தங்கப் பல்லியாக இருக்கும் சூரியனையும், வெள்ளிப் பல்லியாக இருக்கும் சந்திரனையும் தரிசனம் செய்தால் நம் மீது பல்லி விழுந்தால் உண்டாகும் தோஷம் விலகுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.* *தமிழகத்தில் எங்கும் காண முடியாத அளவில் மிகப்பெரிய சுதர்சன ஆழ்வார் திருமேனி ,காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கிக் காட்சியளிக்கின்றார். வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை பக்தர் வேதாந்த தேசிகரிடம் பொருள் வேண்டினார் .அவர் அந்த ஏழைக்கு பெருந்தேவித் தாயாரை வேண்டிப் பாடல் பாடினார். அவர் பாடலில் மகிழ்ந்து தாயார் தங்க மழை பொழிய வைத்தாள். இதனால் பக்தர்கள் தங்கத் தாயார் என்று அழைக்கின்றனர்* . *youtube:* *https://www.youtube.com/watch?v=BEn0_cp8wWI <https://www.youtube.com/watch?v=BEn0_cp8wWI>https://www.youtube.com/watch?v=7k_ookEDpLs <https://www.youtube.com/watch?v=7k_ookEDpLs>* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bo%2BODJnusM_S%2BOf%2Bz6q5fk8pohcNwemMsQOnigWPjnCmg%40mail.gmail.com.
