Pranam பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டமான "காசி விஸ்வநாதர் Corridor" திட்டம் பற்றி சில தகவல்கள் ⬇️
வெறும் 2700 சதுர அடி பரப்பில் சுருக்கப்பட்டிருந்த காசி விஸ்வநாதர் ஆலயம் இப்போது 5 லட்சம் சதுர அடி பரப்பில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது கோவிலின் விரிவாக்கத்தின் போது பல சிறிய கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சிறிய கோவில்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. காசி விஸ்வநாதர் தரிசனம் முடிந்த பிறகு இந்த கோவில்களையும் நம்மால் காண இயலும். முகலாயர்களின் படையெடுப்பின் போது சீரழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் இப்போது பழைய முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்த பிரம்மாண்டமான ஆலயம் டிசம்பர் மாதம் 13ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சாதுக்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்படும். இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் கோவில்களில் இருந்து அர்ச்சகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஒரு மாத காலத்திற்கு கோவிலில் உற்சவங்கள் நடக்கும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. சாதுக்களின் மாநாடு ஒன்றும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் விரிவாக்கத்திற்காக சுமார் 400 வீடுகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டன. புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இந்த ஆலயம் தற்போது இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவுக்கு பெரியதாக இருக்கும். 600 கோடி ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்படும் இந்த ஆலயத்தில், பக்தர்கள் தங்கும் வசதியும் மருத்துவமனை ஆகிய வசதிகளும் உள்ளன. இனி ஆலயத்தில் இருந்து நேரடியாக கங்கை நதிக்கு செல்ல இயலும். கங்கா ஸ்நானம் முடிந்தபிறகு அங்கிருந்தே ஆலயத்தை பக்தர்கள் தரிசிக்க இயலும். வருடத்திற்கு ஏழு கோடி பக்தர்கள் விஸ்வநாதரை தரிசிக்க காசி வருகிறார்கள். இப்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விட்டதால் அதிக அளவு பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலயத்தில் இருந்து நம்மால் கங்கா நதியை இப்போது நன்றாகப் பார்க்க இயலும். காசி விஸ்வநாதருக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் நேரடியாக கங்கா நதியில் கலக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. Some information about Prime Minister Narendra Modi's dream project "Kasi Viswanathar Corridor" project The Kasi Vishwanathar Temple, which was reduced to just 2700 square feet, now stands on 5 lakh square feet. During the expansion of the temple many small temples were discovered. These small temples were also rebuilt. We can also see these temples after the completion of the Kasi Vishwanathar Darshan. The Kasi Vishwanathar Temple, which was destroyed during the Mughal invasion, now regains its old significance. This magnificent temple will be inaugurated by the Prime Minister of India Narendra Modi on December 13 in the presence of the Sadhus. Priests from 12 Jyotirlinga temples in India attend the festival. All the Chief Ministers of the ruling BJP are expected to attend this grand event. The Uttar Pradesh government has announced that festivities will be held at the temple for a month after the consecration. It has been announced that a conference of the Sadhus will be held after the consecration. About 400 houses were acquired by the government for the expansion of the Kasi Vishwanathar Temple. The reconstructed temple is now large enough to accommodate two lakh devotees. The temple will be renovated at a cost of Rs 600 crore and will have accommodation and hospital facilities for the devotees. It is now possible to go directly to the Ganges River from the temple. Devotees can visit the temple from there after bathing in the Ganges. Seven crore devotees visit Kashi every year. It is expected that a large number of devotees will gather now that the reconstruction has been done. From the temple we can see the river Ganga better now. The anointing theertham for Kasi Vishwanath is facilitated by mixing directly into the river Ganga. KR IRS 71221 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqg%2Bh6qoyGAw_exmgrfqXiCfo_siu_SnjneH5QFn_K%2BZQ%40mail.gmail.com.
